கோலிவுட்: ஸ்டூடியோ!
வெற்றிமாறன் சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானது.
வெற்றிமாறன் சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானது.
By டெல்டா அசோக்
Vishwanathan
சிம்புவுடன் இணைந்த விஜய் சேதுபதி!
வெற்றிமாறன் சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானது. இதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்துப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற 'மாஸ்க்' பட விழாவில், 'கடந்த வாரத்தில் அரசன்' படப்பிடிப்பு தொடங்கிவிட்டது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில், சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டது. வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் எனத் தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம், வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டது. படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தனது எக்ஸ் பக்கத்தில், 'மனிதம் இணைகிறது... மகத்துவம் தெரி
கிறது'' எனக் குறிப்பிட்டு, இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு 'வடசென்னை' படத்தின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்கிறது.
மதத்தின் பெயரால் உயிரைப் பறிக்கக்கூடாது ஏ.ஆர். ரஹ்மான்!
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. தனுஷ், கிரித் சனூன் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகளில் இப்போது ரஹ்மான் ஈடுபட்டு வருகிறார். யூடியூபர் நிகில் காமத்துக்கு அளித்த பேட்டியில், அவர் அனைத்து மதங்களையும் மதிப்பது குறித்தும், சூஃபி மதம் குறித்தும் பேசியிருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர், திலீப் குமார். 23 வயதில் அவர் மதம் மாறிய பிறகுதான் ஏ.ஆர். ரஹ்மான் எனப் பெயரை மாற்றிக் கொண்டார் என்ற தகவல் பலரும் அறிந்ததே. அந்தப் பேட்டியில் ஏ.ஆர். ரஹ்மான், 'இஸ்லாம், ஹிந்து மதம், கிறிஸ்தவம் என மூன்றையும் நான் படித்திருக்கிறேன். எனக்கு மதத்தின் பெயரால் உயிரைப் பறிப்பது, தீங்குச் செய்வது மட்டும் பிரச்னை. மக்களை எண்டர்டெயின் செய்வது எனக்குப் பிடிக்கும்.
நான் மேடையில் நின்று பாடும்போது அது ஒரு கோயில் போன்ற உணர்வை எனக்குத் தரும். அங்கே பல மதத்தவரும், பல மொழிகளில் பேசும் மக்களும் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள்'' என்றவர், சூஃபிசம் குறித்து, 'நம்முள் உள்ள ஆசை, பேராசை, பொறாமை என அனைத்தும் மறைந்து போக வேண்டும். அப்போதுதான் அகங்காரம் அழிந்து, கடவுள் போல ஒரு தெளிவான நிலைக்கு நாம் வர
முடியும். நாமெல்லாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றினாலும், அந்த நம்பிக்கையின் உண்மையான நேர்மையே முக்கியம். அதுதான் மனிதர்களை நல்ல செயல்களுக்கு இட்டுச் செல்கிறது'' எனப் பேசியிருக்கிறார்.
ஏ.ஐ. எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளில் இப்போது கீர்த்தி சுரேஷ் களமிறங்கிவிட்டார். தற்போது அப்படத்துக்காக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் எடிட்டுகள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ் பேசுகையில், 'இப்போது பெரிய பிரச்னை ஏ.ஐ.தான்.
அது நமக்கு வரமாகவும் இருக்கு. சில சமயங்களில் அழிவை உண்டாக்கும் விஷயமாகவும் இருக்கு. தொழில்நுட்பங்கள் மனிதர்கள் கண்டுபிடித்த விஷயம். ஆனா, அது இன்னைக்கு நம்மையே மீறி எங்கேயோ போகிற மாதிரி இருக்கு. சமூக வலைதளப் பக்கங்களில் பார்க்கும்போது, நான் இந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு என்னையே யோசிக்க வைக்கிற அளவுக்கு ரியலாக இருக்கு.
சமீபத்தில் ஒரு படத்தோட பூஜையில் நான் தப்பான போஸ் கொடுத்த மாதிரியான புகைப்படத்தைப் பார்த்தேன். நான் அப்படியான போஸ் கொடுக்கவே இல்லை. இது எங்க போயிட்டு இருக்குனு தெரியல. அதனால அவங்களுக்கு என்ன லாபம்னு தெரியல. இது காயப்படுத்தும் விஷயமாக இருக்கு. ஒவ்வொரு முறையும் சமூக வலைதளப் பக்கங்களில் வர்ற விஷயங்களுக்குப் பயம் வருது. இன்னைக்கு ஏ.ஐ. மேல பயம் வந்திருக்கு. ஒவ்வொரு விஷயம் வளரும்போது, பாதிப்புகளும் வளர்ந்துகிட்டு இருக்கு.
எனக்கு ரீல்ஸ் பார்க்கிற பழக்கம் இருக்கு. அது எனக்கே என்கிட்ட பிடிக்காத ஒரு விஷயம். அதில் சிலவற்றை என்னுடைய கணவருக்கு அனுப்புவேன். அவர் அதை ஏ.ஐ.னு கண்டுபிடிச்சிடுவார். அப்புறம், கமெண்ட்ஸ்ல பார்க்கும்போதுதான் அது ஏ.ஐ.னு எனக்குத் தெரிய வருது'' எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது