2012-ஆம் ஆண்டு சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட் மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் 'மதகஜராஜா'.
சில பிரச்னைகளால் கடந்த 12 ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்தப் படம் ஒரு வழியாக பொங்கல் பண்டிகைக்கு வெளியாகியுள்ளது. 'மதகஜராஜா' படம் எப்படி பல வருடங்கள் கிடப்பில் இருந்ததோ அதேபோல மொத்த படப்பிடிப்பும் முடிந்து டீசர், ட்ரெய்லர்கள் வெளியாகி ரிலீஸ் தேதி அறிவித்தும் பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் ரிலீஸ் ஆகாத தமிழ்ப் படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
துருவ நட்சத்திரம்
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. 2016- ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ஓவர் பட்ஜெட், கால்ஷீட் பிரச்னை எனப் பல பிரச்னைகளால் வெளியாகாமல் இருக்கிறது. கடந்த வருடம் இப்படம் வெளியாகும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பும் வந்தது. ஆனால் அப்போதும் வெளியாகவில்லை.
நரகாசூரன்
2018 -ஆம் ஆண்டில் கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்த படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றனர்.
கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் வெளியாகாமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 2020-இல் நிச்சயம் வெளியாகிவிடும் எனப் படக் குழு அறிவிப்பு செய்தார்கள். ஆனால் வெளியாகவில்லை. இந்த வருடமும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பார்ட்டி
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், ஷாம், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி, நாசர் எனப் பலரும் நடித்த படம் 'பார்ட்டி'.
கரோனா பொது முடக்கக் காலகட்டத்துக்கு முன்னதாக ஃபிஜி தீவில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 2020-இல் ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
முழுக்க தீவில் படப்பிடிப்பு நடத்தியதால், அங்குள்ள அரசு மானியம் கொடுப்பார்கள் என்பதால், முழுப்படபிடிப்பையும் அங்கே நடத்தினார்கள். ஆனால் கரோனா பொது முடக்கம் வந்துவிட்டதால், அந்நாட்டு அரசு மானியத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டது.
இந்த நிலையில் படத்தை வெளியிட்டுவிட்டால் மானியத் தொகை கிடைக்காது என்பதால் படத்தை வெளியிடாமல் இருந்தது.
கரோனா பொது முடக்கம் முடிந்து சில வருடங்கள் ஆனாலும் படம் வெளியிடுவது தொடர்பாக படக்குழு இன்னும் எதுவும் அறிவிக்கவில்லை.
எங் மங் சங்
2018 -ஆம் ஆண்டில் பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அர்ஜுன் இயக்கிய படம் 'எங் மங் சங்'. பிரபுதேவா 'தேவி' படத்தில் நடித்தபோது, கேட்ட கதை இது. ஆர்.ஜே.பாலாஜி, 'கும்கி' அஸ்வின் எனப் பலரும் நடித்துள்ளனர்.
இந்தக் கதையில் பிரபுதேவா குங்ஃபூ மாஸ்டராக நடித்திருக்கிறார். பிரபுதேவாவின் அப்பாவாக தங்கர் பச்சான் நடித்திருக்கிறார். சில பொருளாதார சிக்கல்களால் இன்னமும் இப்படம் வெளிவராமல் இருக்கிறது.
இதேபோல அரவிந்த் சாமியின் 'வணங்காமுடி', அருண் விஜய்யின் 'வா டீல்', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', விஜய் ஆண்டனியின்
'அக்னிச் சிறகுகள்' எனப் பல படங்கள் வெளியாகாமல் கிடப்பில் இருகின்றன.
சதுரங்க வேட்டை 2
2014 -ஆம் ஆண்டில் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை இயக்கினார் எச். வினோத். அந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதையடுத்து, இரண்டாம் பாகம் 2017- இல் உருவானது. நிர்மல் குமார் என்பவர் இயக்கிய இந்தப் படத்துக்கு எச்.வினோத் கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
அரவிந்த்சாமி, த்ரிஷா நடித்திருக்கின்றனர். படத்தை கடந்த அக்டோபர் 7-இல் வெளியிடப் போவதாக அதிகாரபூர்வமாக படக் குழு அறிவித்திருந்தது. ஆனால் சில பல காரணங்களால் கிடப்பில் இருக்கிறது.
இடம் பொருள் ஏவல்
2014-ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் 'இடம் பொருள் ஏவல்' படம் உருவானது.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்திருந்தன. இப்போது வரை படம் தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டாக்சிக் டீசர்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!
சுந்தர் சி - விஷால் - ஹிப்ஹாப் தமிழா கூட்டணி! புருஷன் பட புரோமோ!

ஒருவழியா... துருவ நட்சத்திரம் அப்டேட்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

