உலகில் எண்ணற்ற நதிகள், ஆறுகள் ஓடுகின்றன. இவற்றில் சுத்தமான, அசுத்தமான நதிகளை அறிவோம்.
நதிகள் மாசுபட்டதற்கு நகரங்களின் வளர்ச்சியும், தொழிற்சாலைகளும்தான்!
தேம்ஸ் நதி :
இங்கிலாந்தின் தேம்ஸ் நதியை 'லண்டனின் இதயம்' என அழைப்பர். லண்டன் மாநகரின் குடிநீர்த் தேவையில் மூன்றில் இரு பங்கை இதுதான் வழங்குகிறது. 346 கி.மீ. ஓடுகிறது. இது உலகின் மிக அழகான நதிகளில் ஒன்றாகும்.
தாரா நதி:
மாண்டி நீக்ரோவில் உள்ளது. 'ஐரோப்பாவின் நகை' என அழைப்பர். யுனெஸ்கோ பாரம்பரிய தளங்களில் ஒன்று. கைப்படாத, பள்ளத்தாக்கில் அடியில் எடுப்பாக ஓடும் நதி. ஸ்படிகம் போல் தெளிவான நீர்.
டோர்ன் நதி:
சுவீடன், பின்லாந்து ஆகிய இரண்டு நாடுகளின் எல்லையாக இருப்பதால், சுத்தத்தில் அக்கறை எடுத்து பராமரிக்கப்படுகிறது.
செயிண்ட் குரோயிக்ஸ் நதி:
அமெரிக்காவில் ஒரு காலத்தில் கடுமையாக மாசுபட்டிருந்த நதியாக இருந்தது. இன்று படுசுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. இங்கு விலங்குகளும் உண்டு. பொழுதுபோக்கு இடங்களும் உண்டு. ஆனாலும் சுத்தம், தூய்மை மக்களைக் கவர்ந்திழுக்கிறது.
த்வாகி நதி:
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள இந்த நதியை 'உம்ங்கோட் நதி' எனவும் அழைப்பர்.
இதனை சுற்றி இயற்கை அழகு நிறைந்திருக்கிறது. படகு சவாரியும் உண்டு . ஆனாலும் நதியின் சுத்தம் பராமரிக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தேடி வருகின்றனர்.

Rivers
கங்கை நதி:
இந்தியாவின் புண்ணிய நதியாக, பக்தர்கள் நீராட்டு செய்கின்றனர். மறுபுறம் நகரங்களின் கழிவுகள், தொழிலகங்களின் சாயங்கள், அசுத்த நீர்கள் ஒரு பில்லியன் கேலன் அளவில் இணைகின்றன. பலன் புனித நீர் பல இடங்களில் மாசுபடுகிறது.
சிட்டாரம் நதி:
இந்தோனேஷியாவின் சிட்டாரம் நதியில் ஜவுளித் தொழிற்சாலைக் கழிவுகள், குப்பைகள், நச்சு ரசாயணங்கள், மூலக் கழிவுகள் நதியை மாசு பட்ட நிலைக்கு கொண்டு சென்று விட்டன.
பாசிக் நதி :
பிலிப்பைன்ஸில் உள்ள இந்த நதி மணிலா வழியாகச் செல்கிறது. இது வீடுகள், தொழிற்சாலைகளின் கழிவுகள் சேர்க்கப்பட்டு மிகவும் மாசுபட்டு விட்டது. கழிவுகள் அகற்றபட்டு வந்தாலும், இன்னும் ஏராளமான சவால்கள் அப்படியே உள்ளன.
புரி கங்கா நதி :
வங்க தேசத்தின் டாக்கா நகருக்கு மிக முக்கியமானது. வீடுகள், தொழிற்சாலைகள் கழிவுகள் எல்லாம் சங்கமமாவது இதில்தான். ஏராளமான தோல் பதனிடப்படும் தொழிற்சாலை கழிவுகள் காரணமாக, நீர் நச்சுத்தன்மையை அடைந்துள்ளது.
யமுனா நதி:
இந்தியாவின் கங்கையின் துணை நதி. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், தொழிலகக் கழிவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் சீர்செய்ய இயலாத நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தர்ப்பையின் தேவை...
பாட்டியின் கைமணமே ருசியின் ரகசியம்

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்

யமுனை நீா் தொடா்ந்து நச்சுச்தன்மையுடன் இருக்கிறது: தில்லி பாஜக அரசு மீது தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


