'எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரே?' என்று சொல்லும்படி அதிர்ச்சியூட்டும் எடை இழப்புக்கு ஆளாகியிருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் சிக்கியிருக்கும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல் எடை இழப்பை ஈடுகட்ட 'நாஸா' முழு மூச்சாக மருத்துவ உதவிகளை அளித்துவருகிறது.
ஒரு வாரத்துக்கு விண்வெளியில் பயணிக்கச் சென்ற சுனிதா, விண்வெளிக் கலத்தில் ஏற்பட்ட கோளாறால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் பல மாதங்களாகத் தங்கியுள்ளதால் ஆபத்தான எடை இழப்புக்கு ஆளாகியுள்ளார்.
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சக வீரர் வில்மோர் மற்றும் இதர விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியுள்ளார். சுனிதாவின் அண்மைக்காலப் படங்கள் அவரது மெலிந்த, களையிழந்த ஒட்டிய கன்னத்துடனான தோற்றத்தைக் காண்பித்து அதிர்ச்சியை அளித்துள்ளது. நீண்ட கால விண்வெளி வாசமானது, குறிப்பாகப் பெண்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
சுனிதா விண்வெளியை தனது 'இரண்டாவது வீடு' என்று அடிக்கடி சொல்வார். அதனால்தான் மீண்டும் விண்வெளிப் பயணத்துக்குத் தேர்வானார். நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருப்பதைப் பற்றி சுனிதா எந்தக் கவலையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், அவரது எடை இழப்பு ஒரு அபாய அறிவிப்பாக மாறியுள்ளது. சுனிதாவின் கன்னங்கள் ஒட்டிப் போய் 'உடல் எடை அதிகமாக இழந்துள்ளார்' என்று படத்தைப் பார்த்தாலே தெரிகிறது என்று நாஸா ஊழியர்களே கவலைப்படுகின்றனர்.
சுனிதா எலும்பும் தோலுமாக இருப்பது நாசாவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தக் கொடுமையான உடல் மாற்றத்தைத் தவிர்த்து சுனிதாவின் எடையைக் கூட்ட ஆய்வகத்தில் இருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சரிவர சாப்பிட முடியாது போனதால், உடலுக்கு வேண்டிய கலோரிகளை உடலிலிருந்து உறுப்புகள் எடுத்துகொள்வதால் எடை குறைகிறது. சுனிதா விண்வெளிப் பயணத்தைத் தொடங்கும்போது எடை 63.5 கிலோவாக இருந்தது.
எடையைப் பராமரிக்கத் தேவையான அதிக கலோரி உணவை சுனிதாவால் சாப்பிட முடியாததாலும், முன்பே தயாரிக்கப்பட்ட உணவு என்பதினாலும் சுவை குறைந்திருக்கலாம் என்கின்றனர். எடையைக் கூட்ட ஒரு நாளைக்கு சுமார் 3,500 முதல் 4,000 கலோரி உணவுகளைச் சாப்பிட வேண்டும். சுமிதாவுக்கு ஐம்பத்து ஒன்பது வயதாகிறது.
விண்வெளி வீரர்கள் தங்கள் தசைகள், எலும்புகளை விண்வெளியில் வலுவாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உடற்பயிற்சியை செய்ய வேண்டும். சுனிதா உடற்பயிற்சி செய்து உணவு உண்டு வந்தபோதிலும், எடை குறைவதைத் தவிர்க்க முடியவில்லை.
விண்வெளிப் பயணத்தின்போது வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களால், குறிப்பாக பெண் வீரர்களுக்கு ஆண் விண்வெளி வீரர்களைவிட விரைவாகத் தசைச் சிதைவு, எடை இழப்பு ஏற்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
'சுனிதா நீண்ட காலம் மிக அதிக உயரத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்ட அறையில் வாழுவதும் உடல் எடை குறைவதற்கு காரணம்' என்கின்றனர். சுனிதாவின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கப் பெண்ணியவாதிகள் குரல் எழுப்பும்முன் நாஸா சுனிதாவை வெகு விரைவில் பூமிக்கு கொண்டுவரும் முயற்சியில் நாஸாதீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

எப்படி நிகழ்ந்தது அது?

ஒரே மேடையில் சுனிதா வில்லியம்ஸ் - பாவனா! இலக்கியத் திருவிழாவில் சுவாரசியம்!

ஓய்வுபெற்றாா் சுனிதா வில்லியம்ஸ்

உடல் எடை குறைய வெங்காரம் உள்கொண்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

