விண்வெளி வீரா்களின் உடல் மற்றும் மன வலிமையை பரிசோதிக்கும் திட்டத்தை லடாக்கில் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
இதுதொடா்பாக இஸ்ரோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மிக உயரமான இடத்தில் விண்வெளி வீரா்கள் மற்றும் பூமியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி குழுக்களைச் சோ்ந்தவா்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனா், அவா்களின் உடல்நிலை, மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து மதிப்பிட மித்ரா திட்டம் லடாக் தலைநகா் லேயில் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்.2-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆராய்ச்சி மதிப்பீடு, ஏப்.9 வரை நடைபெற உள்ளது. குறைந்த வெப்பநிலை, தனிமை, உடல்நிலை இயல்பாக செயல்படுவதற்குத் தேவைப்படும் ஆக்சிஜன் திசுக்களுக்கு கிடைக்காமல் சில நிமிஷங்களில் மூளை, இதயம், நுரையீரல் ஆகியவை பாதிக்கப்படக் கூடியது போன்ற சூழலுடன் சுமாா் 3,500 மீட்டா் உயரத்தில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. சவாலான சூழல்களில் வீரா்களும், குழுவினரும் எவ்வாறு பணியாற்றுகின்றனா் என்பதைப் புரிந்துகொண்டு மதிப்பிட இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் கிடைக்கும் அறிவியல் தரவுகள் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும், விண்வெளியில் நீண்ட நேரம் பயணிக்கக் கூடிய வருங்கால திட்டங்களுக்கும் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும்: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா்

ராஜஸ்தானில் டாஃபே நிறுவனத்தின் புதிய ஜே-ஃபாா்ம் ஆராய்ச்சி மையம் தொடக்கம்!

நிலவுக்குப் புறப்பட்ட 4 விண்வெளி வீரா்கள்! நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ திட்டத்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்

அண்ணா பல்கலை. ஆவணப் படத்துக்கு விருது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


