பெங்களூரு அருகேயுள்ள பள்ளத்தூரில் தமிழர் ஒருவர் கட்டியிருக்கும் 'தன்னிறைவு பசுமை இல்லம்' அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சூரிய ஒளி மின்சாரம், மழைநீர் சேமிப்பு , கழிவுநீரை தோட்டத்துக்குப் பயன்படுத்துதல்.. என்று தன்னிறைவுடன் இருக்கிறது.
பிரத்யேக செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதால் வீடு எப்போதும் குளுமையாக இருக்கும். மின் விசிறிகளோ, ஏ.சி.யோ பயன்படுத்தவும் தேவையில்லை. மழைநீர் சேமிப்பில் இருந்து ஆண்டில் ஒன்பது மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வீட்டுக்கு 2004-இல் குடிவந்ததிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை மின்சார இணைப்பை கர்நாடகா மின்வாரியத்திடமிருந்து பெறவே இல்லை.
இந்த அதிசய வீடு குறித்து உரிமையாளர் சொக்கலிங்கம் கூறியதாவது:'
'இரண்டு தலைமுறைக்கு முன்பே மூதாதையர்கள் தொழில் நிமித்தம் பெங்களூரு வந்துவிட்டனர். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தோம். குடும்ப உறுப்பினர்கள் பெருகிவிட்டதால் தனியே வீடு கட்டிக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மாநகருக்கு வெளியே பள்ளத்தூரில் 15 சென்ட் நிலம் வாங்கி 3,500 சதுர அடியில் வீடு கட்டத் தொடங்கினோம். வீடு கட்ட பயன்படுத்தப்படும் பொருள்களால் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் சிமென்டின் பயன்பாட்டை பெருமளவு குறைத்தோம்.
இயற்கை முறையில் வீடு கட்டும் வல்லுநர்களிடம் ஆலோசித்து மண் செங்கற்களைப் பிரத்யேகமாக வாங்கினோம். வீட்டின் உள்புறம் வெளிச்சத்துக்காக, கூரையில் கண்ணாடி பாளங்களைப் பொருத்தினோம். அதனால் மின்விளக்குகள் பயன்படுத்துவதை குறைக்கலாம். ஜன்னல், நிலைபடிகள், கதவுகளை செட்டிநாட்டில் பழைய வீடுகளிலிருந்து வாங்கினோம்.
2000-ஆம் ஆண்டிலேயே வீட்டுக்குத் தேவையான மின்விளக்குகள், மின்விசிறிகள், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, டிவி, தண்ணீரை மேல் தொட்டிக்கு பம்ப் செய்யும் மோட்டார் போன்றவை இயங்க சூரிய ஒளி தகடுகளை வாங்கிப் பொருத்தினோம்.
அப்போது பொறியாளர் 'எனக்கு இந்தத் தொழில்நுட்பம் தெரியாது. ஆனால் பொறியியல் படித்திருப்பதால் முயன்று பார்ப்போம்' என்று கூறி பலமுறை முயற்சித்து கடைசியில் வெற்றிபெற்றார். 2 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கத் தேவையான கருவிகள் வாங்க அன்றே 4 லட்சம் ரூபாய் செலவு ஆனது. இன்று அதே அளவு மின்சாரம் தயாரிக்க ஒரு லட்சம் ரூபாய் போதும். 2004-இல் வீட்டுக்கு குடிபெயர்ந்தோம்.
மின்சாரம் வீட்டின் தேவைகளை நிறைவு செய்ததால், 2023-ஆம் ஆண்டு வரை கர்நாடகா மின்வாரியத்திடமிருந்து மின் இணைப்பை நான் பெறவில்லை. இந்த ஆண்டு மின்சாரத்தில் இயங்கும் கார் வாங்கியுள்ளதால், பேட்டரி ரீசார்ஜ் செய்ய அரசு மின் இணைப்பைப் பெற்றுள்ளேன். கர்நாடகத்தில் முதல் 200 யூனிட்டுகள் இலவசம் என்பதால் மின்கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் இதுவரை வர இல்லை.
மழைக்காலத்தில், மண்ணுக்கு அடியில் கட்டியுள்ள பிரமாண்ட தொட்டிகளில் மழைநீரை சேமிக்கிறோம். தொட்டிகள் நிறைந்துவிட்டால் உபரி நீரை கிணற்றுக்குள் போய் விழுமாறு ஏற்பாடு செய்துள்ளோம். கழிவுநீரை வீட்டுத் தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறோம்.
மரம், செடி, கொடிகளைப் பாதிக்காத விதத்தில் வீரியம் குறைந்த 'பயோ என்சைம்' ஷாம்பு, சோப்புகளை பயன்படுத்துகிறோம். பாத்திரங்களைக் கழுவவும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருள்களையே பயன்படுத்துகிறோம்.
வீட்டைச் சுற்றி சிக்கு, கொய்யா, நெல்லிக்காய், மா, வாழை, தென்னை மரங்களை வளர்த்து வருகிறோம். வீட்டின் தரையில் மண் ஓடுகள், ஆத்தங்குடி டைல்ஸ்களை பதித்திருக்கிறோம். மின் பொத்தான்கள் பழைய காலத்து பாணியில் வைத்துள்ளோம். பழைய கலைப் பொருள்களைச் சேகரித்து வீட்டுக்கு அழகு கூட்டியுள்ளோம்.
வீட்டுக்குள் காற்றோட்டம் இருக்கும்படி கதவுகள் ஜன்னல்களை பொருத்தியுள்ளோம். அதனால் மீவிசிறிகளின் பயன்பாட்டை குறைத்து மின்சாரத்தை சேமிக்கலாம். வீட்டுச் . செலவுகளையும் சுருக்கலாம். சொந்த வீடு வைத்திருப்பவர்கள் தங்களால் இயன்ற பசுமை முயற்சிகளில் ஈடுபட்டால் நாட்டின் மின்சாரம், தண்ணீர் தேவைகளைக் கணிசமாகக் குறைத்து நாட்டு முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்யலாம்' என்கிறார் சொக்கலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சூரிய வீடு மின் திட்டத்துக்கு கூடுதல் மானியம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்
மேட்டுப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

2026-ஆம் ஆண்டு விஷ்ணுபதி புண்ணிய கால நாள்கள்!
முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் 11.5 பவுன் நகை திருடியவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG
தினமணி வீடியோ செய்தி...

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

