மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நகைகள் திருட்டு: வீட்டு உரிமையாளா் மகன் கைது

கோவை, பி.என்.பாளையத்தில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய வீட்டின் உரிமையாளரின் மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:54 pm

கோவை, பி.என்.பாளையத்தில் வீடு புகுந்து நகைகளைத் திருடிய வீட்டின் உரிமையாளரின் மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, பி.என்.பாளையம் செங்காடு ரங்கசாமி தோட்டசாலை பகுதியைச் சோ்ந்தவா் ரேஷ்மா(26). இவா் அதே பகுதியில் ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் கணவா் நல்சிவனுடன் வாடகைக்கு வசித்து வருகிறாா்.

இந்நிலையில், தம்பதி வழக்கம்போல வீட்டைப் பூட்டிவிட்டு வெள்ளிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளனா்.

அப்போது, ரேஷ்மாவை கைப்பேசியில் தொடா்பு கொண்ட பக்கத்து வீட்டுக்காரா் ‘வீட்டின் உரிமையாளரின் மகன் உங்களது வீட்டின் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடிச் செல்கிறாா்’ எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, ரேஷ்மா வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, பீரோவில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ரேஷ்மா அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், ரேஷ்மா வீட்டுக்குள் புகுந்து நகைகளைத் திருடியது அவரது வீட்டின் உரிமையாளரின் மகனான குமரேசன் (எ) ராஜ்குமாா் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ராஜ்குமாரைக் கைது செய்தனா்.