மக்களவைத் தேர்தல், ஐ.பி.எல். கிரிக்கெட், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள்.. என வரிசையாக வந்ததால், தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. கடந்த நான்கு மாதங்களாகவே பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரவில்லை. தற்போது கமலின்'இந்தியன் 2' பட வெளியீட்டுக்குப் பின்னரே, சற்று தலைத்தூக்க தொடங்கியுள்ளது பட ரிலீஸ்.
ஆகஸ்ட் மாத கலையுலகக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கையில், தமிழ்ப் படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை அதிகமாகும் எனத் தெரிகிறது.
நீண்ட மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித்தின்'தங்கலான்' படத்துடன் கீர்த்தி சுரேஷின்'ரகு தாத்தா', நானியின்'சூர்யாவின் சனிக்கிழமை', பாலாவின்'வணங்கான்' எனப் பல படங்கள் வெளியாகும் சூழல்கள் இருக்கின்றன. ஆகஸ்ட் 2ஆம் தேதியில்'மழை பிடிக்காத னிதன்','போட்','ஜமா','வாஸ்கோடகாமா','கொட்டேஷன் கேங்' ஆகிய படங்கள் வெளியாகின்றன. இவை தவிர தேதி குறிப்பிடப்படாமல் சில சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீஸூக்கு வரிசைக் கட்டி நிற்கின்றன.
இங்கே சில படங்களைப் பார்ப்போம்.
போட்
சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் படம். கடலிலே முழுவதும் எடுக்கப்பட்ட படம் இது. எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷன், சாம் எனப் பலரும் நடித்துள்ளனர்.
ஜமா
பல விருதுகளை அள்ளிய'கூழாங்கல்' படத்தைத் தயாரித்தவர்களின் அடுத்த படைப்பு'ஜமா'. இளையராஜா இசையமைக்கும் இப்படம் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என்.மணி
மேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து எனப் பலரும் நடித்துள்ளனர்.
வாஸ்கோடகாமா
'காதலில் விழுந்தேன்','மாசிலாமணி' என ஒரு சமயத்தில் ஹீரோவாக தொடர்ந்து ஸ்கோர் செய்தவர் நகுல். சிறிய இடைவெளிக்குப் பின்னர் தன் இரண்டாவது இன்னிங்ஸை'வாஸ்கோடகாமா'விலிருந்து ஆரம்பித்திருக்கிறார். அர்த்தனா பினு ஹீரோயின். வம்சி கிருஷ்ணன், முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர்.
கொட்டேஷன் கேங்
சன்னி லியோன், பிரியாமணி என முகங்கள் நடித்திருப்பதால் இந்த ஹிந்தி படம் தமிழிலும் வெளியாகிறது. விவேக் கே.கண்ணன் இயக்கியுள்ளார். டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார்.
சூர்யாவின் சனிக்கிழமை
நானியின் 31ஆவது படம் இது. இந்தப் படம் தெலுங்கு, தமிழிலும் வெளியாகிறது.'அந்தே சுந்தரானிகி'யை இயக்கிய விவேக் ஆத்யா இதை இயக்கியுள்ளார். நானி,
பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா எனப் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 26இல் வெளியாகிறது.
ரகு தாத்தா
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகும் ஹீரோயின் சென்ட்ரிக் படம் இது.'கே.ஜி.எஃப்.','காந்தாரா' திரைப்படங்களைத் தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேரடியாகத் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது. ஓ.டி.டி.யில் வெளியாகிப் பேசப்பட்ட'தி ஃபேமிலி மேன்' வெப்சீரீஸின் ரைட்டர் சுமன் குமார், இப்படத்தை இயக்கியிருக்கிறார். கீர்த்தி தவிர, எம்.எஸ்.பாஸ்கர், எனப் பலரும் நடித்துள்ளனர்.
மழை பிடிக்காத மனிதன்
விஜய் ஆண்டனியின் நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான படம்'மழை பிடிக்காத மனிதன்'. ஜி.தனஞ்செயன், கமல் போத்ரா தயாரித்திருக்கும் இப்படத்தில் எளிய மனிதர்களின் கதையை ஆக்ஷனும் எமோஷனுமாக சொல்லியிருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். சரண்யா, சத்யராஜ், சரத்குமார் என கதைக்கான ஆட்கள் வலுவாக உள்ளனர்.
தங்கலான்
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் இது. சமீபத்தில் இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை அள்ளி வருகிறது. விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து எனப் பலரும் நடித்துள்ள இப்படம் கோலார் தங்கவயலின் பின்னணியில் 17ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. இந்தப் படம் ஆகஸ்ட் 15-இல் வெளியாகும் என எதிர்பார்ப்பு உள்ளது.
வணங்கான்
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும்'வணங்கான்' படமும், விஜய் சேதுபதியின்'ஏஸ்', சிவகார்த்திகேயனின்'அமரன்', ஜெயம் ரவியின்'ஜீனி', அருள்நிதியின்'டிமான்டி காலனி 2' ஆகிய படங்களும் ரிலீஸூக்கு ரெடியாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் தாய் கிழவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

மிஸ்டர் எக்ஸ் டீசர்!

பேட்ரியாட் டிரைலர்!

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


