'இந்திய கிரிக்கெட் வீரர்களில் பணக்காரர் யார்?' என்ற கேள்வி அவ்வப்போது எழும். சில மாதங்களுக்கு முன்னர், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா ரூ.1,450 கோடி சொத்துகளுடன் முதல் இடத்தைப் பிடித்திருந்தார்.
தற்போது அஜய் ஜடேஜாவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் ஆதித்ய பிர்லா குழுமத்தின் இருபத்து ஏழு வயது வாரிசான ஆர்யமான் பிர்லா. அவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ. 70 ஆயிரம் கோடி.
கிரிக்கெட் ஆட வந்தால் நிச்சயம் பணக்காரர்களாகிவிடுகின்றனர். அதிலும், திறமையுடன் அதிர்ஷ்டமும் சேர்ந்துவிட்டால் விராட் கோலி, தோனி, சச்சின் டெண்டுல்கர் போல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் சொத்துகள் சேர்ந்துவிடுகின்றன.
வீரர்களின் கிரிக்கெட், விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானம் உச்சத்தைத் தொடுகிறது. அதனால்தான் இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் லாபகரமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது.
மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆதித்ய பிர்லா குழுமத் தலைவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா. தொழில்முறை கிரிக்கெட்டில் ஆர்யமான் இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் உள்ளது.
இருந்தாலும், குடும்பச் சொத்துகள் அதிகமிருப்பதால், அதன் வாரிசு ஆரியமான் என்பதால் இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்.
விராட் கோலி, எம்.எஸ். தோனி போன்றோரும் ஆர்யமானின் சொத்து மதிப்புக்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இத்தனைக்கும் 2023-இல் ஆர்யமான் 'ஆதித்யா பிர்லா ஃபேஷன் & ரீடெய்ல் லிமிடெட்' நிறுவனத்தில் இயக்குநராக இணைந்தார். பின்னர், அவர் 'ஆதித்ய பிர்லா மேலாண்மை கார்ப்பரேஷன் மற்றும் கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனங்களிலும் இயக்குநரானார்.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஆர்யமான் பிர்லா, கிரிக்கெட் உலகில் தனக்கென்று ஒரு பெயரை உருவாக்குவதை லட்சியமாகக் கொண்டிருந்தார். கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர ஆதித்ய பிர்லா குழுமத்தின் சிமென்ட் பிரிவின் தலைமை இடமான மத்தியப் பிரதேசத்தின் ரேவாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு, அவர் மாநிலத்தின் ஜூனியர் கிரிக்கெட் சுற்று மூலம் கிரிக்கெட்டில் ஈடுபட்டார்.
ரஞ்சி டிராபி மூலம் 2017 நவம்பரில் மத்தியப் பிரதேசத்தின் சார்பில் அறிமுகமானார். 2018-இல் ஈடன் கார்டனில் மேற்கு வங்கள அணிக்கு எதிரான போட்டியில் 189 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆர்யமான் தனது திறமையை நிரூபித்தார். அதனால், 2018-இல் ஐபிஎல் ஏலத்தில் ஆர்யமானை ராஜஸ்தான் ராயல்ஸ் ஒப்பந்தம் செய்தது. இருந்தாலும், துரதிர்ஷ்ட
வசமாக, அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இரண்டு சீசன்களை அணியில் கழித்தார். 2019-இல் ஏற்பட்ட காயம் ஆர்யமானை கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கச் செய்தது. அவர் கிரிக்கெட்டிற்குத் திரும்பாமல், குடும்ப வணிகத்தில் கவனம் செலுத்திவருகிறார்.
கிரிக்கெட் ஆடாமலே, இந்திய கிரிக்கெட் வீரர்களில் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் பிடிக்கும் அதிர்ஷ்டம் ஆர்யமான் பிர்லாவுக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் ஒரு அதிர்ஷ்டம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மீண்டும் டிஆர்பியில் முந்தும் எதிர்நீச்சல் -2 தொடர்!

மெட்ராஸ் மாகாண முதல் சட்டமன்றம் (1952 - 1957): ஏராளமான முன்னுதாரணங்களின் களம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’
டாப் 7 பெண்கள்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

