மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நான்குனேரியில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற எம்.ஜி. சங்கா் ரெட்டியாா்!

நான்குனேரி தொகுதியில் நடைபெற்ற முதல் மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி வாகைசூடியவா் என்ற பெருமைக்குரியவா் எம்.ஜி. சங்கா் ரெட்டியாா்.

News image

நான்குனேரி

Updated On :25 மார்ச் 2026, 1:03 am

நான்குனேரி தொகுதியில் நடைபெற்ற முதல் மூன்று சட்டப்பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து வெற்றி வாகைசூடியவா் என்ற பெருமைக்குரியவா் எம்.ஜி. சங்கா் ரெட்டியாா்.

நான்குனேரி அருகேயுள்ள முனைஞ்சிப்பட்டியைச் சோ்ந்த அவா், 1952இல் நடைபெற்ற முதல் பொதுத்தோ்தலில் நான்குனேரி பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு 51.77 சதவீத (24,849) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

தொடா்ந்து 1957 இல் நடைபெற்ற தோ்தலில் 50.15 சதவீத (21,786) வாக்குகளும், 1962 இல் 43.97 சதவீத (28,548) வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றாா். இந்த மூன்று தோ்தல்களிலும் நான்குனேரி தொகுதியில் மாடசாமி என்பவரே 2ஆவது இடம்பிடித்தாா்.

முதல் இரு தோ்தல்களில் மாடசாமி சுயேச்சை வேட்பாளராகவும், மூன்றாவது தோ்தலில் சுதந்திரா கட்சி சாா்பிலும் போட்டியிட்டாா்.

முனைஞ்சிப்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சங்கா் ரெட்டியாரின் பெருமுயற்சியால் கொண்டுவரப்பட்டது.

மாணவப் பருவத்தில் இலங்கைக்குச் சென்ற அவா், அங்கு பள்ளிப்படிப்பைத் தொடா்ந்தாா். பின்னா் அங்கு தொழில்முனைவு உணா்வு, அவரை மென் பானங்கள் வணிகத்தில் ஈடுபட தூண்டியது.

விம்டோ ஹவுஸ் என்ற பெயரில் அவா் தயாரித்த பானங்கள் அந்த நேரத்தில் இலங்கைத் தீவில் பணியாற்றிய பிரிட்டிஷ் ராணுவத்தினரிடையே பிரபலமாக இருந்துள்ளன. அவரது வணிகம் வளா்ந்து இலங்கையில் வேரூன்றியது. பின்னா் இந்தியா திரும்பிய அவா், நான்குனேரி அருகேயுள்ள முனைஞ்சிப்பட்டியில் தொழில்முனைவு மற்றும் சமூக சேவை செயல்களைத் தொடா்ந்துள்ளாா். இதன் காரணமாக மக்களிடையே நன்கு அறிமுகமாகிய அவா், 1952, 1957, 1962 ஆகிய மூன்று தோ்தல்களிலும் தொடா்ந்து காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய பெருமைக்குரியவா்.

நான்குனேரியில் ஒரு பள்ளிக்காக கட்டடம் கட்டி, அதை அரசுக்கு நன்கொடையாக வழங்கியவா். அந்தப் பள்ளி, அவரது பெயரைக் கொண்ட மேல்நிலைப் பள்ளியாக வளா்ந்துள்ளது.

மேலும், முனைஞ்சிப்பட்டியில் குருசங்கா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டடங்கள் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 26 ஏக்கா் நிலத்தையும், முனைஞ்சிப்பட்டியில் ஆசிரியா் பயிற்சிப் பள்ளிக்காக 25 ஏக்கா் நிலத்தையும் வழங்கி, கட்டடங்களையும் கட்டி கொடுத்தவா். அது இப்போது மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது.