ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வழி என்ன?
என் மகளுக்கு மூன்று வயதாகிறது. இந்த வருடம்தான் பள்ளியில் சேர்த்துள்ளோம்.


என் மகளுக்கு மூன்று வயதாகிறது. இந்த வருடம்தான் பள்ளியில் சேர்த்துள்ளோம். அவளுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் வந்துவிடுகிறது. எடை குறைவாகவும், நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவாக உள்ளது. சாப்பிடவும் அடம்பிடிக்கிறாள். ஆயுர்வேத மருந்தாகிய ஸ்வர்ணப்ராசம் என்ற மருந்து குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் என அறிகிறேன். அவள் குணமாக ஆயுர்வேத மருந்து உள்ளதா?
-முருகவேலன்,
மயிலாடுதுறை.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு பள்ளியில் மற்ற பிள்ளைகள் இருமினாலோ, தும்மினாலோ, காற்றில் வெளிப்படும் நுண்ணிய கிருமிகளின் தொற்றானது விரைவில் பரவி, நீங்கள் குறிப்பிடும் உபாதைகளுக்குக் காரணமாகிவிடுகிறது.
கபதோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு- குளிர்ச்சி- கனம்- மந்தம்- வழுவழுப்பு- கொழுகொழுப்பு- நிலைப்பு ஆகியவை , நாக்கில் மாவு போல் படிவதும், உணவுக் குழாய் மற்றும் உட்புறச் சவ்வுகளின் பரவி நிற்பதாலும், பசி குறைந்து, உணவில் வெறுப்பு ஏற்படுவதால், உணவுச் சத்து உட்புறப் பகுதிகளில் பெறப்படாமல், குழந்தையின் எடை குறைவதும், நோய் எதிர்ப்புச் சக்தி வளராமலும் போய் விடுகிறது.
வரட்சி, சூடு, லேசு, ஊடுருவும் தன்மை, சொரசொரப்பு, நகரும் தன்மை எனும் கபதோஷத்தின் குணங்களுக்கு எதிரான குணங்களை உணவாகவும், மருந்தாகவும் உட்செலுத்தினால், சளியானது தன் உறைந்த நிலையை விட்டு, நீராக வெளியேறத் தொடங்கினால், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகள் அனைத்தும் மாறிவிடும்.
மஞ்சள், வரட்டு மஞ்சள், சதகுப்பை, மேலும் சில மூலிகைகளைக் கொண்டு தயாரித்து விற்கப்படும் சூரண மருந்தை மூன்று கிராம் எடுத்து, அதில் ஆறு மில்லி தேன் விட்டுக் குழைத்து, காலை, மாலை என இரு வேளை , வெறும் வயிற்றில் சாப்பிட , சளி கரைந்து பசி நன்றாக ஏற்படும்.
காய்ச்சலும், இருமலும் குணமாகிவிடும்.
ஆடாதோடை, கண்டங்கத்திரி போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளும் உள்ளன. அவற்றைக் கலந்து. சுமார் பத்து மில்லி காலை, இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிடுவதும் நல்லதே. மருந்தின் பேரை எழுதினால், குழந்தையாயிற்றே என்ற கவலை சிறிதும் இல்லாமல், லேபிளை மாற்றி விற்பனை செய்யும் நபர்கள் இருப்பதினால், அவை பற்றிய பேர் விவரம் தெரிவிக்கவில்லை. வருந்த வேண்டாம்.
ஸ்வர்ணபிராசம் எனும் மருந்து தங்கத்தின் சேர்க்கையினால் தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான நல்லதொரு மருந்தாகும். பலமுறை ஆராய்ச்சி செய்து தற்சமயம் விற்பனையிலுள்ளது. இந்த மருந்தைச் சாப்பிடும் குழந்தைகள் பெறும் நன்மைகளில் சில:
மேதா அக்னிபலவர்தனம்- அறிவுக்கூர்மை, பசி, பலம் ஆகியவை வளரும்,.
ஆயுஷ்யம்- நீண்ட ஆயுளைத் தரும்.
மங்களம்- உடல், மன நலத்துக்கு
நன்மையைத் தரும்.
புண்யம்- தர்ம சிந்தனையைத் தூண்டும்.
விருஷ்யம்- ஆண்/ பெண்மையை வளர்க்கும்.
வர்ண்யம்- நிறத்தை அளிக்கும்.
க்ருஹாபஹம்- துஷஷ்ட ஆவி, நுண்ணிய கிருமிகள் அண்டாதவாறு பாதுகாப்பளிக்கும்.
இனிப்பு, புளிப்பு, உப்பு தவிர்த்து, குழந்தைகளுக்கு காலையில் சூடான பருப்புச் சாதம், நெய்விட்டுப் பிசைந்து, மிளகு, சீரகம், பூண்டு போட்ட ரசம் சாதம் ஊட்டவும், மதியம் சாம்பார் சாதம், இரவு காலை உணவுபோலவே கொடுக்கவும். இட்லி, தோசை, வடை போன்ற மாவுப் பண்டங்களைத் தவிர்க்கவும்..
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...