மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வழிகாட்டி..!

போட்டித் தேர்வுகள் என்றாலே பயிற்சி வகுப்புகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்ற நிலையில், போட்டித் தேர்வுகளுக்காக இலவச உண்டு, உறைவிடப் பயிற்சி மையத்தைத் திறந்து அசத்தியிருக்கிறார் வி.கமல்.

News image
Updated On :6 மே 2023, 6:30 pm

போட்டித் தேர்வுகள் என்றாலே பயிற்சி வகுப்புகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்ற நிலையில், நாகப்பட்டினத்தில் போட்டித் தேர்வுகளுக்காக இலவச உண்டு, உறைவிடப் பயிற்சி மையத்தைத் திறந்து அசத்தியிருக்கிறார் முப்பத்து ஏழு வயதான இளைஞர் வி.கமல்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், கோவையில் விளையாட்டுக் கல்லூரி விடுதியில் படித்து கூடைப்பந்து வீரராக வாழ்க்கையைத் தொடங்கியவர்.

எம்.பி.ஏ. (விளையாட்டு மேலாண்மை) பட்டத்தையும் பெற்றவர்.

அதன்பின்னர், 2013இல் தமிழ்நாடு அரசின் குரூப் 1 தேர்வு எழுத சென்னைக்குச் சென்றார் கமல். அங்குள்ள தனியார் பயிற்சி மையம் மதிய உணவையும் அளித்து பயிற்சியும் தந்தது கமலைக் கவர்ந்தது. இதனால் மீனவர்கள் நிறைந்த நாகப்பட்டினத்தில் யு.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு 'கலங்கரை ஐ.ஏ.எஸ். அகாதெமி' என்ற பெயரில் பயிற்சி மையத்தைத் தொடங்கினார். குரூப் 2 , குரூப் 4, காவலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளில் இங்கு பயிற்சி பெற்ற சுமார் 30 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்தச் சாதனை குறித்து கமல் கூறியதாவது:

கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினத்தில் மீன் பிடித்தல்தான் முக்கியத் தொழில். அரசுத் துறை வாய்ப்புகள் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாத நிலையைப் போக்கவே, ஐ.ஏ.எஸ். அகாதெமியைத் தொடங்கினேன்.

உண்டு, உறைவிடப் பள்ளி போல போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி தரத் திட்டமிட்டேன். அதன் முதல் முயற்சியாக 40 பேர் தினசரி வந்து செல்பவர்களாகப் பயிற்சி பெற்று வருகின்றனர். இதுதவிர 30 ஆண்கள், 30 பெண்கள் விடுதியில் தங்கவைத்து, பயிற்சி தரத் திட்டமிட்டுள்ளேன். இவர்கள் 60 பேருக்கும் 3 வேளை உணவு, தங்குமிடம், ஓராண்டுக்கான பயிற்சி முற்றிலும் இலவசம். இலவசம் என்பதால் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை. மிகச் சிறந்த பயிற்றுநர்களை அழைத்து வந்து பயிற்சி தருகிறோம்.

சி.பி.சி.எல். நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் 30 மாணவர்களுக்கு ஆகும் செலவைத் தருவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அன்பழகனார், தனது சங்கத்தின் வாயிலாக நல்ல ஆதரவை அளிக்கிறார். பின்தங்கிய நாகை மாவட்டத்தின் தேர்வர்களும் இனி அரசுப் பணிகளில் வாய்ப்புகளைப் பெற முடியும்.வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கும் கட்டணமில்லாமல் வகுப்பெடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இலவசப் பயிற்சி வகுப்பை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்துத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார் கமல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.