2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிரி... சிரி...

''ஊசி குத்தும்போது டாக்டர் ஏன் கண்ணை மூடிக்கிறார்?'''அடுத்தவங்க படுற அவஸ்தையை பார்க்க வேண்டாம்னுதான்!''

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:08 pm

தினமணி


''ஊசி குத்தும்போது டாக்டர் ஏன் கண்ணை மூடிக்கிறார்?''
'அடுத்தவங்க படுற அவஸ்தையை பார்க்க வேண்டாம்னுதான்!''



''அந்தாளு சரியான ஜொள்ளு பார்ட்டியா இருக்காரு டாக்டர்!''
''ஏன் அப்படி சொல்றீங்க?''
''ஆ' காட்டுங்கன்னு சொன்னா? பல்லை காட்டுறாரு டாக்டர்!''



''உங்க பொண்ணு என்ன சார் வாயைத் திறந்து பல்லையே காட்ட மாட்டேங்குது!''
''ஆம்பிளைங்ககிட்ட பல்லைக் காட்டக் கூடாதுன்னு கண்டிச்சி வளர்த்திருக்கோம் டாக்டர்!''



''இந்த 'நாட்டு வைத்தியர்' மூடி டைப்பா இருக்காரே?''
''ஏன் அப்படி சொல்றே?''
''எந்த மருந்தைக் கொடுத்தாலும் ஒரு மூடி குடி, ரெண்டு மூடி குடின்னு சொல்றாரே?''



'மனைவி கூட சேர்ந்து வாக்கிங் போயிட்டிருந்த நீங்க இப்பல்லாம் ஏன் தனியா போறீங்க?''
'சேர்ந்து போனா, ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்து, மன உளைச்சலாகுது டாக்டர்!'



''டாக்டர். வெளியே தலை காட்ட முடியலை!!''
''உங்களை யாரு ஊர் முழுக்க கடன் வாங்கச் சொன்னது ?''
'சார்...   நான் சொன்னது வெயிலுக்காக!''

வி.ரேவதி,
தஞ்சை. 

''டாக்டர் என் மனைவி தூக்கத்துல பேசறா?''
''சரி இதுக்கு போய் நீங்க ஏன் கவலைப்படறீங்க ?''
''அவ பேசும்போது என்னை தலைய ஆட்ட சொல்றாளே டாக்டர் !''



''உங்க மாமியாருக்கு 'ஷாக் டீரிட்மென்ட்' கொடுக்கணும்!''
''நான் கொடுக்கறேன் டாக்டர். எனக்கு ரொம்ப ஆசையாய் இருக்கு!''



''டாக்டர்தான் என்னோட ஞாபகமறதி வியாதிக்கு எக்ஸரே எடுத்துனு வர்ற சொன்னாரு !''
''இது ஜெராக்ஸ் கடைங்க..''

தீபிகா சாரதி,
சென்னை.


''நடந்த  பழசெல்லாம் கனவுல வருது டாக்டர்''
''நடந்தது மறக்காம மனசுல  இருந்தா அப்படி வரும்.''  
''போன ஜென்மத்தில் நடந்தது எல்லாம் வருதே?''



''பெட் சார்ஜ் ஆயிரம் ரூபாய்..!''
''டாக்டர். நான் பாதி நேரம் கீழே படுக்கிறேன். அதனால் ஐநூறு ரூபாய் வாங்கிக்கோங்க?''

பர்வதவர்த்தினி,
பம்மல்.

''ஏன்டா? ஜலதோஷம் பிடிச்சதுக்கு மந்திரவாதியை பார்க்க போனியா?''
''டாக்டரிடம் போனேன். அவர்தான் ஆவி பிடிக்கச் சொன்னாரு?''

அ.செந்தில்குமார்,
சூலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.