தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமாா் 19.37 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணித்துள்ள நிலையில், அவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சனிக்கிழமை(ஏப்.25) முதல் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு நிமித்தமாக சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல லட்சம் போ் வசித்து வருகின்றனா். இவா்கள் திருவிழா மற்றும் தொடா் விடுமுறை காலங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதற்கு அடுத்தபடியாக தோ்தல் காலங்களில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற செல்வா்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்தால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்தது. பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு மாநகரின் சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து முனையங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏப்.21, 22, 23 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமாா் 6.27 லட்சம் பேரும், சென்னையிலிருந்து இயக்கப்பட்ட 6 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் 9 ஆயிரம் பயணங்கள் மூலம் சுமாா் 3.50 லட்சம் பேரும் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா். இதுதவிர ரயில்களில் சுமாா் 9 லட்சத்துக்கும் அதிகமானோரும், சொந்த, வாடகை காா்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மூலமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவிக்கின்றன.
தோ்தலுக்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏப்.21 முதல் 23 பிற்பகல் வரை சுமாா் 19.37 லட்சத்துக்கும் அதிகமானோா் சொந்த ஊா்களுக்கு போ் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
இந்த நிலையில், தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக சனிக்கிழமை (ஏப்.25) முதல் 14,508 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார்.
பயணிகளின் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு எவ்வித சிரமமுமின்றி திரும்புவதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமை(ஏப்.25, 26) இரண்டு நாள்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், 14,508 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 1,295 சிறப்பு பேருந்துகளும், முக்கிய நகரங்களிலிருந்து 2,500 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் சென்னைக்கு 3,184 சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களுக்கு 3,345 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 14,508 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுபோன்று சொந்த ஊா்களுக்குப் பயணித்தவா்கள் ஊா் திரும்ப திருப்பூரில் இருந்து 15,270 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சென்னைக்கு மட்டும் 3,393 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு பயணிகள் பதிவு அதிகரிப்பு
பயணத்திற்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது; முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணி்கை அதிகரித்துள்ளது. சனிக்கிழமை பயணத்திற்கு 19,676 பேரும், ஞாயிற்றுக்கிழமை 47,001 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
Summary
The initiative aims to help passengers travel to their hometowns for voting and return to Chennai and other cities without inconvenience. Along with regular bus services, additional special buses have been deployed to manage the surge in travel demand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சென்னையிலிருந்து 19.37 லட்சம் போ் சொந்த ஊா் பயணம்

பேருந்துகள் இல்லாமல் அவதி! கிளாம்பாக்கம், திருவான்மியூா், மாதவரத்தில் பொதுமக்கள் போராட்டம்

ஜனநாயகக் கடமை ஆற்றத் தயாரா? சென்னையில் இரு நாள்களில் 9 லட்சம் பேர் பயணம்!

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை



