ரூ.300 கோடியில் சக்திமான்:
0'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் டி.வி. தொடர்களில் ஒன்று 'சக்திமான்' . 1997 முதல் 2005ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் (தமிழில் பொதிகை) தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தத் தொடரை பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து, அவரே சக்திமானாகவும் நடித்திருந்தார்.
ஹிந்தியில் எடுக்கப்பட்டு பிறமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்தத் தொடர் திரைப்படமாக உருவாக உள்ளதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பு விடியோவும் வெளியாகியிருந்தது. ஆனால் பட வேலைகள் தொடங்குவதில் தாமதமானது.
தற்போது 'சக்திமான்' தொடர் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டுடன் திரைப்படமாக உருவாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய முகேஷ் கண்ணா, 'சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. கரோனா தொற்று காரணமாகத் திரைப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தில் சக்திமான் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை. படக்குழுவினர் எந்த ஒப்பீடும் வேண்டாம் என்றதால் சிறப்புத் தோற்றத்திலும்கூட நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நடிகர்கள் விவரம் விரைவில் தெரிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் வேறொரு தரத்தில் வித்தியாசமாக இருக்கும்'' என்றார்.
கல்பனா சாவ்லாவின் பயோபிக்கில் ஷேரத்தா கபூர்:
மறைந்த இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று (ஆண்ர்ல்ண்ஸ்ரீ) படத்தில் ஷேரத்தா கபூர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்குகிறார் என்றும் ஏ.ஆர். ரஹ்மான், விக்ரம் மாண்ட்ரோஸ் இசையமைக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தநயடயின் கீழ் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் இப்படத்தில் அபிஷேக் பச்சன், அமீர் கான், ஃபாஹிம் கான் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மகன் இயக்கத்தில் ஷாருக் கான்: பெரும்பாலான நடிகர்களின் வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகும் நிலையில் ஆர்யன் கான் மட்டும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.
நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை நடிகராக அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் கரண் ஜோகர் முன் வந்தார். ஆனால் தனக்கு நடிக்க விருப்பமில்லை என்று ஆர்யன் கான் தெரிவித்துவிட்டார். இயக்குநராக ஆர்யன் கான் விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கான வேலையில் கடந்த சில மாதங்களாக ஆர்யன் கான் ஈடுபட்டு வந்தார். ரெட் சில்லீஸ் படத்தயாரிப்பு நிறுவனத்தின் கதைக்குழு ஆர்யன் கானுடன் சேர்ந்து கதையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. முதல் கட்டமாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க ஆர்யன் கான் முடிவு செய்துள்ளார். அதன் முதல் நாள் படப்பிடிப்பு மும்பை ஒர்லியில் தொடங்கியது.
வழக்கமாக எந்த நிகழ்ச்சிக்கும் மிகவும் தாமதமாகவே வரும் ஷாருக்கான் தனது மகன் இயக்குநராக அறிமுகமாகிறார் என்றவுடன் காலை 7 மணிக்கே படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து விட்டார். ஷஸ்டார் டம்' என்ற பெயரில் 6 எபிசோட்களாக இந்த வெப் சீரிஸ் எடுக்கப்பட இருக்கிறது. இதனை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த வெப் சீரிஸில் கௌதமி கபூர், ஷாருக் கான், ரன்வீர் சிங் ஆகியோர் வேறு வேறு எபிசோட்களில் நடிக்க இருக்கின்றனர். இந்த எபிசோட்களில் ரன்வீர் சிங், ஷாருக் கான் ஆகியோர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், கதையை முன்னெடுத்து செல்ல இது மிகவும் உதவியாக இருக்கும் என்றும், அவர்களை ஆர்யன் கான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
பிரம்மாஸ்திராவின் அடுத்தடுத்த பாகங்கள்:
அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'பிரம்மாஸ்திரா' . அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மௌனி ராய், நாகார்ஜுனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்தியாவின் அவெஞ்சர்ஸாக மாறியிருக்க வேண்டிய இப்படம் சிறுசிறு குறைகளால் அதனைத் தவறவிட்டது.
படத்தின் முதல் பாகத்தின் குறைகளை மேம்படுத்தி இரண்டாம், மூன்றாம் பாகங்களை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் அயன் முகர்ஜி கூறுகையில், ''முதல் பாகத்துக்கு கிடைத்த அன்பு, விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு,இரண்டு, மூன்றாவது பாகங்களை மேம்படுத்தும் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். அடுத்தடுத்த பாகங்கள் முதல் பாகத்தைவிட மேம்படுத்தப்பட்டதாகவும், சிறப்பாகவும் இருக்கும். இன்னும் கால அவகாசம் எடுத்து இதன் ஸ்கிரிப்டை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்!'' என்றார்.
இந்திராகாந்தியாக கங்கனா:
ங்கனா ரணாவத் சமீபகாலமாக தடலாடியான அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார். இது அவரின் சமூக வலைதளங்கள் தொடங்கி, திரைப்படம் வரை வெளிப்படுகிறது. அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் வாழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து மற்றுமொரு அரசியல் ஆளுமையான இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்படும் 'எமர்ஜென்சி' எனும் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை கங்கனாவே இயக்குகிறார். ஜான்சிராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மணிகர்ணிகா' படத்தை தயாரித்த 'மணிகர்ணிகா பிலிம்ஸ்' இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்திரா காந்தியாக நடிக்கும் கங்கனா, பிரத்யேகமான வடிவமைப்புடன் மேக்கப் செய்ய லண்டன் சென்றுள்ளார். இக்கதாபாத்திரத்துக்கான மேக்கப், வடிவமைப்பை டேவிட் மாலினோவாஸ்கி என்பவர் செய்கிறார். இவர் ஏற்கெனவே வின்ஸ்டன் சர்ச்சில் கதையை வைத்து எடுக்கப்பட்ட 'டார்க் ஹவர்'படத்துக்காக, ஆஸ்கர் விருது பெற்றவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


