எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தயாரிப்பாளர் முகம் காட்டும் ஹீரோயின்கள் !

ஒரு திரைப்படம் பெரிய வெற்றி அடைந்தாலும், தோற்று போனாலும்  லாபம் அடைவதும்  பாதிக்கப்படுவதும் தயாரிப்பாளர்கள்தான்.

News image
Updated On :9 டிசம்பர் 2023, 6:30 pm

ஒரு திரைப்படம் பெரிய வெற்றி அடைந்தாலும், தோற்று போனாலும் லாபம் அடைவதும் பாதிக்கப்படுவதும் தயாரிப்பாளர்கள்தான். தயாரிப்பாளர்களுக்கு பல சவால்கள் இருக்கின்றன. இன்னொரு தயாரிப்பாளரின் படத்தில் பல நிர்பந்தத்தோடு நடிப்பதற்குப் பதில் நாமே படத்தைத் தயாரிக்கலாமே என்று பல ஹீரோக்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளனர். தொடர்ந்து, ஹீரோயின்கள் பலரும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஹீரோயின்களாக இருந்து தயாரிப்பாளர் ஆனவர்களின் பட்டியல் இது:

அனுஷ்கா ஷர்மா

2008-ஆம் ஆண்டில் 'ரப்னே பனா தி ஜோடி' மூலம் முதல் படத்திலேயே ஷாரூக் கானுக்கு ஜோடியாக அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் இவர், அமீர் கான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் என பல முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். பிறகு, தான் நடித்த 'என். எச். 10' படத்தின் மூலமாக 'கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர், 'ஃபில்லௌரி', 'பரி' என தன்னை மையப்படுத்திய கதைகளை மட்டும் தயாரித்து வருகிறார் அனுஷ்கா ஷர்மா.

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வரும்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, தற்போது யுனிசெஃப் அமைப்பின் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். மேலும், ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க சீரிஸ்களிலும் பிஸியாக இருக்கும் இவருக்கு மராத்தி, அஸாமி படங்கள் மீது ஆர்வம் அதிகம். 'பர்பிள் பெப்பில்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மராத்தி, அஸாமி, போஜ்பூரி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை ஒன்பது படங்களைத் தயாரித்துள்ளார்.

தீபிகா படுகோன்

கன்னடப் படத்தில் அறிமுகமாகி பாலிவுட்டில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார், தீபிகா படுகோன். பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருக்கும் இவர், கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதில் பொருத்தமாக நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர். அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் தலைக்காட்டி வரும் தீபிகாவுக்குச் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதில் ஆசை. அதனால், அதற்கான பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, டாப் ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமல்லாது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறு பட்ஜெட் படங்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார். 'அறம்' படமே நயன்தாரா தயாரித்ததுதான் என்ற செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில், தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நல்ல கதைகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார். தற்போது இவர் தயாரித்துள்ள 'கூழாங்கல்' என்ற படம் சர்வதேச மேடைகளை அலங்கரித்து விருதுகளை வென்றது. இந்தப் படம் தற்போது திரைக்கு வந்துள்ளது.

ஸ்ருதி ஹாசன்

பாடகி, நடிகை, இசையமைப்பாளர்.. என்று பன்முகம் கொண்ட ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. வித்யுத் ஜம்வாலுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 'லென்ஸ்' படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் இராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் 'தி மஸ்கிட்டோ பிலாஸபி' என்ற படத்தைத் தனது 'இஸிட்ரோ மீடியா' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடவிருக்கிறார். இதே நிறுவனத்துக்காக ஸ்ருதி கூடிய விரைவில் ஒரு படத்தைத் தயாரித்து நடிக்கவிருக்கிறார்.

காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு எனப் பரபரப்பாக இயங்கி வந்த அகர்வாலுக்கும் தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லை. 'குயின்' ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். சொந்தமாக பிஸினஸ் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்த காஜலுக்கு, தற்போது தயாரிப்பில் ஆர்வம் வந்திருக்கிறது. இதனால், தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரிக்கவும் இருக்கிறார்.

நஸ்ரியா

தமிழிலும் மலையாளத்திலும் 'சார்மிங்' பெண்ணாக இருந்து ரசிகர்களைக் கவர்ந்த நஸ்ரியா, ஃபஹத்ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்புக்கு பை பை சொன்னார். சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருப்பவர், அஞ்சலி மேனன் இயக்கத்தில் 'கூடே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தவிர, தன்னுடைய கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் 'வரதன்' என்ற படத்தையும், அறிமுக இயக்குநர் ஒருவரின் 'கும்பலங்கி நைட்ஸ்' என்ற படத்தையும் தயாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.