டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

காவல் துறையில் கலக்கல் பெண்!

காவல் துறையில் பெண் காவலர்.  கூடவே மாடலிங்  உலகில் சூப்பர் மாடல்,   குத்துச்சண்டை வீராங்கனை,   சாகசமாக பைக் ஓட்டுபவர்.. என்று பன்முகங்களைக்  கொண்டிருப்பவர்தான் ஏக்  ஷா   ஸூப்பா  என்ற  21 வயது இளம்பெண

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:38 am

சக்ரவர்த்தி

காவல் துறையில் பெண் காவலர். கூடவே மாடலிங் உலகில் சூப்பர் மாடல், குத்துச்சண்டை வீராங்கனை, சாகசமாக பைக் ஓட்டுபவர்.. என்று பன்முகங்களைக் கொண்டிருப்பவர்தான் ஏக் ஷா ஸூப்பா என்ற 21 வயது இளம்பெண்.
"ஒரு பெண்ணால் பல துறைகளில் வெற்றிகரமாக முத்திரை பதிக்க முடியும்' என்று ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணம் அவர். இதுகுறித்து அவர் கூறியதாவது:
""நான் குக்கிராமத்தில் பிறந்தேன். வளரும்போது காவல் துறையில் சேரணும் என்றோ, மாடலிங் செய்ய வேண்டும் என்றோ, குத்துச் சண்டை கற்க வேண்டும் என்றோ நான் கனவு காணவில்லை.
இளம் வயதில் மாடல் அழகி ஆக வேண்டும் என்றும் குத்துச்சண்டை பயில வேண்டும் என்று முனைப்பு ஏற்பட்டது.
எனது ஆர்வத்தைப் பார்த்த அப்பா உள்ளூர் குத்துச் சண்டை பயிலகத்தில் பயிற்சி பெற சேர்த்துவிட்டார். படிப்படியாகப் பயிற்சி பெற்று, தேசிய குத்துச் சண்டை போட்டிகளில் சிக்கிம் மாநிலத்தின் சார்பில் பங்கு பெரும் அளவுக்கு உயர்ந்தேன். குத்துச் சண்டைப் பயிற்சி எனது உடலைக் கட்டமைப்பாக வைத்துக் கொள்ள உதவியது. அந்த உடல் பயிற்சி பின்பு காவல் துறையில் வேலை கிடைக்கவும், அழகிப் போட்டியில் கலந்து கொள்ள தேவையான உடல் அளவுகளைப் பெறவும் உதவியது.
அழகிப் போட்டியில் கலந்து கொண்டு சிக்கிம் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற ஆசை என்னை இளம் வயதில் ஏற்பட்டது.
கல்லூரியில் படிக்கும்போது, ஃபேஷன் ஷோக்களில் அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு தேர்வானேன். அடுத்தகட்டமாக தொழில்ரீதியான அழகிப் போட்டிகளில் கலந்து கொள்ள முறையான பயிற்சிகளில் சேர்ந்தேன். எனது முயற்சிகள் வீண் போகவில்லை. 2018-இல் "மிஸ் சிக்கிம்' ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
குடும்பத்தில் நான்தான் மூத்தவள். அதனால் குடும்பச் சுமையைத் தந்தையுடன் பகிர்ந்து கொள்ள அரசு வேலைக்காக முயற்சிக்கத் தொடங்கினேன். பட்டப் படிப்பு படிக்கும் போது காவல் துறையில் 2019-இல் காவலராகப் பணி கிடைத்தது. அப்போது எனக்கு 19 வயது. காவல் துறையில் 14 மாதப் பயிற்சி வழங்கினார்கள். அது எனக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்தது. காவல் அதிகாரியாக பணிபுரியும்போது "எம்டிவி' நிகழ்ச்சியில் பங்கு பெற தேர்வானேன். அதற்காக மும்பை செல்ல வேண்டிவந்தது.
எனக்கு ஹிந்தி வராது. அதனால் தொடக்கத்தில் சிரமப்பட்டேன். அதன் இரண்டாம் பதிப்பு ஒளிபரப்பாகிறது. காக்கி உடையை மாற்றி மாடர்ன் உடைகளை அணிய இந்த சானல் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.
அழகிப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட காவல் துறை தந்த பயிற்சி உதவியது. அழகிப் போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடி பதில் தர முடிந்தது.
அழகிப் போட்டிக்கான பயிற்சி முறைகளை சீக்கிரமே கிரகித்துக் கொள்ள காவல் துறை தந்த பயிற்சிகள் உதவியது. அதனால் டி.வி. நிகழ்ச்சி பார்வையாளர்களின் ஆதரவைப் பெற முடிந்தது. எனது திறமையைப் பார்த்து நடுவர்களாக இருந்த அழகி மலைக்கா ஆரோரா, மிலிந் சோமன் என்னைப் பாராட்டினார்.
பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசையினால் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். தோழிகளுடன் சேர்ந்து நீண்ட தூரம் கரடுமுரடான மலைப் பாதைகளில் பைக் பயணம் செல்வது எனது பொழுதுபோக்கு. எனது பன்முகத் திறமைகளை அறிந்த மஹிந்திரா மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், அவரது டிவிட்டர் பக்கத்தில் என்னைப் பாராட்டியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு, என்னை அகில இந்திய கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.