ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூக்கில் ரத்தக் கசிவு நிற்க...!
காரணம் என்னவென்று தெரியாமலேயே எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிகிறது. தானாகவே நின்றும் விடுகிறது. காரித் துப்பினால் ரத்தம் சளியுடன் சேர்ந்து வருகிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?


காரணம் என்னவென்று தெரியாமலேயே எனக்கு மூக்கிலிருந்து ரத்தம் கசிகிறது. தானாகவே நின்றும் விடுகிறது. காரித் துப்பினால் ரத்தம் சளியுடன் சேர்ந்து வருகிறது. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?
-சுந்தரம்,
சென்னை.
மூக்கினுடைய உள்பகுதியில் அமைந்துள்ள ஜவ்வான பகுதியின் உள்புறத்தில் ரத்தக் குழாய்களின் பின்னிப் பிணைந்த வகையில் அமைப்புள்ளது. உள் இழுக்கப்பட்ட காற்றிலுள்ள சூடான தன்மையை உடல் சூட்டுக்குத் தகுந்தவாறு அனைத்து உள்செலுத்தும் வேலையை இந்த ரத்தக் குழாய்கள் செய்கின்றன.
நுரையீரலிலுள்ள காற்றுப் பைகள் கேடு அடையாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு, இயற்கையாகவே மனிதர்களுக்கு அமைந்துள்ளது.
எபிஸ்டாக்ஸில் எனப்படும் இந்த உபாதைக்கு காரணமான மூக்கின் உள்புறத்தில் புண் இருப்பது, சதை அல்லது கட்டி வளர்ச்சி, ரத்தக் கசிவு நோய் போன்றவை காரணமாகலாம்.
ரத்தக் கசிவு ஏற்படும் மூக்கின் ஓட்டையை சுமார் ஐந்து நிமிடங்கள் வரை அமுக்கிப் பிடிக்கலாம். இரு மூக்குத் துவாரங்களையம் விரல்களால் அமுக்கிப் பிடித்து வாய் வழியாகக் காற்றை உள்ளிழுக்கலாம்.
அதற்கு 1. பசு நெய்யின் மேல் தெளிவான பகுதி, 2. அறுகம் புல்லின் சாறு, 3. மாதுளம் பழப் பூக்களின் சாறு, 4. மாமரத்தின் இளந்தளிருகளின் சாறு, 5. தொட்டாற்சிணுங்கி எனும் செடியின் இலைச்சாறு, 6. தாதிரிப் பூவின் சாறு, 7. இலவம் பிசின் விட்டரைத்த தண்ணீரின் மெல்லிய பசை, 8. ஆடாத்தோடையின் இலைச்சாறு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மூக்கில் விட பயன்படுத்தலாம்.
மூக்கினுள் இரண்டு, மூன்று சொட்டுகள்விட, ரத்தக் கசிவு நிற்க ஏதுவாகும்.
ஆறுவாரங்களுக்குக் கீழ்காணும் மருந்துகளை உள்ளுக்குச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். 1.ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் சாறு இரு வேளை உணவிற்கு முன் சாப்பிடுதல், 2.முப்பது முதல் ஐம்பது முதல் ஐம்பது மில்லி லிட்டர் மாதுளம் பழச்சாறு, 3.மாசிக்காயை நன்கு துளாக்கி, இரண்டு அல்லது மூன்று சிட்டிகை எடுத்து சிறிது தேன், நெய் குழைத்து, உணவிற்கு முன் காலை, இரவு என இரு வேளை சாப்பிடுவது, 4.இரண்டு தேக்கரண்டி (10 மி.லி.) ஆடாதோடை இலைச்சாறு, 5.பிரவாள பஸ்மத்தை இரண்டு, மூன்று சிட்டிகை எடுத்து தேன், நெய் குழைத்து இரு வேளை உணவுக்குப் பிறகு சாப்பிடுதல், 6.பசும்பாலைக் காய்ச்சி கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெயைக் காய்ச்சி எடுத்து நெய்யுடன் சிட்டிகை ரக்த சந்தனம், அதிமதுரம், கோரைக்கிழங்கு, நெல்லிமுள்ளி, ஆடா தோடை இலைச்சூரணம் இரு வேளை உணவிற்குப் பிறகு சாப்பிடுதல், 7.பூசணியின் சாறு தினமும் சிறிது அருந்துதல், 8. கருப்பு உலர் திராட்சை, கடுக்காய் சூரணம், ஆடாதோடை இலை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, இடித்ததை தேன், சர்க்கரையுடன் சிறிது, சிறுதாக நக்கிச் சாப்பிடுதல், 9. பசுநெய்யுடன் கோலரக்கு, ஆடாதோடை இலை, அதிமதுரத்தூள், அறுகம்புல் சாறு கலந்து, காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும், 10. நன்னாரிவேர்ப்பட்டை, சிவப்பு தாமரை இதழ்கள், நீலத் தாமரை இதழ்கள், காயவைத்து இடித்ததை பசு நெய்யுடன் இரு வேளை உணவிற்கு முன் சாப்பிடுதல், 11.அத்திப்பழச்சாறு தேனுடன் சாப்பிடுதல், 12.திராட்சைப் பழச்சாறு, அறுகம்புல் சாறு, வெங்காயச் சாறு கலந்து குடித்தல்.
காரம், புளி, உப்பு, எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்க்கவும்.
கோலரக்குப் பொடியை தேன் கலந்து பாலுடன் சாப்பிட, கோழையில் வரும் ரத்தம் நின்றுவிடும்.
பாலுடன் அதிமதுரத்தூள் கலந்து சாப்பிடுதல். மாயா பலாதி சூரண மருந்தை தேன் நெய்யுடன் சாப்பிட, ரத்தக் கசிவை நிறுத்திட உதவும்..
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...