பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திரைக் கதிர்

பொங்கல் விருந்தாக "வாரிசு', "துணிவு' வெளியாகின்றன. விஜய்யின் "வாரிசு' தெலுங்கில் "வாரிசுடு' என்ற பெயரில் வெளியாகிறது.

News image
Updated On :4 டிசம்பர் 2022, 12:30 am

பொங்கல் விருந்தாக "வாரிசு', "துணிவு' வெளியாகின்றன. விஜய்யின் "வாரிசு' தெலுங்கில் "வாரிசுடு' என்ற பெயரில் வெளியாகிறது. ஆந்திராவில் சங்கராந்திப் பண்டிகை வருவதால் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதாக வந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சிரஞ்சீவியின் "வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணாவின் "வீர நரசிம்ம ரெட்டி', அகில் அக்கினேனியின் "ஏஜென்ட்' ஆகிய படங்களுடன் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் "வாரிசு' படமும் வெளியாகிறது. 

-------------------------------------------------------

பாலா - சூர்யா கூட்டணியில் "வணங்கான்' அதிக எதிர்பார்ப்புடன் படப்பிடிப்பு ஆரம்பித்தது. கன்னியாகுமரி, ராமேசுவரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் பாலாவுக்கும் சூர்யாவிற்கும் படப்பிடிப்பில் வாக்குவாதம், படப்பிடிப்பு பாதியில் நின்றது என்ற தகவல் பரவியது. உடனே தயாரிப்பாளரான சூர்யா தரப்பில் "ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்க உள்ளது' என அறிவித்தனர்.  இதற்கிடையே இயக்குநர் சிவா - சூர்யாவின் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு அதாவது சென்னை, கோவாவைத் தொடர்ந்து நேற்று மீண்டும் சென்னையில் துவங்கியிருக்கிறது. சிவா படத்தின் படப்பிடிப்பே மார்ச் வரை 
இருக்கிறது என்கிறார்கள்.

-------------------------------------------------------

சென்னை பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் ரஜினியின் "ஜெயிலர்' படப்பிடிப்பும், அஜித்தின் "துணிவு'  படப்பிடிப்பும்  போய்க் கொண்டிருக்கிறது. இரண்டுமே அருகருகே நடந்து கொண்டிருக்கிறது. "ஜெயிலர்' யூனிட்டில் ரஜினியுடன் அனைத்து நடிகர், நடிகைகளும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகிறது. அதைப் போல "துணிவு' பேட்ச் ஒர்க் படபிடிப்பு என்றாலும் கூட, அஜித்தும் இருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்கள் பேட்ச் ஒர்க் போகலாம் 
என்கிறார்கள்.

-------------------------------------------------------

ஐஸ்வர்யாராய் தனது மகளின் பிறந்தநாளையொட்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுக்கு உதட்டோடு உதடாக முத்தம் கொடுப்பது போன்று போன்று இடம் பெற்று இருக்கிறது. அதோடு அதில், "எனது அன்பு... எனது வாழ்க்கை... ஐ லவ் யூ மை ஆராத்யா' என்று குறிப்பிட்டுள்ளார். 

ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள புகைப்படத்தை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒருவர், "இது இந்திய கலாசாரம் கிடையாது, வெட்கமாக இருக்கிறது!' என்று புகைப்படத்தைப் பார்த்து குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.