திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

உலக நாடுகளில் இந்திய வம்சாவளி தலைவர்கள்...!

இந்திய வம்சாவளியினர் உலகம் முழுவதும் இன்று வசிப்பதுடன் அங்கு கௌரவமான பணிகளையும் பெற்றுள்ளனர்.  அத்துடன், அந்தந்த நாடுகளின் முதன்மை கௌரவங்களையும் அடைந்து வருகிறார்கள். 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2022, 12:30 am


இந்திய வம்சாவளியினர் உலகம் முழுவதும் இன்று வசிப்பதுடன் அங்கு கௌரவமான பணிகளையும் பெற்றுள்ளனர். அத்துடன், அந்தந்த நாடுகளின் முதன்மை கௌரவங்களையும் அடைந்து வருகிறார்கள். 


அந்த வகையில், அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இங்கிலாந்தின் பிரதமராகப் போராடும் ரிஷி சுனக் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.  மற்ற நாடுகளில் இந்திய வம்சாவளியினர் எந்தெந்த முக்கியப் பதவிகளில் உள்ளனர். தெரியுமா இதோ:

Story image

போர்ச்சுகல்

2015-ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் பிரதமராக உள்ள அன்டானியோ கோஸ்டா (61). இந்திய "கோவா' வம்சாவளியினரைச் சேர்ந்தவர். இவருடைய உறவினர்கள் இப்போதும் கோவா "மார்கோ'வில் வசிக்கின்றனர்.

சூரிநாம்

முன்னாள் காவல் துறை அதிகாரியாக இருந்து,  அதிபரானார் சந்திரிகா பிரசாத் சண்டோகி (63)  இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா- பாட்டிகள் இன்றும் பிகார், உத்தரப் பிரதேசத்தில் வசித்துவருகின்றனர். இவர் தனது பதவிப் பிரமாணத்தை வேதப் புத்தகத்தின் மீது  கை வைத்து சம்ஸ்கிருத மொழியில் எடுத்தார்.

மொரிசியஸ்

மொரிசியஸ் நாட்டின் அதிபராக 2019-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார் பிரிதிவிராஜ்சிங் ரூபன் (63). 2020-இல் வாரணாசி வந்தார். அப்போது, கூடுதல் சுமை எடுத்து வந்ததாகக் கூறி, விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டார்.

வழக்குரைஞராக இருந்து போராடும் குணம் கொண்ட சோசலிஸ்ட் இயக்கத்தை 2003-இல் தொடங்கி,  2017-ஆம் ஆண்டிலிருந்து அந்த நாட்டின் பிரதமராக இருப்பவர் பிரவிந்த் குமார் ஜூக்னாத் (60). இவருடைய மூதாதையர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

கயானா

இந்தோ - கயானா குடும்பத்தில் பிறந்தவர் முகம்மது இர்பான் அலி (42).  2020-ஆம் ஆண்டு முதல் கயானாவின் அதிபர். 

செஷல்ஸ்

வாவெல் ராம்கலாவன் (61), பிகாரைப் பூர்விகமாகக் கொண்டவர். முதலில் அங்கு ஆங்கிலிகன் பாதிரியாராக இருந்து, பிறகு அரசியல்வாதியாக மாறி 2020-ஆம் ஆண்டு முதல் அதிபராக இருப்பவர்.

1993-2011, 2016-20 ஆண்டுகளில் இரு முறை அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.

சிங்கப்பூர்

ஹாலிமா யாகோப் (67), 2017-ஆம் ஆண்டு முதல் இங்கு அதிபராக உள்ளார். முதலில் வழக்குரைஞர். பிறகு அரசியல் என புகுந்து உச்சம் தொட்டவர். இவருடைய தந்தை இந்தியாவைச் சேர்ந்தவர். சில காலம் நாடாளுமன்றத் தலைவராகவும் இருந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.