திரைக்கதிர்
"மாநாடு', "மன்மத லீலை' படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. நாக சைதன்யா நடிக்கிறார்.


"அடிதடி', "மகா நடிகன்', "ஜன்னல் ஓரம்', "குஸ்தி', "பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற பல படங்களை தயாரித்த கே.முருகன், எம்.எஸ். மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் "நாகா'. ஏற்கெனவே, பிரபுதேவா, மகிமா நம்பியார்
நடிக்கும் "கருட பஞ்சமி' படத்தை தயாரித்து வருகிறார். இரண்டாவது படைப்பாக "நாகா" படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில், பெண்களின் மானத்தை காப்பாற்ற மானசா தேவி நாக அம்மனின் பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார். இப்பொழுது தெலுங்கு "பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ள பிந்து மாதவி, அதை முடித்து கொண்டு வந்த பின் இப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இதே போல் தமிழ் "பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா வில்சனும் இன்னொரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தொல்லியல் ஆராய்ச்சியாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார்.
புராணங்களில் சொல்லப்படுகிற நாகலோகம் இந்த காலத்திலேயும் உண்மையாக இருக்க தான் செய்கிறது என்பதை கிராபிக்ஸ் டெக்னிக்கல் காட்சியுடன் பிரமாண்டமாக சொல்ல வருகிறார் இயக்குநர் சார்லஸ்.
----------------------------------
"மாநாடு', "மன்மத லீலை' படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது. நாக சைதன்யா நடிக்கிறார். இது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11-ஆவது திரைப்படம். நாக சைதன்யாவுக்கு 20=ஆவது படம்.
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா ஆகியோர், முறையே தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் அறிமுகமாகவுள்ளதால், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்த படக்குழு பற்றிய மற்ற விவரங்கள், விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
----------------------------------
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வெளியாகியுள்ள படம் "கே.ஜி.எப் சாப்டர் 2' படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் ஹிந்தி திரை உலக ரசிகர்களை கவர்வதற்காக குறிப்பாக மும்பை மக்களைக் கவர்வதற்காக பட குழுவினர் அந்த மாநகரத்தில் அமைந்திருக்கும் கார்னிவல் சினிமாஸ் திரைப்படக் வளாகத்தில்100 அடி உயரத்தில் படத்தின் நாயகனான யஷூக்கு பிரமாண்டமான கட் அவுட்டை வைத்திருக்கிறார்கள். யஷ்ஷின் பிரம்மாண்டமான கட் அவுட்டை மும்பைவாசிகள் அண்ணாந்து பார்த்து வியக்கிறார்கள். அதனை விடியோவாகவும், செல்ஃபியாகவும் எடுத்து தங்களது இணையப் பக்கத்திலும், சமூக வலைதளப் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.
----------------------------------
நடிகர் கார்த்திக்கிற்கு குதிரை சவாரி மிகவும் பிடித்தமானது. அவர் நடித்த "காஷ்மோரா' படத்திற்காக குதிரையேற்ற பயிற்சி எடுத்துக் கொண்ட அவர் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது குதிரை சவாரி செய்து வந்தார்.
தற்போது "பொன்னியின் செல்வன்' படத்தில் பெரும்பாலான காட்சிகளில் அவர் குதிரை சவாரி செய்துள்ளார். தனது கனவை "பொன்னியின் செல்வன்' நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சுட்டுரையில் எழுதியிருப்பதாவது...
"எனக்கு குதிரைகள் மீது எப்போதும் ஈர்ப்பு அதிகம். "காஷ்மோரா' படத்திற்காக முதன்முதலாக குதிரையேற்றம் கற்றுக் கொண்டாலும், "பொன்னியின் செல்வன்' படத்தில்தான் பெரும்பாலான காட்சிகளில் குதிரை மீது பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. குதிரைகளுடன் இருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார்.
----------------------------------
"டெடி' படத்திற்கு பிறகு ஆர்யாவும், சக்தி சவுந்தர்ராஜனும் இணைந்துள்ள படம் "கேப்டன்'. ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸூம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
தற்போது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு புறம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பாராட்டுகளை அள்ளினாலும், போஸ்டர் , கதை போன்றவை குறிப்பிட்ட ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...