திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குறைந்த கரோனா தொற்று... பயன்படும் மருந்து!

குறைந்த அளவில் ஏற்படும் கரோனா வைரஸ் தொற்றால் காய்ச்சல், சளி, உடல்வலி என்றெல்லாம் துன்பப்படும்  பலருக்கும் என்ன வகையான மூலிகைகளின் சேர்க்கையினால்,

News image
Updated On :10 மே 2021, 12:13 pm

குறைந்த அளவில் ஏற்படும் கரோனா வைரஸ் தொற்றால் காய்ச்சல், சளி, உடல்வலி என்றெல்லாம் துன்பப்படும்  பலருக்கும் என்ன வகையான மூலிகைகளின் சேர்க்கையினால், பக்க விளைவுகள் ஏதுமின்றி விரைவில் குணமடைய வழி வகை பிறக்கும்?

தயாளன், 

சென்னை-17.

"முஸ்தா பர்படகே ஜ்வரே' என்று காய்ச்சலை அதிரடியாகக் குறைக்கும் இரு மருந்துகளாகிய கோரைக்கிழங்கையும் (முஸ்தா), வெண்பர்பாடகத்தையும் (பர்படகே) ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. தனி மூலிகையினால் செய்ய முடியாத பல  அதிசயங்களையும் பல அல்லது சில மூலிகைகளின்  சேர்க்கை விசேஷத்தினால் செய்ய முடிவதைக் கண்டறிந்த ஆயுர்வேதம், பல ஆராய்ச்சிகளின்  விளைவாக, மூலிகைகளைத் தொகுத்து "கணம்'  என்ற பெயரில்  வழங்கியுள்ளது. நீங்கள் குறிப்பிடும் வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, காய்ச்சல், உடல் வலி போன்ற உபாதைகளைக் குறைக்கவும்.

வைரஸ் சுமையைக் கீழ் இறக்கவும் செய்யக் கூடிய மூலிகைகளின் தொகுப்பினை கீழ்காணும் வகையில் செய்து மத்திய அரசின் தரச் சான்றிதழையும் பெற்று மாத்திரையாகவும், சிரப்பாகவும் வரத் தொடங்கியுள்ளது.

பப்பாளி இலைச்சாறு - 100 மில்லி கிராம்
மலை வேம்பு -100 மில்லி கிராம்
வெட்டிவேர் -35 மில்லி கிராம்
பேய்ப்புடல் - 35 மில்லி கிராம்
கோரைக்கிழங்கு  - 35 மில்லி கிராம்
சுக்கு - 35 மில்லி கிராம்
வெண்பற்பாடகம் - 35 மில்லி கிராம்
சீந்தில் கொடி - 10 மில்லி கிராம் 

இம்மருந்துகளின் கூட்டுச் சேர்க்கை மாத்திரையாகக் கிடைப்பதால், காலை, இரவு உணவிற்குப் பிறகு, ஒரு மாத்திரையை  வெதுவெதுப்பான தண்ணீருடன் சாப்பிடலாம். 

2017 -இல் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த இறக்கிய மாத்திரையில் சில மாற்றங்களை ஆராய்ச்சியின் மூலம் செய்து, தற்போது இது குறைந்த மற்றும் நடுத்தர அளவில் ஏற்படும் கரோனா வைரஸ் தொற்றிற்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.  ஒரு மாத்திரையின் விலை ரூ.11 ஆகும்.  காய்ச்சல், உடல் வலியுடன் கூடிய மூச்சுத் திணறலையும் இது வெகுவாக குறைக்கிறது. 

ரத்தத்தில் வெள்ளை அணுக்களைச் சீராக்கவும், ரத்தத் தட்டுகள், நிணநீர் கலங்களின்  வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும்.  உறைச் செல்லிறக்கம் எனும் உபாதையையும் குறைத்துவிடுகிறது. ரத்தத்தில் ஏற்படும் அழற்சியையும் இது வெகுவாகக் குறைக்கிறது.  

CLEVIRA என்ற பெயரில்  வெளிவரும் இம்மருந்தை முற்காப்பு சிகிச்சையாகவும், உபாதை வந்த பின்னரும்  பயன்படுத்தலாம்.  முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் இது பெரும் அளவில் பயன்படும்.

காலத்தின் கட்டாயமாகிப் போன இம்மூலிகைகளின் சேர்க்கையை நாம் அனைவரும் பயன்படுத்தி வைரஸ் தொற்றிலிருந்து ஏற்படும் உபாதைகளின் தீவிரத்தைக் குறைக்கவும், வராமல் தடுக்கும் விதம் முன் கூட்டியே சாப்பிடவும் பழகிக் கொள்வோம். 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.