டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக் கதிர்

திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் 24 மணி நேரமும்  பரபரப்பாக இருந்தவர்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:37 pm

ஜி. அசோக்

திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் 24 மணி நேரமும் பரபரப்பாக இருந்தவர்கள். இப்போது 24 மணி நேரமும் வீட்டில் முடங்கி இருப்பதால் அந்த நேரத்தைப் பிரபலங்கள் தங்களுக்கு விருப்பமான விஷயங்களைச் செய்து வருகின்றனர். சிலர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களைப் பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது சகோதரருடன் கபடி விளையாடி ஊரடங்கு நேரத்தின் பொழுதைக் கழித்து வருகிறார். வீட்டிற்குள் சகோதரருடன் கபடி விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதி உதவி, பொருள் உதவி அளித்து வருகிறார்கள். பிரபல டப்பிங் கலைஞரும், பாடகியுமான சின்மயி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து வருகிறார். இதற்கான நிதியை, பொருட்களைத் திரட்டுவதற்காக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதன்படி நிதி உதவி, நிவாரணப் பொருட்களை வழங்குகிறவர்களுக்கு ஸ்பெஷல் பாடலைப் பாடி அவர்களின் இ-மெயில் முகவரிக்கு சிறப்புப் பரிசாக அனுப்பி வைக்கிறார். அதோடு, யார் மூலமாக யாருக்கு உதவி செய்தோம் என்ற விவரங்களையும் வெளிப்படையாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விளம்பரமில்லாமல் தனது சேவையைச் செய்து வருகிறார் சின்மயி.

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் தற்போது "மித்ரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே இருக்கிறார். அவரை நடிகர் பார்த்திபனின் மகன் ராக்கி பார்த்திபன் "ஃபேஸ் டைம் ஃபோட்டோ ஷூட்' எடுத்திருக்கிறார். இது வீடியோ மூலமாகவே புகைப்படத்தை எடுக்கும் புதிய முயற்சி. இதன் மூலம் இனிவரும் காலங்களில் ஒருவரை அவர் அருகில் இல்லாவிட்டாலும் வீடியோ மூலமாகவே புகைப்படம் எடுக்க முடியும் என்று சண்முக பாண்டியன் மற்றும் ராக்கி பார்த்திபன் கூட்டணி நிரூபித்திருக்கிறது.

சூர்யா நடித்து முடித்து உள்ள "சூரரைப் போற்று' திரைக்கு வரவுள்ளது. கரோனா பிரச்னைகள் தீர்ந்ததும் இப்படம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சூர்யா அடுத்து ஹரி இயக்கத்தில் "அருவா' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஒரே கட்ட படப்பிடிப்பாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அவரே தன் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஜோடி முதன் முறையாக இணைந்து
நடிக்கவுள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். "ஹம் ஹர் நஹி மானங்கே' என்கிற பாடலை, பாடலாசிரியர் பிரசூன் ஜோஷியுடன் இணைந்து உருவாக்கியுள்ளார். இப்பாடலுக்கு இசையமைத்ததோடு சில வரிகளையும் ரஹ்மான் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலில் இந்தியாவிலுள்ள பிரபல இசைக்கலைஞர்கள் சிவமணி, மோகித் சௌகான், மிகா சிங், ஜொனிடா காந்தி, நீத்தி மோகன், ஜாவத் அலி, சித் ஸ்ரீராம், சுருதி ஹாசன், ஷாஷா திருப்பதி, கதிஜா ரகுமான் போன்றோர் இணைந்து பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.