டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக் கதிர்

கரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

ஜி. அசோக்


கரோனா நிவாரணத்துக்கு நடத்தப்பட்ட இணைய இசை நிகழ்ச்சியில் ரூ. 980 கோடியை பாப் பாடகி லேடி காகா திரட்டியுள்ளார்.

"ஒன் வேர்ல்ட்: டுகெதர் அட் ஹோம்' என்கிற பெயரில் லேடி காகாவும் உலக சுகாதார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின.

ஷாருக்கான், பிரியங்கா சோப்ரா போன்ற இந்திய பாலிவுட் பிரபலங்களும் இதில் பங்கேற்றார்கள். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
 

-----------------------------------

""கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறையினர், அத்தியாவசியப் பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லாரும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும், அவர்கள் நம்மிடம் கேட்பதும் ஒன்றுதான்: "நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும்' என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கரோனாவின் ஆபத்து புரியாமல் நிறையப் பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய்ச் சேர வேண்டும்'' என வீடியோ மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

-----------------------------------

2016-ஆம் ஆண்டு "ஓகா மனசு' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார் நிஹாரிகா. தமிழில் "ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு அவருக்குத் திரையுலகில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

சில தினங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் குடும்பத்தினர் நடிகர் பிரபாஸூக்கு நிஹாரிகாவைத் திருமணம் பேசி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. பிரபாஸூக்குத் திருமணம் என்றதும் இந்தச் செய்தி வைரலாகப் பரவியது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நிஹாரிகா.

-----------------------------------

நடிகை நயன்தாரா தனது காதல் தோல்விகள் பற்றி முதல்முறையாகப் பேசியிருக்கிறார். நடிகர் சிம்பு, நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா ஆகியோருடனான காதல் தோல்விகளுக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நயன்தாரா. இந்த நிலையில் "நானும் ரவுடி தான்' படத்தில் நடித்தபோது, அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். இப்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது முந்தைய காதல் தோல்விகள் பற்றி நயன்தாரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

-----------------------------------

"ஜோதிகாவின் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன்பு டிஜிட்டலில் ரிலீஸ் செய்தால் அந்த படத் தயாரிப்பாளரின் எந்த படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம்' என எதிர்ப்பு கிளம்பியது.

அதே நேரம், பிரபலத் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இந்த டிஜிட்டல் ரிலீசுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

""ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு தொழில் பாதுகாப்பு இருக்க வேண்டும். தனது தயாரிப்பை லாபத்தோடு வியாபாரம் செய்ய ஒரு வாய்ப்பு வரும் போது அதைப் பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை. ஆகவே "பொன்மகள் வந்தால்' படம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்வதற்கு எனது முழு ஆதரவும் உண்டு'' என கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.