/

1,99,477 வாக்குகள்!

புத்துணர்ச்சி பெற்றிருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவியான ராணி ராம்பாலுக்கு "2019 ஆண்டின்" உலக விளையாட்டு வீராங்கனை' விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:47 pm

சுதந்திரன்

புத்துணர்ச்சி பெற்றிருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவியான ராணி ராம்பாலுக்கு "2019 ஆண்டின்" உலக விளையாட்டு வீராங்கனை' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதிற்காக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு ராணி ராம்பாலை பரிந்துரை செய்திருந்தது.

விருத்திற்கான பரிசீலனைக்கு மொத்தம் 25 வீரர் வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். வாக்கெடுப்பு அகில உலக அளவில் நடந்தது. இதில், மொத்தம் 1,99,477 வாக்குகள் பெற்றராணி ராம்பால் முதலாவதாக வந்து விருதினைப் பெற்றுள்ளார். 

விரைவில் ராம்பாலுக்கு விருதும், பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. 

ராம்பால் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். பெயர் ராணி. தந்தை பெயரான "ராம்பால்' என்பதையும் சேர்த்துக் கொண்டதால் ராணி ராம்பால் ஆனார். அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த ராணி ஆறு வயதில் ஹாக்கி விளையாடத் தொடங்கினார். 

பதினைந்தாவது வயதில் இந்திய அணியில் பங்கு பெறும் அளவுக்கு வளர்ந்தார். சென்ற ஆண்டு நடைபெற்ற 2020 ஒலிம்பிக் தகுதி போட்டியில் ராணி ராம்பால் போட்ட ஒரு கோல் இந்திய அணிக்கு மீண்டும் ஒலிம்பிக்ஸில் ஆடும்வாய்ப்பைப் பெற்றுத்தந்துள்ளது. 

தற்போது 26 வயதாகும் ராம்பால் இந்திய அணிக்காக 200 போட்டிகளுக்கு மேலாக விளையாடியதுடன், 130 கோல்களுக்கு மேல் அடித்துள்ளார். பத்தாண்டு காலமாக இந்தியப் பெண்கள் ஹாக்கி அணியைத் தூக்கிப் பிடித்து நிற்கும் ராம்பாலுக்கு உலக விருது சரியான தருணத்தில் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.