திரைக் கதிர்
"தனிமையில் அடைக்கப்படும் விலங்குகளின் வலி புரிகிறதா?' என்று நடிகை ஸ்ரத்தா கபூர் கேள்வி கேட்டுள்ளார்.


"தனிமையில் அடைக்கப்படும் விலங்குகளின் வலி புரிகிறதா?' என்று நடிகை ஸ்ரத்தா கபூர் கேள்வி கேட்டுள்ளார். மிருகக்காட்சி சாலைகளில் தனிமைப்படுத்தப்பட்ட விலங்குகளின் புகைப்படங்களுடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஸ்ரத்தா கபூர் கூறியிருப்பது... "கரோனா வைரஸ் உலகையே தனிமையில் இருக்கும்படி செய்துள்ள இந்த நேரத்தில், நாம் அனைவரும் மன அழுத்தம், பதற்றம் ஆகியவற்றால் தனிமையின் பாதிப்பை உணர்ந்துள்ளோம். மனநலம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகளுக்கும் உண்டு. இந்த பூமியை நம்முடன் சேர்ந்து பங்கு போட்டுக் கொண்டிருக்கும் மற்ற உயிர்களிடத்திலும் அன்பு காட்டுவோம்' என்று தெரிவித்துள்ளார்.
_________________________________________
ஹைதராபாத்தில் "வலிமை' படப்பிடிப்பு முடிந்தவுடன் விமானங்கள் ரத்தானதால், அங்கிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்துள்ளார் அஜித்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கினார்கள். இதில் ஹைதராபாத் படப்பிடிப்பில் ஒரு சுவாரசியம் நடந்துள்ளது. என்னவென்றால், அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் சிலவற்றைப் படமாக்கியுள்ளனர். அதன் இறுதி நாளில், காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிந்தவுடன் சென்னை திரும்ப வேண்டும். ஆனால், அஜித்தோ காட்சிகள் படமாக்கி முடிந்தவுடன், ""நான் சென்னைக்கு இந்த பைக்கிலேயே செல்கிறேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். பயணம் இனிதாக முடிந்து சென்னை திரும்பி இருக்கிறார்.
_________________________________________
ரஜினிகாந்த் நடித்த "பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற "உள்ளே போ' என்ற வசனத்தின் பெயரில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் வெளிவந்துள்ள கரோனா விழிப்புணர்வுப் பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடகர்கள் வேல்முருகன், தீபக் மற்றும் ஷிவானி ஆகியோர் பாடலைப் பாடினர். பெண் ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கமலக்கண்ணன்படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
_________________________________________
கரோனா வைரஸ் தடுப்பு பணிகளால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் ரூபாய் நிதியுதவியை சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு வழங்கினார்.
_________________________________________
கரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கரோனா வைரஸ் வந்தது எப்படி என்பது குறித்து நடிகர் வடிவேலு பாட்டுப்பாடி விளக்கியுள்ளார். இயற்கை வளத்தை மனிதன் அழித்ததால்தான் கரோனா வைரஸ் பரவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அவர், வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற அந்த பாடல் இணையத்தில் பரவி வருகிறது.
_________________________________________
நடிகை லைலா கடந்த 2006 -ஆம் ஆண்டு ஈரான் நாட்டு தொழில் அதிபரான மொஹ்தீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். பின் தன் குடும்பத்துடன் ஐக்கியமானார். தற்போது இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை லைலா சமீபத்தில் வீடியோ கால் மூலம் நேர்காணல் ஒன்று கொடுத்துள்ளார். அதில் தொகுப்பாளர்,""நீங்கள் ஜோதிகா- சூர்யா இருவர் உடனும் நடித்து உள்ளீர்கள். இவர்களுடைய காதல் குறித்துக் கூறுங்கள்'' என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த லைலா, ""இந்த காதலைப் பொறுத்த வரை ஜோதிகாவுக்கு உதவி செய்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.
_________________________________________
நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் கரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் வழங்கியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் அறக்கட்டளைக்கு ரூ. 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அனுப்பியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...