

ஆர்யா, சாயிஷா ஜோடி இந்த ஊரடங்கை ஓய்வு நேரமாக நினைக்கின்றனர். சாயிஷா தன் கணவர் ஆர்யாவுக்கு தினமும் ஸ்பெஷல் உணவுகளைச் சமைத்துத் தருகிறார். முதலில் கப் கேக், சீஸ் கேக் என்று ஆரம்பித்து தற்போது, பிரியாணி சமைக்கும் அளவுக்குத் தயாராகி விட்டார். தன் மனைவி சமைத்த உணவுகளை படங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும்வெளியிட்டுள்ளார்.
""கரோனா பரவல் தொடர்பான விஷயங்களைக் கவனித்து வருகிறேன். அதேவேளையில் சமூக வலைதளத்தில் விறுவிறுப்பாக இயங்குகிறேன். கிடைத்த ஓய்வில் நிறையப் படங்கள் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வந்து, அவை பற்றிய குறிப்புகளைச் சேகரித்து வருகிறேன். விரைவில் என் சுயசரிதையை ஒலி வடிவிலும், புத்தக வடிவிலும் கொண்டு வருவேன்'' என்று தெரிவித்துள்ளார் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி.
ரகுல் ப்ரீத் தலைகீழாகக் தொங்கிக் கொண்டிருக்கும் படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு இணையத்தில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மாஸ்டர்'. கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருக்க வேண்டிய இந்தத் திரைப்படத்தின் வெளியீடு கரோனாவால் தள்ளிப் போயுள்ளது. இயக்குநர் தனது சுட்டுரைப் பதிவில், "முதலில் உயிர் பிழைக்க வேண்டும். பின்பு கொண்டாடலாம்' என்று புதிய போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.
"நெடுஞ்சாலை', "எங்கேயும் எப்போதும்', "காஞ்சனா-2", "இவன் வேற மாதிரி', "தீயா வேலை செய்யணும் குமாரு', "ஒத்த செருப்பு' போன்ற படங்களின் இசையமைப்பாளர் சி.சத்யா.
கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை அவர் தற்போது உருவாக்கியுள்ளார்.
"விழுத்திரு தனித்திருவரும் நலனுக்காகநீ தனித்திரு' என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

