/

பண்ணையில்  இயங்கும் ஐ டி நிறுவனம்!

கரோனா  வைரஸ்  உலக மக்களையும்  அவர்கள் செய்யும் தொழில்களையும் ஒரு சேர பாதித்துள்ளது.   

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:22 pm

சுதந்திரன்


கரோனா வைரஸ் உலக மக்களையும் அவர்கள் செய்யும் தொழில்களையும் ஒரு சேர பாதித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த "வியூமோனிக்' நிறுவனம் தனது நிறுவன ஊழியர்கள் சிலரை தேனிக்கு அடுத்துள்ள தேவாரத்திற்கு இடம் மாற்றியுள்ளது. "வியூமோனிக்' நிறுவன அலுவலர்கள் வேலை செய்வது தென்னை, மாமரங்கள் இருக்கும் பண்ணையில். மரங்களின் நிழலில், குளுமையான சூழ்நிலையில். பறவைகள் எழுப்பும் ஒலிகளைக் கேட்டுக் கொண்டே மேஜை நாற்காலி இல்லாமல் மண்ணின் மேல் போர்வையை விரித்து அமர்ந்து கணினியில் வேலை செய்கிறார்கள். பெங்களூரில் ஏசி அறைக்குள் இருந்து வேலை பார்த்தவர்களுக்கு இது புது அனுபவம்.

வியூமோனிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் "இன்ஸ்ட்டா கிளீன்' செயலிக்கு ஏழு லட்சம் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் சொந்தக்காரர்களில் ஒருவர் அரவிந்த் ராஜு. இவர் தேவாரத்தைச் சேர்ந்தவர். தேவாரம் மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அரவிந்தின் பண்ணைதான் வியூமோனிக்கின் புதிய பணிக் களம்.

“""பெங்களூருவில் எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் தோழர்கள் உடல்நலம் சரியில்லை என்றார்கள். அதனால் நாங்கள் பதட்டம் அடைந்தோம். எங்கள் நிறுவனத்தில் இருபது பேர்கள் பணி செய்கிறோம். அதில் ஏழு பேர்கள் தேவாரம் போவது என்று முடிவெடுத்தோம். இப்போது எல்லாருமே தேவாரம் வந்துவிட்டோம். தேவாரத்தில் இணைய தள இணைப்பு மிகவும் வேகம் குறைவானதாக உள்ளது. ஆனால் எங்களது வேலைகளுக்கு முழுக்க முழுக்க இணைய வசதி தேவைப்படாததால் எங்களது வேலைகள் தடைப்படவில்லை. தேவாரம் வந்ததினால் எங்கள் ஐ டி வாழ்க்கை முறை மாறியுள்ளது. பெங்களூருவில் காலை 11 மணிக்குத்தான் அலுவலக நேரம் தொடங்கும். வேலை நேரம் முடிய இரவு ஆகிவிடும். தேவாரத்தில் காலை ஏழு மணிக்கு கணினி வேலைகள் ஆரம்பம். பண்ணை பராமரிப்பு வேலைகளும் ஏழு மணிக்குத் தொடங்கும். மதியம் மூன்று மணிக்கு வேலைகளை முடித்துக் கொள்வோம். மீதி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுவோம். எங்காவது தண்ணீர் இருந்தால் குளிப்போம். உள்ளூர் சமையல்காரரைக் கொண்டு உள்ளூர் உணவு வகைகளைத் தயாரித்துக் கொள்கிறோம். எட்டு மணி நேரம் தூக்கம் தேவாரத்தில் உத்திரவாதமாகியிருக்கிறது. எங்கள் குழுவில் நைஜிரியாவைச் சேர்ந்த ஒருவரும், இலங்கையைச் சேர்ந்த ஒருவரும் உள்ளனர். பெங்களூரு எப்போது திரும்புவது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை

"இன்ஸ்ட்டா கிளீன்' செயலி மூலம் தேவையற்ற மின்னஞ்சல்கள் நமது கணக்கிற்கு வருவதைத் தடுக்க இயலும். விளம்பர மின்னஞ்சல்கள் அனைவரது ஈமெயில் கணக்கிற்கு வரும். அவற்றை அவ்வப்போது களையவில்லை என்றால் நமது இன்பாக்ஸ் நிரம்பி மின்னஞ்சல்களைப் பெற முடியாமல் போகும். இன்ஸ்ட்டா கிளீன் செயலி நமக்கு வரும் மின்னஞ்சல்களை செய்தி மடல்கள், ஸ்பாம்கள், லேபிள்கள் என்று இனம் கண்டு நமக்குத் தேவையில்லாத மின்னஞ்சல்களைக் களைகிறது. இத்தகைய தேவையற்ற மின்னஞ்சல்களை ஒருவரது இன்பாக்சில் வராமலும் தடுக்கிறது. இப்படிச் செய்வதால் சுற்றுப்புற சூழ்நிலையில் உருவாக்கப்படும் கார்பன் டை ஆக்ûஸடு குறைக்கப்படுகிறது. ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் ஐந்து கிராம் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது. வாட்ஸ் அப்பில் ஒவ்வொரு செய்தி அனுப்பும் போதும், முகநூலில் ஒவ்வொரு பதிவைப் பார்க்கும் போதும், ஒவ்வொரு பதிவை ஏற்றம் செய்யும் போதும், யூ டியுப்பில் காணொளிகளை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், கார்பன் டை ஆக்ûஸடு உருவாக்கப்பட்டு வெளியாகிறது. இது அறிவியல் உண்மை.

மின்னஞ்சல், வாட்ஸ் அப் செய்தி, யூ டியூப் காணொளியில்லாமல் வாழ்க்கை இல்லை என்றாகிவிட்ட நிலையில் இணையதள பயன்பாடுகளால் எத்தனை டன்கள் கார்பன் டை ஆக்ûஸடு காற்று மண்டலத்தில் தேங்கி நிற்கும் என்று கணக்கு போட்டால் "கார்பன் அபாயம்' புரியவரும். அதனால் தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுப்பதற்கான வேலையைத்தான் எங்களது இன்ஸ்ட்டா கிளீன் செயலி எளிதாகச் செய்து முடிக்கிறது'' என்கிறார் அரவிந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.