வயோதிகத்தில் மூளைத்திறன் குறையாதிருக்கவும் இளமையை மீட்டெடுக்கவும் வகை செய்யக்கூடிய சில அற்புத மூலிகை மருந்துகளாகிய பிரம்மீ, வசம்பு, அபராஜிதா, ஜடாமாஞ்சி மற்றும் ஏலக்காயின் நுண்ணியதூள் ஆகியவற்றின் கலவை தற்சமயம் இனிப்புச் சுவையுடன் கூடிய டானிக் வடிவில் வரத் தொடங்கியுள்ளது. "சிரப் ஜெனிகாட்' என்ற பெயரில் கோட்டக்கல் ஆர்யவைத்திய சாலை இம்மருந்தை விற்பனை செய்கிறது. சுமார் 10 மி.லி. காலை மதியம் இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, அதனை வேகமாக பிராணவாயுவானது தன்னகத்தே இழுத்துக் கொண்டு மூளைக்குச் சென்று அதன் வீர்யத்தைப் பரப்புகிறது. மூளையைச் சார்ந்த "தர்ப்பகம்' எனும் கபம், இம்மருந்துகளின் வீர்யத்தை வரவேற்று, மூளையின் உட்பகுதிகளில் அடங்கியுள்ள திரவங்களையும் உணர்வைத் தூண்டும் நரம்புகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் போஷாக்கை ஏற்படுத்தித் தருகிறது. இப்படி போட்டிபோட்டுக் கொண்டு செயல்படும் பிராண வாயுவும், தர்ப்பகக் கபமும் குணம் மற்றும் செயல்களில் வேறுபட்டிருந்தாலும், நல் மருந்துகளின் உள் வரவை சிறிதும் சுணக்கமில்லாமல் உடல் நன்மைக்காக கை கோர்த்துக் கொண்டு வேலை செய்கின்றன.