டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக் கதிர்

கதாநாயகிகள் பெரும்பாலும் உடல் பெருத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதில்லை. உடல் மெலிந்த புகைப்படங்களை வெளியிட்டு

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:36 am

ஜி. அசோக்


கதாநாயகிகள் பெரும்பாலும் உடல் பெருத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதில்லை. உடல் மெலிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளுவார்கள். அவர்களிலிருந்து மாறு பட்டிருக்கிறார் பாவனா.  கடந்த 2010-ஆம் ஆண்டு அஜித்துடன் "அசல்' படத்தில் கடைசியாக தமிழில் நடித்தார் பாவனா. அதன்பிறகு மலையாளம், கன்னடப் படங்களில் கவனம் செலுத்தினார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா, சென்ற ஆண்டு தனது நண்பரும், கன்னட படத் தயாரிப்பாளருமான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து மலையாளப் படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்து ஹிட்டான "96' படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் "99' படத்தில் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருமண மான சந்தோஷத்தில் பாவனா தனது ஸ்லிம் தோற்றத்திலிருந்து மாறியிருக்கிறார். சில மாதங்களாகவே அவர் இணையதளத்தில் அமைதி காத்து வந்தார். 

இந்நிலையில் தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் "கொழுக்மொழுக்' தோற்றத்தில் இருக்கிறார் பாவனா.

பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனûஸக் காதல் மணம் புரிந்து கொண்டார். பிரியங்காவை விட வயதில் குறைந்தவர் ஜோன்ஸ். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தானில் திருமணம் நடந்தது. சந்திப்பு, காதல், திருமணம் எல்லாமே அவசரக் கோலத்தில் நடந்த நிலையில், தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துக்கு தயாராகி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. 

இதுபற்றி லண்டன் பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருக்கும் செய்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. திருமணத்துக்கு முன்பாக இணைபிரியாத காதல் ஜோடிகளாக வலம் வந்த பிரியங்கா, நிக் ஜோனஸ் திருமணம் ஆகி சரியாக 117 நாட்கள் கடந்த நிலையில் கருத்து வேறுபாட்டில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விஷயத்துக்கும் பிரியங்கா, நிக் இடையே மோதல் ஏற்படுகிறது. வேலை, பார்ட்டிக்குச் செல்வது, இருவரும் ஒன்றாகப் பொழுதைக் கழிப்பது என எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒத்துப்போகவில்லை. 

இதையடுத்து பிரியங்காவை விவாகரத்து செய்யும்படி நிக்கிடம் குடும்பத்தினர் யோசனை கூறியிருக்கிறார்கள். இதனால் இருவரும் விவாகரத்துக்குத் தயாராகி வருகிறார்கள் என்று லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் "விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான்' என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.

"காதல் கண்கட்டுதே' படம் மூலம் அறிமுகமானார் அதுல்யா ரவி. கோவையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர், "ஏமாலி' படத்தின் மூலமும் கவனம் ஈர்த்தார். தற்போது "நாடோடிகள் 2', "சாட்டை 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் சுட்டுரையில் தனது நடவடிக்கைகள் குறித்த வீடியோக்களை அடிக்கடி பதிவேற்றம் செய்வார். புகைப்படங்கள், வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். "சாட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படப்பிடிப்பு இடைவேளையில் படப்பிடிப்பு குழுவினருடன் அரட்டை அடித்தார். வேடிக்கையாக ஒருவரின் காதை அதுல்யா பிடிக்கும்போது அந்த நபர் அதுல்யாவை அடிக்க வந்தார். இந்த வீடியோவை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதுல்யா. இது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே ரஜினிகாந்த் போல் ஸ்டைல் செய்து நடித்தும், வேட்டி கட்டிக்கொண்டு பந்தாவாக நடந்து வருவதுபோன்றும் பல்வேறு வீடியோக்களை அதுல்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜீவா  ஜோடியாக "கீ' படத்தில் நடிக்கிறார் நிக்கி கல்ராணி. கடந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த அவர், இப்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கிறார். இது குறித்து அவர் பேசும் போது...

""கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த ஒரே நடிகை நான்தான். சிறிது நேரம் கூட ஓய்வின்றி நடித்ததாலோ என்னவோ, திடீரென்று உடல்நிலை பாதித்தது. வீட்டில் என்னை மிகக் கடுமையாகத் திட்டினார்கள். "முதலில் ஓய்வு எடு, பிறகு நடிப்பைப் பார்த்துக் கொள்ளலாம்' என்று எனது பெற்றோர் சொன்னார்கள். அதன்படி ஓய்வு எடுத்தேன். இப்போது கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் உடல் எடையைக் குறைத்துள்ளேன். எனக்குப் பிடித்த அதிலும் எனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால்தான் எனக்குப் படங்கள் குறைந்தது போன்ற மாயை ஏற்பட்டுள்ளது. இது பற்றி எனக்கு கவலை இல்லை. பரபரப்பாக நடித்து முடித்து விட்டேன். இனி நிதானமாக நல்ல கதைகளில் நடிப்பேன்.  தற்போது 4 புதுப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது அத்தனையும் உங்களுக்கு பிடிக்கும் விதத்தில் இருக்கும்'' என்றார் நிக்கி கல்ராணி. 

"பாரதி கண்ணம்மா', "பொற்காலம்', "வெற்றிக் கொடி கட்டு', "ஆட்டோகிராப்' உள்ளிட்ட தனது படங்களின் மூலம் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர்சேரன். இவர் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், சேரன் நடித்து இயக்கிய "திருமணம்' படம் வெளியானது. உமாபதி ராமய்யா, காவ்யா சுரேஷ், சேரன், தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், சுகன்யா நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள், சென்டிமெண்ட் என நல்ல கதைக் களமும், அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் பல இடங்களில் இப்படத்தைத் திரையிட முடியவில்லை. இந்நிலையில் இந்தப் படம் மீண்டும் 75 திரை அரங்குகளில், வரும் 12}ஆம் தேதி மீண்டும் வெளியிட இருக்கிறார்கள்.

ஏற்கெனவே இவரது இயக்கத்தில் வெளிவந்த "ஜேகேஎனும் நண்பனின் வாழ்க்கை' என்ற படமும் இதே பாணியில் மறு வெளியீடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.