சிவகங்கையில் செயல்பட்டு வருகிறது "வொர்க்கவுட் வொண்டர்ஸ் பவுன்டேஷன் உடற்பயிற்சி மையம்'.
அண்மையில் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் ச.ரகு டேவிட்சன்(23) என்பவர் ஒரு நிமிடத்தில் 130 விரல் நுனி தண்டால்கள் (ச்ண்ய்ஞ்ங்ழ்ற்ண்ல்ள் ல்ன்ள்ட் ன்ல்ள்) எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும், அவர் இரண்டு கண்ணாடி கிளாஸில் தனது இரு கைகளையும், ஒரு கண்ணாடி கிளாஸில் தனது இரு கால்களையும் வைத்து 30 விநாடிகளில் 72 தண்டால்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதேபோன்று,மு.தருண்பிரபு(14)என்பவர் தொடர்ந்து மூன்று நிமிடங்களில் 277 உக்கிகள் (ள்வ்ன்ஹற்) எடுத்து சாதனை படைத்துள்ளார். ,அவர் இந்திய அளவில் ஏற்கெனவே 3 நிமிடத்தில் 208 உக்கிகள் எடுத்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
எஸ்.பி.மகிபாலன்(13) ஒரு நிமிடத்தில் 130 மணிக்கட்டு தண்டால்களும், மேலும் 4 டம்ளர்கள் மீது 95 மணிக்கட்டு தண்டால்களும் எடுத்து உலக சாதனையாகப் பதிவு செய்துள்ளார்.இதையடுத்து, நெ.குருபிரசாத்(13)என்பவர் 3 நிமிடங்களில் 230 சிட்அப்ஸ் எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார். ஆர்.தர்ஷன் (9) என்பவர் இரு மேஜைகளின் மீது கால்கள் இரண்டையும் விரித்தபடி ஒரு நிமிடத்தில் கைகளில் 260 குத்துகள் விட்டு சாதனை படைத்துள்ளார். பி.ஜோதி கிருஷ்ணா(15) 108 கிலோ உடல் எடை கொண்ட இவர் மூன்று நிமிட நேரத்தில் 150 சிட் அப்ஸ் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனைகளைப் பதிவு செய்தவர் ஜெட்லி புக் ஆப் ரெகார்டு நிறுவனர் டிராகன் ஜெட்லி. நடுவராக செயல்பட்டு மேற்கண்ட சாதனைகளைப் பதிவு செய்தார்.
இந்த சாதனைகள் வெற்றி பெற்றதற்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் தொடர் முயற்சியும், பயிற்சியும் தான் காரணம் என்கிறார், சாதனையாளர்களுக்குப் பயிற்சி கொடுத்த நிமலன் நீலமேகம். "வொர்க்கவுட் வொண்டர்ஸ் பவுன்டேஷன் என்னும் பெயரில் உடற்பயிற்சி மையத்தினை நிறுவி எண்ணற்ற சாதனையாளர்களை உருவாக்கி வருபவரும் இவரே.
இந்தச் சாதனைகள் குறித்து நிமலன் நீலமேகத்திடம் பேசியபோது...
""சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி எனக்கு சொந்த ஊர்.உளவியல் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். குத்துச் சண்டை வீரரான நான் கடந்த 2011-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும்போது, திருச்சி அருகே ஏற்பட்ட கார் விபத்தில் உடலில் 9 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் நடக்க முடியாமல் போனது. தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது ஊன்றுகோலின் உதவியுடன் மீண்டும் நடக்க முடிகிறது.
சிறு வயது முதல் ஏதேனும் ஒன்றை வாழ்வில் சாதிக்க வேண்டும் என்று நினைத்த எனக்கு லண்டனில் நடைபெற இருந்த குத்துச்சண்டை போட்டியில் நல்ல வாய்ப்பாகத் தெரிந்தது. ஆனால் விபத்து ஏற்பட்டதனால் அது கனவாகவே மாறிப் போனது. இருப்பினும் என்னால்தான் முடியவில்லை, பிறரையாவது சாதனையாளராக மாற்றலாமே என்ற எண்ணத்தில்தான்,
5 ஆண்டுகளுக்கு முன் இந்த உடற்பயிற்சி மையத்தினைத் தொடங்கினேன்.
இந்த மையத்தின் மூலம் முதலில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி
களுக்கு மன வலிமை குறித்தும், உடலியல் மொழி குறித்தும் வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கினேன். இங்கு பயிற்சி பெறும் இந்த இளைஞர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி வாழ்வில் ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். அதன் விளைவு தான் ஒரே மேடையில் 8 உலக சாதனைகளை அவர்களால் படைக்க முடிந்தது '' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


