ஸிகா வைரசுக்கு தடுப்பு மருந்து ஐதராபாத்தில் செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் முதன்முறையாக ஸிகா வைரசுக்கு எதிராக இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் கிருஷ்ணா எல்லா, இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், ""உலகில் முதலாவதாக ஸிகா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்தியாவில்தான். ஸிகா வைரஸ் தாக்குதல் பெரிய அளவில் தொடங்குவதற்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக ஸிகா வைரஸ்ஸின் மாதிரியை இறக்குமதி செய்து அதற்கு இரண்டு விதமான தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளோம். முதல் கட்ட பரிசோதனைக்கு இந்த மருந்தை விலங்குகளுக்குச் செலுத்தி அதன் முடிவுகளை ஆய்வு செய்த பிறகு மனிதர்களுக்கு இந்த மருந்தினைக் கொடுத்து பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் அனுமதி கேட்டுள்ளோம்'' என்கிறார்.
ஸிகா வைரஸிற்கான மருந்துகள் பல கட்ட பரிசோதனைகளைக் கடக்க வேண்டும் என்பதால் மருந்துகள் உடனே விற்பனைக்கு வர சில மாதங்கள் பிடிக்கலாம். அந்த கால இடைவெளிக்குள் ஸிகா வைரஸ் இந்தியாவிற்குள் புகுந்துவிடாமல் இருக்க வேண்டும்.
ஸிகா வைரஸ் நோய்க்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த நிறுவனமான பாரத் பையோடெக் நிறுவனத்தின் தலைவரான விஞ்ஞானி கிருஷ்ணா எல்லா, நடுத்தர விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பட்டம் பெற்று தாவர தடயவியல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றார். ""அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றில் உதவிப் பேராசிரியராக நான் பணியாற்றி வந்தபோது, "அங்கே வேலை செய்தது போதும்... இந்தியாவுக்கு திரும்பிவந்து ஏதாவது நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடி' } என்று எனது தாயார் கேட்டுக் கொள்ள, அப்போது மறுத்து விட்டேன்.
""ஆனால் எனது தாயார், "அப்பா கிருஷ்ணா..., உன் வயிற்றின் அளவு ஒரு சாண்தான்.. நீ எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், ஒரு சாண் வயிற்றுக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவுதான் சாப்பிட முடியும்... சம்பாதிக்கிற பணம் அத்தனைக்கும் சாப்பிட முடியாது. நீ திரும்பி வந்து என்ன வேண்டுமானாலும் செய். உனக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்...'' என்று தொடர்ந்து வற்புறுத்தியதும், மனம் மாறி ஹைதராபாத் வந்தேன். பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தை தொடங்கினேன்'' என்கிறார் கிருஷ்ணா.
வருவதற்கு முன் காப்போம் } என்பது இவரது முனைப்பு. புதிய நோய்கள் மக்களைத் தாக்குவதற்கு
முன், அவற்றுக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்யும் கிருஷ்ணாவின் தீவிர முயற்சியின் காரணமாக உலகிலேயே மிக குறைந்த விலையில் ஹெபிடைட்டிஸ் பி வைரஸýக்கு எதிரான தடுப்பு மருந்தை இவரது நிறுவனம் கண்டுபிடித்தது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கும் சொட்டு மருந்து, ரோட்டா வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து, ஜப்பானிய என்செபாலிட்டிஸ் கொசுவால் பரவும் வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து போன்றவை இவரது நிறுவனத்தின் வெற்றிக் கிரீடத்தின் வைரங்கள்.... இதுவரை நாடு முழுவதும் 3.5 பில்லியன் யூனிட் போலியோ சொட்டு மருந்தை இந்த நிறுவனம் விநியோகித்துள்ளது.
உலகையே புரட்டிப் போட்ட சிக்குன் குனியா நோய்க்கு காரணமான வைரஸ் கிருமி எது? என்பதை இவரது நிறுவனம்தான் முதன்முதலாகக் கண்டுபிடித்தது. அந்த வெற்றி, தற்போது, ஸிகா வைரசிற்கு எதிரான இரண்டுவகை தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்ததில் முடிந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


