திரைக் கதிர்
அந்தமான் தீவு பகுதிகளை களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "அந்தமான்.' சுதா மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கிறார். மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார்.


அந்தமான் தீவு பகுதிகளை களமாகக் கொண்டு உருவாகி வரும் படம் "அந்தமான்.' சுதா மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரிச்சர்ட் கதாநாயகனாக நடிக்கிறார். மனோசித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். மனோபாலா, வையாபுரி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். கதை, வசனம், பாடல்களை எழுதுகிறார் டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர். எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இயக்குகிறார். எஸ்.பி.எல். செல்வதாசன் இசையமைப்பில் ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.
விவாகரத்துகள் இப்போது அதிகமாகிவிட்டன. இதில் மாற்றம் வேண்டும் என்பதை முன் வைக்கும் படமாக உருவாகி வருகிறது "வில்லங்கம்.' குழந்தைகள் பிறந்து விட்டால், அந்த தம்பதிக்கு விவாகரத்து வழங்கக் கூடாது என்கிற கருத்து இதில் முக்கியமானது. நந்தா, காயத்ரி, சோனியா அகர்வால், மகேஸ்வரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ரா.நா.சரவணன் கதை எழுதி இயக்குகிறார். ஆணோ, பெண்ணோ யார் செய்த தவறுகளாக இருந்தாலும் அவற்றை ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான் கதையின் மையம். படத்தின் முக்கியமான சூழலில் இடம் பெறும் ஒரு பாடலை ஐ.ஏ.எஸ் அதிகாரி வெ.இறையன்பு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
க்யூபா நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கூறும் வார்த்தை "ஹோலா அமிகோ' என்பது. அந்தச் சொல்லை தமிழ்ப் படத்துக்கான பாடலொன்றில் தொடக்க வரியாக பயன்படுத்தியிருக்கிறார் அனிருத். சாய்பரத் இயக்கும் "ரம்' படத்துக்காக இப்பாடல் உருவாகியுள்ளது. ஹிரிஷிகேஷ், சஞ்சிதா நடித்துள்ள இப்படத்துக்காக அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல், இணைய தளங்களில் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சூழ்ந்த பெரும் மழை வெள்ளத்தால் சென்னை நிலை குலைந்தது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப ஒரு மாதத்துக்கும் மேலானது. அந்த நேரத்தில் அரசியல், ஜாதி, மதம் கடந்து மக்கள் பெருமளவில் நிவாரண உதவிகளில் இறங்கினர். இந்த மனிதநேயத்தை மையப்படுத்தி விக்ரம் உருவாக்கியுள்ள பாடல் "ஸ்ப்ரிட் ஆஃப் சென்னை.' இதில் சூர்யா, நயன்தாரா, அபிஷேக் பச்சன், நிவின்பாலி, கார்த்தி, பிரபுதேவா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்த வீடியோ பதிவு கடந்த வாரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நரிக்குறவர்களின் தற்கால வாழ்வைத் தழுவி உருவாகி வரும் படம் "கொள்ளிடம்.' லூதியா, ராசிக், வடிவுக்கரசி, ராமச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதாநாயகனாக நடிப்பதுடன் இப்படத்தை எழுதி இயக்குகிறார் நேசம் முரளி. வீர பழங்குடியினர் என்றழைக்கப்படும் நரிக்குறவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவி வாழ்கின்றனர். மாமன்னர் சிவாஜியின் படைகளில் பெரும் பங்கு இவர்களுக்கு இருந்தது. சிவாஜியின் ஒவ்வொரு வெற்றிகளிலும் முக்கிய இடம் வகித்து வந்த இவர்கள், பின் நாள்களில் நாடோடி வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர். காலப் போக்கில் இந்தியா முழுவதும் பரவி சிதறினர். இவர்களின் வாழ்வை முழுமையாக பதிவு செய்யும் நோக்கில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...