தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: முற்றவிடக் கூடாது!

என் வயது 45. ஒன்பது வருடங்களாக தைராய்டு உள்ளது. தைராய்டு வந்து ஒரு வருடம் கழித்து முடக்குவாதம் வந்தது. தட்ங்ன்ம்ஹற்ர்ண்க் அழ்ற்ட்ழ்ண்ற்ண்ள் என்கிறார்கள்.

News image
Updated On :5 செப்டம்பர் 2015, 2:46 pm

என் வயது 45. ஒன்பது வருடங்களாக தைராய்டு உள்ளது. தைராய்டு வந்து ஒரு வருடம் கழித்து முடக்குவாதம் வந்தது. தட்ங்ன்ம்ஹற்ர்ண்க் அழ்ற்ட்ழ்ண்ற்ண்ள் என்கிறார்கள். உடம்பு முழுவதும் ஊருகிறது. தேங்காய் எண்ணெய் போட்டால் அதிகமாகிறது. இதை எப்படி குணமாக்குவது?

ஆர். ஆறுமுகவள்ளி,  கே.ஆர்.நகர் - கோவில்பட்டி.

முடக்குவாதம் ஏற்படுவதற்கான சில காரணங்கள்:

நெஞ்சு எரிவை உண்டாக்கக் கூடிய அவரை, நெல், நீர்வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, மோர், தயிர் போன்றவை.

பொருந்தாத உணவுவகைகளாகிய வாழைப்பழம் + மோர், தயிர்வடை + காபி, பால் + உப்புவகை அன்னம், மீன் + பால், பலாப்பழம் + பால், கொள்ளு + பால், தயிரை சூடாக்கி உண்பது, தேனும் நெய்யும் சமஅளவு உண்பது போன்றவை.

இரத்தத்தைக் கெடுக்கக்கூடிய புளி, உப்பு, காரம் போன்ற உணவுவகைகள், உணவிற்குப் பிறகு பகல் தூக்கம், கடும்வெயிலில் சென்றுவிட்டு உடற்சூடு அடங்காதநிலையில் குளிர்ந்த பானங்களைப் பருகுதல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்றவை.

உறக்கம், கண்விழிப்பு, புணர்ச்சி ஆகியவற்றை முறைமீறிச் செய்வதாலும், பெரும்பாலும் நலினமான இயல்புடையவர்களுக்கும், நடமாட்டமற்றவர்களுக்கும் இந்த உபாதை தோன்றக்கூடும்.

அடிபடுதல், குடல் சுத்திமுறைகளை செய்துகொள்ளாதிருத்தல் ஆகியவற்றால் இரத்தம் கெட்டிருக்கக் கூடிய நிலையில் வாயுவைச் சீற்றமடையச் செய்கின்ற குளிர்ச்சியான பொருட்களால் வாயு கோபமடைந்து வழிமாறிச் சென்று மூட்டுகளைத் தாக்குவதால் முடக்குவாதம் ஏற்படுவதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

முடக்குவாதம் சிலநேரங்களில் பாதங்களில் ஆரம்பித்தும், சிலசமயங்களில் கைகளில் ஆரம்பித்தும் வேகமாக மற்ற மூட்டுகளிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இதில் மூட்டுகள், எலும்பு, எலும்புச்சத்து ஆகியவற்றில் வாயு வெட்டுவது போன்று சஞ்சரிக்கும். மிகுந்த வேகத்துடன் அப்பகுதிகளை உட்புறம் வளைக்கச் செய்யும். உடலெங்கும் செல்வதால் கால்களால் நடக்க இயலாமை என்ற நிலையையும் இது ஏற்படுத்தக்கூடும்.

வாயுவினுடைய இந்தச் சீற்றமானது மூட்டுகளில் வலி, துடிப்பு, குத்துவலி போன்றவற்றை அதிகரிக்கச் செய்யும். தசைநார்கள், விரல் கணுக்கள் ஆகியவை சுருங்கத் தொடங்கும். உறுப்புகளில் பிடிப்பு, மிக்க வலி, குளிர்ச்சியில் வெறுப்பு, குளிர்ச்சி ஒத்துக் கொள்ளாமை, உடல் விரைப்பு, நடுக்கம், உணர்ச்சியின்மை ஆகியவை காணப்படும்.

இதில் செய்ய வேண்டிய ஆயுர்வேத சிகிச்சை முறைகள் வரிசைக்கிரமமாக கூறப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக பூட்டுகளில் சென்றடையக்கூடிய அளவில் நெய்ப்புச் சிகிச்சை எனப்படும் நெய், மஜ்ஜை, மிருகக்கொழுப்பு மற்றும் தைலம் ஆகியவற்றை குடலின் தன்மைக்கேற்ப பருகச் செய்து எண்ணெய்ப் பசையை உடலெங்கும் உருவாக்கச் செய்யவேண்டும். அதன்பிறகு மூலிகைகளால் காய்ச்சப்பட்ட விளக்கெண்ணெய்யை பாலுடன் சேர்த்துக் குடிக்கச் செய்து பேதி மூலமாக குடல் பகுதியைச் சுத்தமாக்கவேண்டும். பாலுடன் மருந்துப் பொருட்களைக் காய்ச்சி அதனை ஆசனவாய் வழியாகச் செலுத்தி குடலை நெய்ப்புறச் செய்யும் யாபனபஸ்தி எனப்படும் சிகிச்சைமுறை மிகவும் சிலாக்கியமானது. ஏனென்றால் இந்த பஸ்தி பிரயோகத்திற்கு ஈடான வேறொரு சிகிச்சை இல்லை என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. புட்டம், விலாப்பக்கங்கள், தொடை, மூட்டுகள், குடல் ஆகியவற்றில் வலி உண்டானால் முக்கியமாக இந்த பஸ்தி சிகிச்சையைச் செய்ய வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. வாயு அதிகரித்த இந்த மூட்டு உபாதையில் தசமூலம் எனப்படும் பத்து வேர்களின் மூலிகைப் பொருட்களை பாலுடன் காய்ச்சி வெதுவெதுப்பாக உடலெங்கும் ஊற்றப்படும் சிகிச்சையினால் வலியானது விரைவில் நீங்கக்கூடும். வெளிப்புறப் பிரயோகங்களாகிய பிண்டதைலம், மதுயஷ்ட்யாதி தைலம், பலாதைலம் போன்ற மூலிகைத் தைலங்களை மேற்குறிப்பிட்ட சிகிச்சைகளுக்குப் பிறகு பயன்படுத்தலாம். ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சிகிச்சைமுறைகள் நன்றாகச் செய்யப்படுகின்றன. இந்த நோய் குணமாவதில் ஏற்படும் தாமதம் என்பது நோய் முற்றியநிலையில் ஏற்படக்கூடிய விஷயமாகும். ஆரம்பநிலையில் நிவாரணம் விரைவாக ஏற்படக்கூடும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.