ஓருசமயம் முத்துவடுகநாதர் வேட்டையாடச் சென்றார். அவருடன் பெரிய மருதுவும் சின்ன மருதுவும் துணையாகச் சென்றிருந்தனர். முத்துவடுகர் கரடி, புலி முதலில் கொடிய மிருகங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார்.
அச்சமயத்தில் வேங்கைப் புலியொன்று அவர் மீது சீறிப் பாய்ந்து அதனிடம் சிக்கி அரசர் உயிர் இழக்கப் போகிறார் என்று எல்லோரும் பயந்து செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தனர்.
வேங்கைப் புலி வெகுண்டு வருவதைப் பெரிய மருதுவும், சின்ன மருதுவும் நோக்கினர். உடனே ஒருவர் அந்த அரசருக்கு முன்னே வந்து நின்றார். மற்றவர் பக்கத்தில் வைத்திருந்த வேலை வாங்கி அவ்வேங்கைப் புலியின் மேல் வீசினார். அவ்வேல் வந்து தாக்கியதும், வேங்கை சீற்றமெடுத்து மீண்டும் சீறிப் பாய்ந்தது.
அரசருக்கு முன்னே இருந்தவர் அவ்வேங்கையை மறிக்க முயன்றார். எனினும் வேங்கை அரசர் மீது பாய்ந்துவிட்டது. உடனே மற்றொருவர் ஓடி வந்து வேங்கைப் புலியைக் குத்திக் கொன்றார். அதனால் முத்துவடுகநாதர் நூலிழையில் உயிர் தப்பினார்.
அதுகண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருவருக்கும் பல பரிசுகள் வழங்கிப் பதவி உயர்வும் கொடுத்தார். மருது சகோதரர்கள் இருவரும் அந்நாள் முதல் சேனையின் தளபதிகள் ஆயினர். சீரும் சிறப்புமான சிவகங்கைச் சீமையை வெகு சிறப்பாக காவல் காத்து வந்தனர்.
இவர்களின் வீரத்தைப் பின்னாளில் இவர்களுடன் நெருக்கமாகப் பழகி மகிழும் வாய்ப்பைப் பெற்ற வெள்ளைத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் அவர்களது வீரவாழ்வை தமது நாட்குறிப்புகளில் இவ்விதம் சித்தரித்து வரைந்துள்ளனர். அவர் எழுதிய வார்த்தைகள்தான் மருது சகோதரர்களில் வீரத்தை உண்மையிலேயே நாம் நேரில் காண்பது போன்ற ஒரு தோற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
"இந்திய விடுதலையின் தியாகச் சுடர்கள்' என்னும் நூலிலிருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


