லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்

கத்திரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் நன்றாக குழையும்.

News image
Updated On :26 ஜூலை 2015, 11:22 am

கத்திரிக்காயை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்தால் கத்தரிக்காய் நன்றாக குழையும்.

கோஸ் பொரியல் செய்யும்போது சிறிதளவு பால் சேர்த்தால் கெட்ட வாடை வராது. பொரியலும் ருசியாக இருக்கும்.

பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி வைத்து சிறிது புளித் தண்ணீர் தெளித்து கலந்து வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்து வதக்கினால் கசப்பே இருக்காது.

தாளிக்கும் எண்ணெய்யிலேயே சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய்கறிகளைப் போட்டு வதக்கினால் அவை நல்ல நிறத்துடன் இருக்கும்.

ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

புளித்த தோசை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்த பணியாரம் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.