கயானா கூட்டுறவு குடியரசு நாட்டின் இன்றைய பிரதமர், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட மோசஸ் வீராசாமி நாகமுத்து என்ற தமிழ் வம்சாவளி வந்த இந்தியராவார்!
தென் அமெரிக்கா, கரீபியன் பகுதியிலுள்ள கயானா கூட்டுறவு குடியரசு நாட்டின் பிரதமராகவும், முதலாவது துணை ஜனாதிபதியாகவும் இருந்தவர். இவர் 2015 மே 20 தொடக்கம் பதவியில் இருந்து வருகிறார். நாட்டின் 9-ஆவது பிரதம மந்திரியாவார். 68 வயதான இவர் துவக்கத்தில் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், பிறகு வழக்குரைஞராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1992லிருந்து கயானா நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றார்.
இவர் அந்நாட்டின் பிரதான எதிர் அணியான ""மாற்றத்திற்கான கூட்டணியை''ச் சேர்ந்தவர். இவர் அங்கு நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த, பிகாரை பூர்வீகமாகக் கொண்ட இந்தி பேசும் பிரதமரையும், சுதேசியப் பிரதமரையும் தேர்தல் களத்தில் வீழ்த்தி பதவியேற்றுக் கொண்டுள்ளார். கயானா சரிபாதி சுதேசி மக்களையும், இந்தியாவிலிருந்து சென்ற பெரும்பாலான இந்தி மொழி பேசும் மக்களின் வழிவந்த கிழக்கு இந்தியர்களையும், சொற்ப எண்ணிக்கையிலான வெள்ளை நிற மக்களையும், தமிழ் வம்சாவளிகளையும் கொண்ட நாடாகும். இதன் மக்கள்தொகை சுமார் 77,5000 ஆகும். இதில் தமிழ் வம்சாவளிகள் 5 சதவீதமாவர்.
இவர்கள் 1860-இல் அங்கு சென்ற 2000 தமிழர்களின் வழிவந்தவர்களாவார்! அந்நாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து தோட்டங்களில் பணிபுரிய 1838 தொடக்கம் மக்கள் செல்லத் தொடங்கினர். மிகச் சிறுபான்மையினராக இருந்தும் இன்று சகல துறைகளிலும் இவர்களின் வழித்தோன்றல்கள் அந்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர். அப்படிப்பட்டவர்தான் கயானாவின் தற்போதைய பிரதமராவார். இவர் 1950, 1960-களில் அங்கு குடியேறியிருந்த சென்னை மீனவ தமிழ்க்குடும்பங்கள் பற்றி இவர் புனைந்துள்ள ""ஹென்றியின் பண்டிதம்'' என்ற ஆங்கிலப் புத்தகம் பலராலும் பாராட்டப்பட்டவையாகும்.
இவர் மாற்றத்தைப் புகுத்துவதாக சூளுரைத்து இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியைப்போல் தீவிர எதிர்ப்பு அணியைத் திரட்டி கயானாவில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள துணிவும் தீரமும், ஆளுமையும் மிக்கவர் என்று அறியப்படுகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் இந்தியக் குடியரசு தின விழாவிற்கு இவரை பிரதம விருந்தினராக அழைத்து கௌரவிக்க வேண்டும் என்பதே அந்நாட்டு தமிழ் மக்களின் விருப்பமாக இருக்கிறது. இவருக்கு சீதா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவரது மகன் ஒருவரின் பெயர் துரை வையாபுரி என்பதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


