திரைக்கதிர்
மனம் கவர்ந்தவர்களை ஆல்பத்தின் மூலம் கெüரவிப்பது ராகவா லாரன்ஸின் வழக்கம். கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு


மனம் கவர்ந்தவர்களை ஆல்பத்தின் மூலம் கெüரவிப்பது ராகவா லாரன்ஸின் வழக்கம். கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். ஆல்பத்துக்கு அனைத்து தரப்பிலும் பெரும் வரவேற்பு. இப்போது நரேந்திர மோடிக்காக ஓர் ஆல்பம்... "மீண்டும் ஒரு சுதந்திரம்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த ஆல்பத்துக்கான காரணங்களைக் கூறுகிறார் ராகவா லாரன்ஸ்: ""இந்திய இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்ட ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இனி நரேந்திர மோடி வருங்கால இந்திய இளைஞர்களுக்கு உதாரண புருஷராக விளங்குவார். டீ விற்ற சிறுவனின் கையில் இன்றைய இந்தியா இருப்பதைச் சிறப்பிக்கவே இந்த ஆல்பம். இந்தியர்கள் மத்தியில் இப்போது இருக்கும் புத்துணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாகவும் இது இருக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது'' என்றார்.
"அன்னக்கிளி' படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா தேர்வான போது எதிர்த்த பலருக்கும் பதிலடி தர பஞ்சு அருணாச்சலம் சொன்ன சூழ்நிலைகளுக்கு அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அனைத்துப் பாடல்களுக்கும் இசையமைத்து, தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா. ""உங்களின் மாஸ்டர் பீஸ் என எதைக் கருதுவீர்கள்?'' என நிருபர் ஒரு முறை கேட்க, ""கார்த்திக், யுவன், பவதாரணி ஆகியோரே எனது சிறந்த மாஸ்டர் பீஸ் படைப்புகள்'' என பதிலளித்தார் இளையராஜா. ""மிகவும் உயர்ந்த இசை இதுவரை நாம் கேட்காத இசையே'' இதுதான் இசை குறித்து இளையராஜா அடிக்கடி கூறுவது.
"ஐ' படப்பிடிப்பு முடிந்த நிலையிலும், இன்னும் பாடல்கள் முழுமையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த "ஐ' படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. இப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது. தற்போது அத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கான இசையை இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் முடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அது முடிந்த பின்னரே பாடல்களுக்கான காட்சிகளை ஷங்கர் படமாக்க வேண்டும். எனவே இசை வெளியீட்டு விழா தள்ளிப் போகும். இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகிறது. இந்நிலையில் பாடல்களுக்கான இசையை ரஹ்மானிடம் இருந்து பெற வேண்டும் என்பதற்காக பாடல் கம்போசிங்கின் போது கூடவே இருக்கிறாராம் ஷங்கர். ஏற்கெனவே படத்தின் ஆடியோ ரிலீஸ் பற்றி தகவல் வெளியாகி அதுவும் பிறகு தள்ளிப் போயிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ ரிலீûஸ மிக பிரம்மாண்டமாக நடத்த எண்ணியுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் அது குறித்த ஏற்பாடுகளைத் தொடர முடியாமல் உள்ளார்.
மணப்பெண் அமலாபால் கைவசம் இருந்த வாய்ப்புகளைக் கைப்பற்ற நடிகைகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. லிங்குசாமி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களைத் தவிர்த்து சமந்தாவுக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இதனால் அமலாபால் ஒப்புக் கொண்டிருந்த படங்களில் நடிக்க இயக்குநர்களுக்குத் தூது விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த போட்டியில் ஸ்ருதிஹாசனும் உள்ளார். தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, சமீபத்தில்தான் விஷால் ஜோடியாக "பூஜை' படத்துக்கு ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்குத் தமிழில் தொடர்ந்து நடிக்கும் திட்டத்தோடு ஸ்ருதி இருக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்காத வாய்ப்புகளைக் கவர பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா போன்ற இளம் நடிகைகள் போட்டியில் குதித்துள்ளனர். இந்த வகையில் மூன்று படங்களின் வாய்ப்புகளை பிந்துமாதவி கைப்பற்றி இருக்கிறார். லட்சுமிராய் நடிக்கவிருந்த இரண்டு பட வாய்ப்புகளை ஸ்ரீதிவ்யா பறித்துள்ளார்.
பாலிவுட்டில் நடிகர்கள் டாட்டூ மோகத்தில் மூழ்கி உள்ளனர். டாட்டூ போட்டுக் கொள்ளாத நட்சத்திரங்களே இல்லை. தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் இலியானாவும் விதவிதமான டாட்டூகளை வரைந்து கொள்ளும் கட்டாயத்தில் உள்ளார். இவரைப் பார்ப்பவர்கள் ""டாட்டூ வரைந்திருக்கிறாயா?'' என்று கேட்கிறார்களாம். இதையடுத்து சமீபத்தில்தான் இடது கையில் "இன்ஸ்பயர்' என்ற ஆங்கில வார்த்தையை வரைந்து கொண்டார். அவ்வப்போது பார்ட்டிகளில் சந்திக்கும் நட்சத்திரங்கள் விதவிதமான டாட்டூகளை பற்றி இலியானாவிடம் பேச, ஒரு சிலர், ""இப்போது குத்தியிருக்கும் இதுவெல்லாம் ஒரு டாட்டூவா?'' என கேட்க அப்செட் ஆகி விட்டாராம் இலியானா. இதையடுத்து வித்தியாசமான புது டாட்டூகளை வரையத் திட்டமிட்டு, புது வகையான டாட்டூ டிசைன்களை அவர் தேடி வருகிறார்.
அமீர்கான் முழுவதுமாக மாறி விட்டார். கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதாகச் சொல்லியும் ஒரு கார் விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டார். இதே போல் இன்ன பிற பல விளம்பர வாய்ப்புகளும் அமீர் பக்கம் திரும்ப, எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ""சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி நடத்திய பின், எந்த பொருளுக்கும் விளம்பரம் செய்ய மனம் வரவில்லை. சமூக பிரச்னைகள் சார்ந்த விளம்பரங்கள் என்றால் எப்போதும் நடிக்க தயார். பணம் கொடுத்துப் பெற முடியாத பல உணர்வுகளை சமூகத்தோடு ஏற்பட்டுள்ள சில அனுபவங்கள் எனக்குக் கொடுத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் போலி என்கிற நிலை உருவாகி விட்ட நிலையில், மக்களுக்கு அது குறித்த தெளிவை ஏற்படுத்த யாரும் முன் வரவில்லை. இந்த நிலை தற்போதைய இந்தியாவுக்கு பெரும் சவால். இது விரைவில் தீர்க்கப்பட வேண்டும். அதற்கு எந்த வகையிலாவது நானும் பிறரும் பங்கெடுக்க வேண்டும்'' என டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ந்து பதிவு செய்திருக்கிறார் அமீர்கான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...