டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக்கதிர்

கர்ணன், "வசந்த மாளிகை', "நினைத்தாலே இனிக்கும்' படங்களின் வரிசையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது "ஆயிரத்தில் ஒருவன்'.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:05 am

ஜி. அசோக்

1. கர்ணன், "வசந்த மாளிகை', "நினைத்தாலே இனிக்கும்' படங்களின் வரிசையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது "ஆயிரத்தில் ஒருவன்'. 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படம் கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து தென்னிந்தியாவில் வெளிவந்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. எம்.ஜி.ஆருடன் இணைந்து முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமும் இதுவாகும். பிரம்மாண்ட கடல் சார்ந்த காட்சி அமைப்புகள், செந்தமிழ் வசனங்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களை பெற்ற இப்படத்தில் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 48 ஆண்டுகளுக்கு பின்பு நவீன தொழில்நுட்பங்களில் புதுப்பிக்கப்பட்டு வெளிவர இருக்கிறது. டி.டி.எஸ். சவுண்ட் சிஸ்டம்... சினிமாஸ்கோப் மெருகேற்றல்... விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இசைத் தன்மை குன்றாமல் புதுப்பிக்கப்பட்ட ஆடியோ... நவீன முறையில் திரையிடும் க்யூப் முறை... உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் இப்படம் வெளிவர இருக்கிறது. ஏற்கெனவே சிவாஜியின் "கர்ணன்' படத்தை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட்ட ஜி.சொக்கலிங்கம் திவ்யா பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை வெளியிடுகிறார். பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
 
2. நடிகர் தனுஷ் சொந்தப் பட நிறுவனம் தொடங்கி "எதிர்நீச்சல்' படத்தைத் தயாரித்தார். இதில் நடித்த சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் ஹீரோவாக வலம் வருகிறார். தனுஷ் தற்போது தானே நடிக்கும் "வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தயாரிக்கிறார். "பாண்டிய நாடு' படத்தின் மூலம் தயாரிப்பாளரான விஷால் தற்போது "நான் சிவப்பு மனிதன்' படத்தை நடித்து, தயாரிக்கிறார். விக்ராந்த் நடிக்க உள்ள படத்தையும் தயாரிக்க உள்ளார். ஆர்யா ஏற்கெனவே சுகா இயக்கத்தில் "படித்துறை' படத்தைத் தயாரித்து உள்ளார். அப்படம் வெளிவராத நிலையில், அடுத்தடுத்த படங்களை தயாரிக்கும் ஆர்வத்தில் உள்ளார். சூர்யா "டி2' பெயரில் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தரும் நோக்கில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்த பட்டியலில் விஜய் சேதுபதியும் தற்போது இடம் பிடித்திருக்கிறார். "சங்குதேவன்' படத்தை நடித்துத் தயாரிப்பதுடன், புதுமுகங்கள் நடிக்கும் "ஆரஞ்சு மிட்டாய்' படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
 
3. இயக்குநர் பாலாவின் இணை இயக்குநராகப் பணியாற்றி, "ஆச்சார்யா' படத்தின் மூலம் பரவலான பாராட்டுக்களைப் பெற்ற ரவி அடுத்து இயக்கும் படம், "என்னதான் பேசுவதோ'. விஜய்ராம், விக்னேஷ், சின்னச்சாமி உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படம் குறித்து ரவி.... ""பெண் குழந்தைகளை வறுமைக்காக விற்கிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைத் துரத்திப் பிடித்த போது, நிறைய அதிர்ச்சிகள் காத்திருந்தன. வறுமைக்காக பெண் குழந்தைகளை விற்கும் கூட்டமும், குழந்தைகளை வாங்கி வளர்த்து மீண்டும் மறு விலைக்கு விற்பதற்கென்றே தரகர் கூட்டமும் உள்ளது என்பது அதிர்ச்சியான தகவல். அப்படி விற்கப்பட்ட ஒரு பெண் குழந்தையின் கதைதான் இது. கங்கை சமவெளிப் பகுதிகளில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. "ஆச்சார்யா' படத்துக்கு பின் வாய்ப்புகள் வந்த போதிலும் கதைக்காக காத்திருந்தேன். அது நன்றாகவே கைக்கூடி வந்திருக்கிறது'' என்றார் ரவி.
 
4. தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் எவ்வளவு தூரம் மறந்து வந்து விட்டோம் என்பதை உணர்த்தும் படமாக உருவாகி வருகிறது "இது என்ன மாற்றம்'. புதுமுகம் சத்தியநாராயணன் எழுதி, இயக்கும் இப்படத்தில் நிபின், சீமா, மீரா, மது உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தமிழக - கேரள எல்லைப் பகுதியைக் களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் கதைக் கரு குறித்து இயக்குநரிடம் கேட்ட போது... ""பெண்மை, கூட்டு குடும்பம், இல்வாழ்க்கை என பேசிய படங்கள் உன்னத கருத்துகளை எடுத்து வைத்தன. நம் கலாசாரம் எப்படிப்பட்டது? பண்பாட்டின் தொன்மை என்ன? என்பதைப் புரிய வைக்கிற படங்கள் இப்போது குறைவு. கடந்து வந்த இந்த வாழ்க்கையை எவ்வளவு தூரம் மறந்து விட்டோம் நாம்? நவ நாகரிகம் என்ற பெயரில் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம். கலாசாரம் சார்ந்த படங்கள் எழுந்து வருமா? என்பது கேள்விக் குறிதான். கொஞ்சம் ஆழமாக யோசித்து நம் பார்வையில் இருந்து போய் விட்ட கலாசார வாழ்வை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறேன். நிச்சயம் பாராட்டுக்குரிய படமாக இருக்கும்'' என்கிறார் இயக்குநர்.
 
5. மகிமா - "சாட்டை' படத்தின் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றவர். இவர் அடுத்து நடித்து வரும் படம் "மொசக்குட்டி'. முதல் படத்தின் மூலம் குறிப்பிடத் தகுந்த அறிமுகம் இருந்த போதும், கதை தேர்வுகளில் அதீத கவனம் செலுத்துவதால் பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறார். ""சினிமாவில் கடினமாக உழைக்க வேண்டும். மற்றவர்கள் நினைப்பது போல் நடிப்பு ஒன்றும் ஜாலியான வேலை இல்லை. தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்கும் போது அலுப்புத் தட்டி விடும். எனவே புதுமுகமாக அறிமுகமாகும் போது வேடங்களைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை. வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்தால் ஒரே பாணியிலான படங்களைத் தவிர்க்க முடியும். ஆனால் ஆரம்ப காலங்களில் ஒரே மாதிரியான படங்களைத் தவிர்ப்பது கடினம். அப்படியே வந்தாலும் பயப்படக்கூடாது. சில படங்களைத் தைரியமாக நான் மறுத்துள்ளேன். "சாட்டை' படத்துக்குப் பின் "மொசக்குட்டி' வேறு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கும் கதையாக இருந்தது. மலையாள சினிமாக்களில் வாழ்க்கையையொட்டிய கதை இருக்கும். அது மாதிரியான சினிமாக்கள் பிடிக்கும் என்பதால், அதை நான் எதிர்பார்க்கிறேன். "மொசக்குட்டி' அது மாதிரியான வாழ்க்கையின் பதிவுதான். அதே நேரத்தில் காமெடியும் இருக்கும்'' என்றார் மகிமா.
 
6. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த த்ரிஷாவுக்கு கன்னடத்தில் நடிக்காதது பெரிய குறை. பத்தாண்டுகளை நிறைவு செய்து விட்ட த்ரிஷாவுக்கு இப்போதுதான் கன்னட வாய்ப்பு கிட்டியிருக்கிறது. தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான "துக்குடு' படத்தின் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஏற்கெனவே த்ரிஷாவை கன்னட சினிமாவுக்கு அழைத்து வர தயாரிப்பாளர்களும், முன்னணி நடிகர்களும் முயற்சித்தனர். ஆனால் தொடர்ந்து மறுத்து வந்தார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி இடத்தில் இருந்தாலும், கன்னடத்தில் கடும் போட்டி இருந்த காரணம்தான் த்ரிஷாவின் மறுப்புக்குக் காரணம். இதற்கிடையில் இப்போது கன்னட வாய்ப்பு... தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் கன்னட வாய்ப்பை இப்போது மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் இதே படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட நீது சந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒரு பாடலுக்கு ஆட நீது சந்திராவை இயக்குநருக்கு சிபாரிசு செய்துள்ளாராம் த்ரிஷா.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.