டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திரைக் கதிர்

மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:03 am

ஜி. அசோக்

மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை மற்றொருவருக்கு பொருத்த நடக்கும் சாகசப் பயணத்தை மையமாகக் கொண்டு, மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற "டிராபிக்', "சென்னையில் ஒரு நாள்' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மூன்று தேசிய விருதுகளை பெற்ற "உஸ்தாக் ஓட்டல்' விரைவில் ரீமேக்காக இருக்கிறது. இதையடுத்து மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற "சாப்பா குரிச்சி', "புலிவால்' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விமல், பிரசன்னா, அனன்யா, ப்ரணிதா நடிக்கின்றனர். "கண்ணோடு கண்ணாக' படத்தை இயக்கிய மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். என்.ஆர்.ரஹ்நந்தன் இசையமைக்கிறார். செல்போனை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகிறது. ராதிகா சரத்குமாரின் ஐ ப்ரேம்ஸþடன் இணைந்து இப்படத்தை மலையாள தயாரிப்பாளர் லிஸ்பன் ஸ்டீபன் தமிழில் தயாரிக்கிறார்.
 
 தன்னைக் காதலிக்கும் கோபிசந்திடம் மூன்று பேரை கொல்லச் சொல்கிறார் தீக்ஷா சேத். காதலியின் வார்த்தையை கேட்டு, அந்த மூவரையும் கொல்கிறார் கோபிசந்த். அந்த மூவரும் யார்? எதற்காக அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை திரில்லர் ப்ளஸ் ஆக்ஷன் கலந்து, தெலுங்கில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் "வான்டட்'. இப்படம் தமிழில் "வேங்கை புலி' என்ற பெயரில் டப் ஆகிறது. லஷ்மி லோட்டஸ் மூவி மேக்கர்ஸ் எஸ்.ஜி.ஆர்.பிரசாத், வேல் ஃபிலிம்ஸ் கோவை வேல்முருகன் தயாரிக்கின்றனர். கோபிசந்த், தீக்ஷா சேத், பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். ஏப்ரலில் படம் வெளியாகிறது.
 
 வாரிசுகள் வரிசையில் சேருகிறார் இயக்குநர் வசந்தின் இரண்டாவது மகன் ரித்விக் வருண். வசந்த் தற்போது இயக்கும் "மூன்று பேர் மூன்று காதல்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ள இவர், விரைவில் ஹீரோவாகவும் அவதாரம் எடுக்க இருக்கிறார். இது தொடர்பாக வசந்த் கூறும் போது, ""ஆதித்யா, ரித்விக் வருண் என எனக்கு இரண்டு மகன்கள். சினிமா ஆசையில் சுற்றி வந்த ரித்விக் அருண், முறைப்படி சண்டை கற்றான். நடனம் கற்றான். சினிமாவுக்குத் தேவையான அனைத்து வகையான பயிற்சிகளையும் முறையாகப் பெற்றான். அவனது ஆசையை அறிந்து என் இயக்கத்திலேயே அறிமுகப்படுத்தி இருக்கிறேன். கடுமையாக உழைத்து நல்ல பெயரை எடுப்பது வருண் கையில்தான் இருக்கிறது'' என்றார் இயக்குநர் வசந்த்.
 
 தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அசின், "கஜினி' மூலம் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை அவர் நடித்த 6 ஹிந்தி படங்களில் 5 படங்கள் ஒவ்வொன்றும் ரூ. 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பாலிவுட் பத்திரிகைகள் அசினை ""100 கோடிகளின் ராணி'' என குறிப்பிடுகின்றன. ஆனால் அசின் சமீபத்தில் கொடுத்திருக்கும் ஸ்டேட்மெண்ட் வேறு மாதிரியானது. ""இனி மேல் நடிப்பது பற்றி தெளிவான முடிவு எடுத்திருக்கிறேன். இந்த ஆண்டில் குறைவான படங்களையே ஒப்புக் கொள்வேன். பாக்ஸ் ஆபிஸ் ஹிட், 100 கோடி வசூல் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். இனி அடுத்தக் கட்டமாக நடிப்பில் முன்னேற்றமான மாற்றங்களை எதிர்பார்க்கிறேன். அதற்கான மாற்றங்களையும் செய்திருக்கிறேன். இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். இப்படியொரு முடிவை எடுப்பதற்கு இதுதான் சரியான தருணம். ஏனென்றால் சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் சுதந்திரம் என்னிடம் உள்ளது.''
 
 "மலையூர் மம்பட்டியான்', "சீவலப்பேரி பாண்டி' உள்ளிட்ட படங்களின் வரிசையில் தனி மனித வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் படம் "வீரன் முத்து ராக்கு'. 40-களில் தென் மாவட்டங்களில் வாழ்ந்த தனி மனிதனின் சாகச வாழ்வை இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப கற்பனை கலந்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். முத்துராஜூ என்ற சிலம்பாட்ட வீரனுக்கும், ராக்கு என்ற பெண்ணுக்கும் ஏற்படும் காதல், இரண்டு கிராமங்களுக்கிடையான ஆண்டாண்டு கால பகையை எப்படி தீர்க்கிறது என்பதுதான் திரைக்கதை. "வெளுத்துக்கட்டு' படத்தில் நடித்த கதிர், லியாஸ்ரீ, சண்முகராஜன், "ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, படத்தை எழுதி இயக்குகிறார் ராஜசேகர்.
 
 மீண்டும் ஓய்வுக்கு செல்கிறார் அஜித்.
 ஃபார்முலா ரேஸ், ஷூட்டிங் காயம் என இதுவரை 14 ஆபரேஷன்களை முடித்துள்ள அஜித்துக்கு, மீண்டும் காயம். விஷ்ணுவர்தன் இயக்கும் "வலை' படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்தது. அப்போது காரின் முன்பகுதியில் தொங்கியபடி அஜித் சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. நிலை தடுமாறிய அவர் ஓடும் காரின் முன் பகுதியில் இடறி விழ இருந்தார். கால் மட்டும் சக்கரத்தில் சிக்கி ரத்தம் கொட்டியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பரிசோதித்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனால் ஆபரேஷன் செய்து கொள்வதாக கூறியுள்ளார் அஜித். "வலை' படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து "சிறுத்தை' சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அக்டோபர் மாதம் 21-ம் தேதி ஆபரேஷன் நடக்க இருக்கிறது. இதன் பிறகு நான்கு மாதம் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.