லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

விமானப் பயணமா? வேண்டவே வேண்டாம்!

சமீபத்தில் நேபாளத்தின் வடக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் தரையிறங்கும்போது, மலை முகட்டின் மீது மோதி நொறுங்கியது. இதில் 15 பேர் இறந்து போனார்கள். இவர்களில் 13 பேர் இந்தியர்கள்.  தமிழ்ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:29 am

சமீபத்தில் நேபாளத்தின் வடக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற விமானம் தரையிறங்கும்போது, மலை முகட்டின் மீது மோதி நொறுங்கியது. இதில் 15 பேர் இறந்து போனார்கள். இவர்களில் 13 பேர் இந்தியர்கள்.

 தமிழ்நாட்டிலிருந்து நேபாளம் பக்தி சுற்றுலா அழைத்துச் செல்லும் பஸ்கள்... சுற்றுலா சர்வீஸ்கள், நேபாளம் சென்றதும் தங்கள் பயணிகளை நேபாள அரசிடம் ஒப்படைத்து விடுகின்றன. நேபாளத்திலிருந்து திரும்பும் வரை பயணிகளுக்கு அவர்கள்தாம் பொறுப்பு. இந்தப் பயணத் திட்டத்தில் சில உல்லாச அனுபவங்கள் உண்டு. காஸினோ போன்ற கேளிக்கை இடங்களுக்கும் அழைத்துப் போவார்கள். அதைவிடவும் உற்சாக மூட்டும் சிறு விமானப் பயணங்களும் உண்டு.

 சிறு விமானத்தில் பயணிக்கிறோம்... சுலபமாகச் சென்று திரும்புகிறோம் என்ற நம்பிக்கையில் இந்த பயணங்களுக்குக் கிராக்கி உள்ளது. ஆனால் அவற்றில் உள்ள ரிஸ்க்கை பயணிகள் அறிவதில்லை.

 பைலட்டுக்குப் போதுமான ஓய்வோ, என்

 ஜினை சர்வீஸ் செய்வதோ இல்லாமல் தொடர்ந்து இயக்குகின்றனர். அதுமட்டுமல்ல, இமயமலைத் தொடரில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது திடீரென வானிலை மாறலாம். மூடு பனி ஏற்பட்டு பயணத்தின் போது எதிர்ப்படுகின்ற மலைகளை, குன்றுகளை மறைக்கலாம்.

 நேபாள "அக்னி ஏர்' என்ற தனியார் விமானம், பெக்ஹாரா நகரிலிருந்து சிறந்த சுற்றுலாத் தலமும், மலையேற்றத்துக்குப் பிரசித்தி பெற்ற இடமுமான ஜோம்ஸம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இறங்க வேண்டிய இடத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், வானிலை மோசமாக இருந்ததாலும், இறங்க இயலாமல், கிளம்பிய இடத்துக்கே திரும்ப புறப்பட்டுச் சென்றபோது, மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தான் 15 பேர் இறந்து போனார்கள்.

 இதே ஏர் அக்னியின் மற்றொரு விமானம், 2010 இல் எவரெஸ்ட் நோக்கிப் பறந்தபோது, மோதி நொறுங்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர்.

 டிசம்பரில் ஒரு குட்டி விமானம், காத்மாண்டு அருகில் மோதி நொறுங்கியது. அனைவரும் இறந்தனர்.

 அதற்கு மூன்றுமாதம் முன்பு புத்தா ஏர் விமானம் ஒன்று காத்மண்டில் மோதி நொறுங்கியது.

 இந்த விபத்துக்களுக்கெல்லாம் அதிகாரிகள் கூறும் ஒரே காரணம்.... வானிலை சரியில்லை என்பதுதான்!

 வானிலை சரியில்லாதபோது ஏன் விமானத்தை இயக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

 இதற்கு நம்மிடமே பதில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஏராளமாய் வருவதால்,அவர்களைப் பயன்படுத்தி, நிறைய பணம் சம்பாதிக்க பல விமான நிறுவனங்கள் துடிக்கின்றன. நம் ஊரில் பண்டிகை காலங்களில் கூட்டத்தைப் பார்த்து, தூங்காத சரியான ஓய்வை அனுபவிக்காத டிரைவரைக் கூப்பிட்டு பஸ்ûஸ ஓட்டச் சொல்வதுபோல், விமானங்களை ஓட்டச் சொல்கின்றனர். இதனால் விமானத்துக்கும், பைலட்டுக்கும் போதிய ஓய்வு கிடைப்பதில்லை. விமானத்தில் உள்ள பிரச்னைகள் கண்டு கொள்ளப்பட்டு, பராமரிப்புச் செய்வதில்லை. உண்மையில் இதனால்தான் விபத்து நடக்கிறது. ரிஸ்க் எடுத்து பயணிகள் வருகிறார்கள். அப்படியிருக்கையில் எங்களை மட்டும் குறை கூறினால் எப்படி என விமான நிறுவனங்கள் கூறுகின்றன. காத்மாண்டு அரசோ இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. ஆக அவர்களால் பாதிக்கப்படுவது சுற்றுலா பயணிகள்தாம்! இந்தியப் பயணிகள்தாம்!

 இந்தியப் பயணிகளை அழைத்துச் செல்லும் உள்ளூர் டிராவல் நிறுவனங்கள், பயணிகளைக் கண்காணிப்பதுடன், பாதுகாப்பானவை எவை என்பதையும் கண்டுபிடித்து, அதில் பயணிக்க உதவ வேண்டும். உல்லாச பயணிகளும் வெளிநாட்டில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து ஆசையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.