/

சமையல்

கேரட் பாயாசம் தேவையானவை: கேரட்- 100 கிராம் பால்-50 கிராம் சர்க்கரை- 50 கிராம் முந்திரிப்பருப்பு-10 திராட்சை-10 ஏலக்காய்-4 செய்முறை: கேரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் வேக வைக்க வேண்ட

News image
Updated On :2 ஜனவரி 2024, 5:14 pm

ஆர். ஜெயலட்சுமி



கேரட் பாயாசம்

தேவையானவை:

கேரட்- 100 கிராம்

பால்-50 கிராம்

சர்க்கரை- 50 கிராம்

முந்திரிப்பருப்பு-10

திராட்சை-10

ஏலக்காய்-4

செய்முறை: கேரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் வேக வைக்க வேண்டும். பின்பு விழுதாக அரைத்தெடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கேரட் விழுதைச் சேர்த்து வாசனை போக வதக்க வேண்டும். பின்னர் சர்க்கரை, கேரட் வேகத் தேவையான தண்ணீர், பால் சேர்த்து வேக விட வேண்டும். நன்றாகக் கொதித்து வரும்போது ஏலக்காயைத் தூவி அடுப்பிலிருந்து கீழே இறக்க வேண்டும். சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்துப் பாயாசத்தில் சேர்க்க வேண்டும். சத்தான சுவையான பாயாசம் இது.

நிம்கி

தேவையானவை:

மைதா- 200 கிராம்

நெய்- 2 மேஜைக்கரண்டி

மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி

சீரகம்- 2 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய்-

தேவையான அளவு

செய்முறை: மைதா, உப்பு, மிளகாய்த்தூள், சீரகம் ஆகியவற்றை உருக்கிய நெய்யுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் தெளித்துப் பூரி மாவு போல பிசைய வேண்டும். சிறிய உருண்டைகளாகச் செய்து பூரியாக இட்டு முக்கோண வடிவில் மடக்கி லேசாக அப்பளக் குழவியில் உருட்டிக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பூரிகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.