என் வயது 63. மயக்கமும், இடதுகாதில் இரைச்சலும், காது கேளாமையும் அடிக்கடி வருகிறது. மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் வழியாகப் போதுமான ரத்தமும், பிராண வாயுவும் கிடைக்காத காரணத்தால் இவ்வாறு நிகழ்கிறது என்று கூறுகிறார்கள். இரவில் சரியான தூக்கம் இருப்பதில்லை. மறுநாள் கடுமையான சோர்வுநிலையை அடைகிறேன். இதற்கு ஆயுர்வேதத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா?
மனிதர்களுடைய மார்புப் பகுதியில் அவலம்பகம் என்று ஒரு கபம் இருந்து கொண்டு வேலை செய்கிறது. முதுகுத் தண்டுவடத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள வாத தோஷத்தின் இருப்பிடமாகிய "த்ரிகம்' எனப்படும் எலும்புகளின் சேர்க்கைப் பகுதியான (கமஙஆஞ நஅஇதஅக ஒஞஐசப) இருப்பிடத்தையும், வாத பித்த தோஷங்களின் இருப்பிடமாகிய இதயத்தினும் தாங்கிப் பிடித்திருப்பதால் அதற்கு அவலம்பகம் (தாங்குதல்) என்று பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. உணவிலிருந்து பெறக் கூடிய சத்தான பகுதியின் வழியாகத் தன்னுடைய வீர்யத்தைச் செலுத்தி இடுப்பையும், உணவின் சத்தை ரத்தமாக மாற்றியமைத்து இதயத்தையும் பாதுகாக்கிறது. தலையிலிருந்து செயல்படும் தர்ப்பகம் எனும் கப தோஷத்திற்குத் தேவையான தண்ணீரைத் தந்து மூளையில் வேண்டிய அளவு நீரின் அம்சத்தைச் சேகரித்துத் தருகிறது. கண், மூக்கு ஆகிய பகுதிகளிலும் நீரின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இந்த அவலம்பக - ஸதர்ப்பக கபங்களின் சிறப்பான வெளிப்பாடு இல்லாமற்போனால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தலையில் தோன்றக் கூடும்.
"ஆபோ வைபேஷஜம்' என்கிறது வேதம். தண்ணீர் அருமருந்தாகும். நிலம் மற்றும் நீரின் ஆதிக்க பூதங்களால் உருவாகக் கூடிய கபதோஷத்தின் சீரான வரவு உடலில் ஏற்படாமற் போனால், தலையில் அதன் தாக்கம் உணரப்பட்டு மயக்கம், காது இரைச்சல், காது கேளாமை போன்ற உபாதைகள் தோன்றக்கூடும். இனிப்பு - புளிப்பு- உப்புச் சுவை, உடலில் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவை. அவற்றைச் செரிமானம் செய்யக் கூடிய பாசக பித்தம் எனும் பசித்தீ நன்றாகச் செயல்படும்விதத்தில் இருத்தல் வேண்டும். அதனால், உங்களுடைய பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழிகளை நாம் பாச பித்தத்திலிருந்து தொடங்கி, தலையிலுள்ள தர்ப்பக கபத்தின் போஷணையைப் பெறுமளவிற்கு சிந்திக்க வேண்டியிருக்கிறது.
காலை உணவாகப் புழுங்கலரிசிக் கஞ்சி, சிறிது பசு நெய் மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்புடன் பருக, வயிற்றிலுள்ள பாசகபித்தம் அந்தக் கஞ்சியை எளிதாகச் செரிக்கச் செய்து உடல் போஷணையைக் கூட்டுவதுடன், தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்ளும். மதிய உணவாக, சூடான சாதத்துடன் பருப்பு நெய் கலந்து, தெளிவான தக்காளி ரசம், கொத்தமல்லி சட்னி அல்லது கருவேப்பிலைத் துவையல், மிளகு சீரகம் தேங்காய் சேர்த்தரைத்த புடலங்காய்க் கூட்டு, வெண்ணெய் கடைந்தெடுத்த மோர், மாங்காய் ஊறுகாய் சாப்பிட நல்லது. இரவில் கோதுமை ரவா உப்புமா அல்லது சப்பாத்தி, சப்ஜி ஆகியவற்றை வெதுவெதுப்பாகச் சாப்பிட நல்லது. பசியின் வேகம் சமச்சீரான வகையில் அமைந்துவிட்டால், சியவனபிராசம், கூஷ்மாண்ட ரசாயனம், அமிருத பிராச கிருதம், விதார்யாதிகிருதம் போன்ற மருந்துகளில் ஒன்றிரண்டை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட்டு வர, உபாதைகள் விரைவில் நீங்க வாய்ப்பிருக்கிறது.
காலை வேளையில் தலையில் க்ஷீரபலா தைலத்தைத் தடவி, அரை மணி நேரம் அது ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் தலைக்குக் குளிப்பதும் நலமே. காதில் வெளிப்புறத்தைச் சுற்றி, இந்த தைலத்தை வெதுவெதுப்பாகத் தடவிவிடுவதும் நல்லதே. மூக்கினுள் க்ஷீரபலா 101 எனும் நெய் மருந்தை லேசாக நீராவியில் உருக்கி, 2 -4 சொட்டுகளை காலையில் பல் துலக்கியபின் விட்டுக் கொள்வது நல்லது. கண்களுக்கு நயனாமிருதம் எனும் சொட்டு மருந்தை 1 -2 சொட்டுகள் வீதம் இரவில் படுக்கும் முன் விட்டுக் கொள்ளவும். தலைக்குத் தேவையான நீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மருந்துகள் இவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


