*ஒலிம்பிக் போட்டிகளை மொத்தம் 3 முறை நடத்தியுள்ளது என்ற பெருமையைப் பெற்றுள்ளது லண்டன். இதற்கு முன்பு 1908-ம் ஆண்டும், 1948-ம் ஆண்டு லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
*முதல் ஒலிம்பிக் போட்டியில் 13 நாடுகள் கலந்துகொண்டன. 2012-ம் ஆண்டில் மொத்தம் 205 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
*டென்னிஸ், டேபிள் டென்னிஸ், தடகளம், பளுதூக்குதல், ஹாக்கி, மல்யுத்தம் என மொத்தம் 26 விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளன.
*தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 302 பதக்கங்கள் லண்டனில் நடைபெறும் ஒலிப்பிக் போட்டிகளில் வழங்கப்படவுள்ளது. இதில் தடகளம் உள்பட அனைத்து விளையாட்டுகளும் அடங்கும்.
*மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் இயக்கம் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்ட்ரோக் மேண்ட்வில்
-இல் தான் தொடங்கியது. 1948-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப்போட்டிகள் முதன்முதலில் அங்குதான் நடைபெற்றன.
*ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்விதமாகவும், அவர்களை விளையாட்டுகளின் பக்கம் ஈர்க்கும்விதமாகவும் சர்வதேச அளவிலான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 19 நாடுகளைச் சேர்ந்த 12 மில்லியன் குழந்தைகளை இந்த நிகழ்ச்சி சென்றடைந்துள்ளது.
*ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஸ்டேடியம் 80,000 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதற்காக 10,000 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
*லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் புதியதாக பெண்கள் பாக்சிங் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பாக்சிங் வீராங்கனைகள் 3 விதமான போட்டிகளில் பங்கேற்கலாம்.
*1908-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக் போட்டியில் கயிறு இழுக்கும் விளையாட்டு அதுவே முதலும் கடைசியுமாக அமைந்துவிட்டது.
*1908-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாள் அணிவகுப்பில்தான் தடகள வீரர்கள் முதன்முதலாக கலந்துகொண்டனர்.
*லண்டன் 2012 ஒலிம்பிக்போட்டிக்காக சிறப்பு புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. "ஜாவ்லின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு 25,000 பயணிகள் பயணிக்கலாம். இந்த ரயில் கிங்ஸ் கிராஸ் என்ற இடத்திலிருந்து ஸ்ட்ராட்ஃபோர்டு இன்டர்நேஷனல் என்ற இடம் வரை செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


