பேல்பூரி: மைக்ரோ கதை
செல்வன் ஒருவன் துறவி ஒருவரிடம் மோட்சத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். துறவி "மோட்சம் அடைவதற்கு ஒரே வழி தானம் செய்வதுதான்' என்றார். "தானம் தானே செய்துவிடலாமே' என்று எண்ணிய செல்வன் கஞ்


செல்வன் ஒருவன் துறவி ஒருவரிடம் மோட்சத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
துறவி "மோட்சம் அடைவதற்கு ஒரே வழி தானம் செய்வதுதான்' என்றார்.
"தானம் தானே செய்துவிடலாமே' என்று எண்ணிய செல்வன் கஞ்சத்தனமாக நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தானம் செய்ய ஆரம்பித்தான்.
நீண்ட நாள் கழித்துத் தனக்கு மோட்சம் கிடைக்குமா? என்று கேட்பதற்காகத் துறவியிடம் வந்தான் செல்வன்.
அதை அறிந்த துறவி, தனது ஆசிரமத்தில் நின்ற மரத்தின் அருகே சென்று நின்று கொண்டு தன் விரல் நகத்தால் அந்த மரத்தைக் கீறிக் கொண்டிருந்தார்.
அவரை வணங்கிய செல்வன், "குருவே ஏன் இந்த மரத்தை விரல் நகத்தால் கீறிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்டான்.
"நான் இந்த மரத்தை விரல் நகத்தால் கீறியே சாய்க்கப் போகிறேன்' என்றார் துறவி.
"குருவே கோபப்படாதீர்கள். கோடரி இல்லாமல் இந்த மரத்தை எப்படி கீழே சாய்க்க முடியும்?'
"நீ ஒரு கைப்பிடி அளவு அரிசியைத் தானம் கொடுத்துவிட்டு அதனால் மோட்சத்தை அடைய முடியுமானால் நான் ஏன் என் விரல் நகத்தால் இந்த மரத்தை வீழ்த்த முடியாது' என்றார் துறவி. தலை குனிந்தான் செல்வன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...