ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஆயுர்வேத ஆன்டிபயாடிக்!
ஆங்கில மருத்துவத்தில் ஆன்டிபயாடிக் இருப்பதுபோல் ஆயுர்வேதத்தில் எளியமுறை ஆன்டிபயாடிக் என்ன? ஏ.செல்வராஜ், சென்னை-63. நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளின் பிரயோகங்களைச் செய்து, உடலில் அப்பகுத


ஆ ங்கில மருத்துவத்தில் ஆன்டிபயாடிக் இருப்பதுபோல் ஆயுர்வேதத்தில் எளியமுறை ஆன்டிபயாடிக் என்ன?
ஏ.செல்வராஜ், சென்னை-63.
நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளின் பிரயோகங்களைச் செய்து, உடலில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று மற்றும் அது வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை அழிக்க முற்படுவதே நவீன முறை சிகிச்சையின் நோக்கமாகும். இதுபோலவே ஆயுர்வேதத்திலும் நோய்களால் ஏற்படும் பாதகமான சூழ்நிலையை, நோய் எதிர்ப்புக்கு சாதகமாக மாற்றக்
கூடிய மருந்துகள் பல உள்ளன. அவற்றில் சில -
குளிர், கடுப்பு, வலி, தலை பாரம், மார்ச்சளி முதலியவற்றுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு, அதிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறைக் காய்ச்சலுக்கு பத்து கருந்துளசி இலைகளையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட, ஆரம்ப நிலையிலேயே காய்ச்சல் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். காய்ச்சல் வந்த பின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம். அதுபோல துளசி, மிளகு, பழைய வெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கொட்டைப் பாக்கு அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர, மலேரியா, யானைக்கால் காய்ச்சல் வராது. அதிக வீரியமுடைய ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்த உபாதைகளுக்கு இன்று பெருமளவு கொடுக்கப்பட்டு வருகின்றன. துளசி மற்றும் மிளகை மூலப் பொருட்களாகக் கொண்ட சீதஜ்வராரி எனும் மாத்திரைகளையும் பயன்படுத்திக் குணமடையலாம்.
ஓமத்தைத் துளசிச் சாற்றில் ஊற வைத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் 5-8 கிராம் சாப்பிட, வயிற்றில் அஜீரணத்தாலும், வாயுவாலும் ஏற்படும் பொருமல், உப்புசம், வலி, அஜீர்ண பேதி, கீரைப்பூச்சிகள், பூச்சிகளால் ஏற்படும் பேதி முதலியவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகளின் தேவையே இருக்காது. வில்வாதி குளிகை எனும் மாத்திரை மருந்து இதுபோன்ற உபாதைகளில் பயன்படும் ஒரு சிறந்த ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
பறங்கிச் சக்கை எனப்படும் மதுஸ்னுஹீ சூரணம் 2 - 3 ஸ்பூன் உருக்கிய நெய்யையும்விட்டுக் குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட, சேற்றுப் புண், சிரங்கு, சொறி, கிருமி உபாதை போன்றவை நீங்கிவிடும்.
தீப்புண் ஆறிய இடத்திலெல்லாம் சிலருக்குத் தோல் உரிந்து வெள்ளை வெளேரென்று ஆகிவிடும். 15 கிராம் வேப்பம்பட்டையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 250 மில்லி ஆனதும் வடிகட்டி, அதில் கையிட்டுச் சிலுப்பினால் ஒரு நுரை வரும். அதைப் புண் வடுக்களின் மேல், ஒருநாளில் 3 - 4 முறை தேய்த்துவர, வடுக்கள் நீங்கி, பழைய நிறம் சீக்கிரத்தில் வந்துவிடும். விற்கப்படும் மருந்துகளில், சததெüதகிருதம் எனும் மருந்தையும் பூசலாம். எளிய ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு வழங்கப்படும் ஆங்கில ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மாற்றாக, ஏலக்காய் சூரணம், வால் மிளகின் சூரணம், நெரிஞ்சில் முள்ளின் சூரணம் இவற்றைத் தனித்தனியாகவோ, சம அளவில் சேர்த்தோ, இளநீருடன் சாப்பிட, விரைவில் குணம் உண்டாகும்.
தோல் எரிச்சல், அரிப்பு, நீர்க்கசிவு, புண்ணில் சீழ்ப்பிடித்தல், ஆறாத புண், வாய்ப்புண் போன்ற உபாதைகளில் திக்தகம் அல்லது மஹாதிக்தகம் எனும் கஷாயம் ஆங்கில ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு நிகரான வேலையைச் செய்து குணப்படுத்தும்.
"கல்யாணக்ஷôரம்' என்று ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. ஒரு சிட்டிகை மருந்துடன் சிறிது நெய் குழைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல் உட்பகுதிகளில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, மூலம், குடலில் வாயு பந்து போன்று அடைத்திருத்தல், ரத்தசோகை, வயிற்றில் நீர் தங்கும் உபாதை, குடலில் கிருமி உபாதை, சிறுநீர்த்தடை, சிறுநீரகக் கற்கள், உடல்வீக்கம் , இதய உபாதைகள், சர்க்கரை உபாதை, மூச்சிரைப்பு, இருமல் போன்ற உபாதைகளைத் தீர்க்கும் ஒரு சிறந்த ஆயுர்வேத ஆன்டி பயாடிக் மருந்து கல்யாண க்ஷôரம்.
தொடை இடுக்குகளில் ஏற்படும் கறுப்பு நிறம், அரிப்பு, படை, எரிச்சல் போன்ற உபாதைகளில் நால்பாமராதி தைலம் எனும் ஆயுர்வேத ஆன்டிபயாடிக் பயன்படுத்தலாம்.
இப்படி எத்தனையோ ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்துகள் இருந்தாலும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்வதுதான் மிகவும் நல்லது.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...