சேகரிப்பு: கட்டையில் கலைவண்ணம் கண்டார்!
கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் உண்டு. அது இன்று தமிழனின் கலை ரசனைக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்து கோயில்களில் எழில் கொஞ்சும் சித்திரமாக விளங்குகிறது. ஆனால் வித்தியாசமாக விறகுக் கட்டைகளில் மறைந்திருக்கும்


கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் உண்டு. அது இன்று தமிழனின் கலை ரசனைக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்து கோயில்களில் எழில் கொஞ்சும் சித்திரமாக விளங்குகிறது. ஆனால் வித்தியாசமாக விறகுக் கட்டைகளில் மறைந்திருக்கும் உருவங்களை கண்டுபிடிக்கிறார் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் சேவுக்கடை வைத்திருக்கும் மீசைக்காரர் ராமசாமி.
நம்மை வரவேற்று அவர் கடைக்கு அருகில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கண்ணில் பார்க்கின்ற விறகு கட்டைகளில் எல்லாம் கலை நயத்தோடு பறவை மற்றும் விலங்குகள் போல் காட்சியளிப்பதை கண்டெடுத்து அலமாரியில் அழகுற அமர்த்தி உள்ளார்.
அவர் அறை முழுவதும் யானை, எலி,பாம்பு, ஆந்தை, மயில், புறா.. உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் இயற்கையின் அணிவகுப்பாக இருப்பதைப் பார்க்கையில் பரவசமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட உரு வங் களை சேக ரித்து அதை கண் ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார் இவர். ராமசாமிக்கு இந்த விநோதமான ஆர்வம் ஏற்பட்டது எப்படி என்று அவரே கூறுகிறார்.
""நான் நடத்தி வருகின்ற சேவுக்கடைக்குத் தேவைப்படுகின்ற விறகுகளை வாங்குவதற்காக கடைக்குச் சென்று வருவது உண்டு. அப்போது கண்ணில் வித்தியாசமாக பார்வையில் படுகிற கட்டைகளைச் சேகரிப்பது என் வழக்கம். அவ்வாறு சேமித்த கட்டைகளைப் பார்த்த எனது உறவினர் ஒருவர் ஒவ்வொரு கட்டையும் விலங்குகளைப் போல் இருப்பதாகக் கூறினார்.
அப்போதுதான் ஒவ்வொரு விறகு கட்டைக்குள்ளும் ஓர் உருவம் மறைந்து இருப்பதை உணர்ந்தேன். பின்னர் தேடுதலை தீவிரப்படுத்தினேன். மேலும் இது போன்ற விறகு கட்டைகளில் சாதாரணமாக ஏதாவது ஓர் உருவம் கிடைப்பதுண்டு. சில சமயங்களில் கட்டையில் தேவையற்ற பகுதிகளை அகற்றிவிட்டு அவற்றில் உள்ள உருவத்தை வெளிக்கொணர்வேன்.
கட்டையைக் கலைக் கண்ணோடு கவனித்து பார்த்தால் தான் அவற்றில் உள்ள உருவம் புலப்படும். ஆனால் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும் எளிதாகப் புலப்படவேண்டும் என்பதற்காகக் கட்டையில் சில நகாசு வேலைகளைச் செய்கிறேன்.
அதாவது மிளகு கோலிக்குண்டைப் பொருத்தி கண்போல் அமைத்தும் கால்பகுதிக்கு ஆணி மற்றும் வர்ணம் அடித்தும் உயிர் கொடுத்துள்ளேன். காட்டு விலங்குகள் மேல் உள்ள ஆர்வத்தால் நாய், வெள்ளெலி, முயல், முள்ளெலி உள்ளிட்டவைகளை வீட்டில் ஆர்வத்துடன் வளர்த்து வருகிறேன்.
மேலும் வன உயிரினச் சட்டம் வருவதற்கு முன் மயில் மற்றும் நரியையும்
வளர்த்து வந்துள்ளேன். ஆரம்பத்தில் வித்தியாசமாகப் பார்த்தவர்கள் எல்லாம் இன்று நான் வைத்திருக்கும் மரச்சிற்பங்களைப் பார்த்து வியந்து செல்கின்றனர்.
விறகு கட்டை சிற்பங்களைக் கொண்டு பள்ளிகளில் கண்காட்சி நடத்தி அதில் கிடைக்கும் நிதியை அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகிறேன். கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதுதான் நீண்டநாள் ஆசை'' என்கிறார் சேவுக்கடை மீசைக்காரர் ராமசாமி.
படங்கள்:
பி.குமாரபாண்டியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...