எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திரைக்கதிர்: சிக் ஸ்ரேயா..சிக்கு புக்கு ஸ்ரேயா!

'சிக்கு புக்கு' படத்தையடுத்து ஜீவாவின் ஜோடியாக 'ரௌத்திரம்' படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 55-வது படமாக இப்படம் உருவாகிறது. 'ராம்', 'கற்றது தமிழ்' படங்களைத் தொடர்ந்து உட

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:08 pm

ஜி. அசோக்

'சிக்கு புக்கு' படத்தையடுத்து ஜீவாவின் ஜோடியாக 'ரௌத்திரம்' படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 55-வது படமாக இப்படம் உருவாகிறது. 'ராம்', 'கற்றது தமிழ்' படங்களைத் தொடர்ந்து உடலை வருத்தி நடித்துள்ளாராம் ஜீவா. படத்தின் கேரக்டர் குறித்து ஸ்ரேயாவிடம் பேசியபோது, ''இது ஒரு ஆக்ஷன் படம். ஆக்ஷன் படத்தில் ஹீரோயினுக்கு எந்த அளவுக்கு இடம் இருக்குமோ அதே அளவில்தான் என் கேரக்டரும் வந்துள்ளது. ஜீவாவின் 'கற்றது தமிழ்' படம் பார்த்திருக்கிறேன். அதே மாதிரி ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும். 'சிக்கு புக்கு' படத்தில் நடித்து முடித்துவிட்டேன். நீண்ட இடைவெளிக்குப் பின் 'சிக்கு புக்கு' நல்ல இடத்தைப் பெற்றுத் தரும். இப்போது பல புதுமுகங்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். சினிமா எல்லோருக்கும் சாத்தியமாகி இருக்கிறது. முன்பு சினிமா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சினிமா தொழிலில் இருந்தார்கள். இப்போது அப்படியில்லை. சினிமா எல்லோரின் கைக்கும் எட்டியிருக்கிறது. இது நல்ல விஷயம். தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹிந்தியில் சில படங்களைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். அதற்கான ஹோம் ஒர்க்கில் இருப்பதால் தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் படங்களைத் தவிர்த்து விட்டேன்'' என்றார் ஸ்ரேயா.

பாலிவுட் பயணம்!

தென்னிந்தியாவிலிருந்து ரஜினி, கமல், மாதவன், மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் பாலிவுட்டுக்குச் சென்றனர். தற்போது மாதவன் பாலிவுட்டில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது 'ரத்த சரித்திரம்' படம் மூலம் பாலிவுட்டுக்குச் சென்றுள்ளார் சூர்யா. அடுத்ததாக சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜா. 'வெல்கம் டூ ஜங்கிள்' என்ற படத்துக்காக முதலில் ஹிருத்திக் ரோஷன் ஹீரோவாக்கப்பட்டார். ஹிருத்திக் இல்லாத காட்சிகள் முதல் கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் ஹிருத்திக் நீக்கப்பட்டு ராம் சரண்தேஜாவை ஹீரோவாக்கி உள்ளார் பாரக் கபீர். சம்பள பிரச்னையால் ஹிருத்திக் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கதை புதிது.. ஹீரோ புதிது!

புதுமுகம் ஏ.ஆர்.சைலேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'பகவான்'. கேரளத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உதயதாரா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக வர்ஷினி நடிக்கிறார். இயக்குநர் டி.பி.கஜேந்திரன், 'நிழல்கள்' ரவி, வையாபுரி, ஷகிலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது, ''வன்முறைக்கு வித்தியாசமான முறையில் தீர்வு சொல்லும்படியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சாதுவான இளைஞன் சமூகத்தால் ரவுடியாக்கப்பட்டு இறுதியில் இறை நிலை அடைகிறான். இடையில் நடக்கும் பிரச்னைகள், அவனுக்குள் இருக்கும் காதல், அன்பு என அனைத்தையும் கதையாக்கியுள்ளேன். ஹீரோ யுவராஜ் கேரளத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் சினிமா தயாரிப்பில் இருந்ததால் அதன் தாக்கத்தில் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். கதைக்கு ஏற்ற அர்ப்பணிப்பு செய்திருக்கிறார். சொந்த மாநிலம் கேரளம் என்றாலும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார். ஷர்மிலி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை சொல்லும் விதம் புதிதாக இருக்கும். பரவலான பாராட்டுக்களைப் பெறும் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

செய்யாறு டூ சினிமா!

'உன்னையே காதலிப்பேன்' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியிருக்கிறார் 'செய்யாறு' செல்வதுரை. ''இப் படத்தின் மூலம் சினிமாவுக்குக் காமெடி நடிகனாக அறிமுகமாகியிருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே நாடகங்கள் என்றால் எனக்கு உயிர். எந்த ஊரில் நாடகம் போட்டாலும் போய் பார்த்துவிடுவேன். அந்த ஆர்வமே பின்னாளில் என்னை நாடக நடிகனாக மாற்றிவிட்டது. இதுவரை 60-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து விட்டேன். முதன் முறையாக 'உன்னையே காதலிப்பேன்' படம் மூலம் அறிமுகமாகியிருக்கிறேன். படப்பிடிப்புக்காக செய்யாறு பகுதிகளில் லோகேஷன் பார்க்க வந்த 'உன்னையே காதலிப்பேன்' படத் தயாரிப்பாளரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டேன். நாடக நடிகர் என்று சொன்னதும் உடனே வாய்ப்பு கொடுத்தார். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. 'இந்தியா', 'சூரத்தேங்காய்', 'வர்மம்', 'இத்தனை நாளாய் எங்கிருந்தாய்' ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். செந்தில் சார்தான் என் ரோல் மாடல். அவரைப் போல் நடித்து பெயர் வாங்க வேண்டும்'' என்றார் 'செய்யாறு' செல்வதுரை.

பிரியாமணியின் பிரச்னைகள்!

டோலிவுட் படங்களில் பிகினி, உதட்டோடு உதடு முத்தம் என படு கவர்ச்சியான காட்சிகளுக்கு தாராளம் காட்டுகிறார் பிரியாமணி. பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் சுமந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக விமலாராமனை ஒப்பந்தம் செய்ததும், தனக்கு தெரியாமல் எப்படி விமலாராமனை ஒப்பந்தம் செய்யலாம் என கோபம் காட்டி படப்பிடிப்பை தவிர்த்தார். இயக்குநர் சிபிஸ்விஸ்தாவின் சமரச முயற்சிக்குப் பிறகு இப்போது ஆர்வமாக ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பிரியாமணி - சுமந்த் பங்கேற்கும் முத்தக் காட்சி படமாக்கப்பட்டது. பெரும் பகுதி ஷூட்டிங் முடிந்த நிலையில் சிபிஸ்விஸ்தா நீக்கப்பட்டுள்ளாராம். தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவிடம் இவருக்கு ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணமாம். இப்போது ஆதித்யா என்பவர் இயக்குநராகியுள்ளார். சிபிஸ்விஸ்தா நீக்கப்பட்டுள்ளதால் சுமந்த் - பிரியாமணியின் முத்தக் காட்சி இருக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

நீச்சல் உடையில் லேகா பாய்ச்சல்!

'ஜெயம் கொண்டான்' படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் லேகா வாஷிங்டன் தற்போது 'வ- குவாட்டர் கட்டிங்' படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ''ஹிந்தியில் 'பீட்டர் கயா கம்úஸ'தான் என் முதல் படம். ஆனால் அதில் நடிப்பதற்கு முன் 'பவர்' படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். உடல் அழகைக் கூட்டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்கு காரணம் என் உடற்கட்டு கவர்ச்சிக்கு ஏற்றால் போல் இல்லை என்ற எண்ணம்தான். 'பீட்டர் கயா கம்úஸ' படத்தில் முதல் காட்சியே நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்றார்கள். அதைக் கேட்டதும் அதிர்ந்து போனேன். நீச்சல் உடை எனக்கு பொருத்தமாக இருக்காது என்றேன். ஆனால் பிகினி காட்சி இதில் முக்கியம் என்பதால் ஒப்புக் கொண்டேன். ஆனால் அந்தக் காட்சியில் நடிக்க 3 மாதம் அவகாசம் கேட்டேன். அந்த 3 மாதமும் தீவிர உடற்பயிற்சியில் இறங்கினேன். பிகினி உடை அணிவதற்கான ஸேப்பில் உடல் வந்த பின்தான் அந்தக் காட்சியில் நடித்தேன்'' என்றார் லேகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.