/

ஜன்னல்: ஹிந்​திக்​குப் போகும் தமிழ்ப் படைப்​பு​கள்!

வேற் று மை யில் ஒற் றுமை என் பது தான் இந் தி யா வின் தாரக மந் தி ரம். ஒவ் வொரு மாநி லத்தி லும் வெவ் வே றான மொழி பேசப் பட் டா லும், பண் பாடு, கலா சா ரம் ஆகி ய வற் றில் ஏதா வது ஒரு வ கை யில் நம் மி டம்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 2:14 pm

ஜெபலின்ஜான்

வே ற் று மை யில் ஒற் றுமை என் பது தான் இந் தி யா வின் தாரக மந் தி ரம். ஒவ் வொரு மாநி லத்தி லும் வெவ் வே றான மொழி பேசப் பட் டா லும், பண் பாடு, கலா சா ரம் ஆகி ய வற் றில் ஏதா வது ஒரு வ கை யில் நம் மி டம் ஒற் றுமை உண்டு. ஜாதி, இன, மொழி யால் பிரிந்து நிற் கும் மக் களை இணைக் கும் பால மாக இருக் கின் றன இலக் கிய படைப் பு கள்.

பிற மொழி க ளில் இருக் கும் இலக் கிய படைப் பு கள், அதன் சாரம் குறை யா மல் அப் ப டியே ஹிந்தி மொழி யில் நேர டி யாக மொழி பெ யர்க் கப் ப டு கின் றன. ஆனால், தமிழ் இலக் கியப் படைப் பு களோ அந் நிய மொழி யான ஆங் கி லத் தில் மொழி பெ யர்க் கப் பட்டு பின் னர் ஹிந் திக்கு மாற் றப் ப டு கின் றன. இத னால் படைப் பா ளி யின் முழு மை யான சிந் தனை, ஹிந்தி வாச கர் களை சென் ற டை வ தில் சிக் கல் இருந்து வரு கி றது. படைப் பின் சாரம் குறைந்து போகி றது.

தமிழ் இலக் கி யப் படைப் பு க ளின் உயி ரோட் டம் குன் றா மல், அதே சுவை யு டன் ஹிந் திக்கு, தமிழ் படைப் பு களை அறி மு கப் ப டுத்தி வரு கி றார் கோவையைச் சேர்ந்த முனை வர் வெ.பத் மா வதி. தமி ழில் முது கலை பட் டம் படித் துள்ள இவர், ஹிந் தி யில் முனை வர் பட் ட மும் பெற் றி ருக் கி றார். எழு ப துக்குப் பிறகு வெளி வந்த ஹிந்தி மற் றும் தமிழ் சிறு க தை க ளில் பெண் ணி யம் என் பது தான் இவ ரது முனை வர் பட்ட ஆய் வின் தலைப்பு.

இரு ப தாம் நூற் றாண் டின் இரு ப து க ளில் தொடங்கி , இரண் டா யி ரம் வரை வெளி வந்த தமிழ்ச் சிறு கதை க ளில் இருந்து திற னாய்வு அடிப் ப டை யில் தேர்ந் தெ டுக் கப் பட்ட நூறு சிறு க தை களை 5 தொகுப் பு க ளாக ஹிந் தி யில் மொழி பெ யர்த் துள் ளார் பத் மா வதி. இதற் காக இவர் எடுத் துக் கொண் டது 8 ஆண் டு கள். மொழி பெ யர்ப்பு செய் யும் போது கணி னி யில் பதிவு செய் தல், பிழை திருத் தம், அட் டைப் பட வடி வ மைப்பு என அத் தனை பணி க ளை யும் தனி ந ப ராக அவரே செய்து சாத னை ப டைத் துள் ளார் இவர்.

பார தி யார், வ.வே.சு.அய் யர், அ.மாத வையா தொடங்கி இரண் டா யி ரம் ஆண் டின் விழி.பா.இத ய வேந் தன், லெட் சு ம ணப் பெ ரு மாள், ர.நட ரா சன் வரை யி லும் மூன்று தலை மு றை களை சார்ந்த நூறு சிறு கதை எழுத் தா ளர் களை அவர் க ளு டைய படைப் பு களை ஹிந் தி யில் மொழி பெ யர்த் து ஹிந்தி உல குக்கு அறி மு கப் ப டுத் தி யுள் ளார் பத் மா வதி. இச் சி று க தை களைத் தேர்வு செய் து கொ டுத் த வர் சென்னை பல் க லைக் க ழ கத் தமிழ்த் துறை தலை வர் முனை வர் வீ.அரசு.

ஓர் இலக் கி யப் படைப்பு இணைப்பு மொழி யான ஹிந் தி யில் மொழி யாக் கம் செய் யப் பட் டு விட் டால், அதைப் பிற இந் திய மொழி க ளுக்கு எளி தாக கொண்டு செல்ல இய லும். பழக்க வழக் கங் கள், பண் டி கை கள், திரு வி ழாக் கள், வழி பாடு, நாட் டார் கதை, பழ மொ ழி கள், நம் பிக்கை, விலங் கு கள் போன்ற பண் பாட் டுக் கூறு க ளில் இந் திய மொழி க ளுக்கு இடையே பர வ லான ஒற் றுமை இருந்து வரு வ தால் பரஸ் பர பரி மாற் றம் சேதா ர மின் றிச் செம்மை யாக நடை பெற இய லும்.

சிறு க தை க ளின் பொது மைச் சிறப் பு க ளின் அடிப் ப டை யில் ஐந்து கால கட் டங் க ளாக பகுத்து, ஒவ் வொரு கால கட் டத் தின் செல் நெ றி க ளுக்கு எடுத் துக் காட் டாக விளங் கும் 100 கதா சி ரி யர் க ளின் படைப் பு களை 5 தொகுப் பு க ளாக பத் மா வதி வெளி யிட் டுள் ளார். சென் னை யில் 2007-ம் ஆண் டில் நடை பெற்ற நிகழ்ச் சி யில் இச் சிறு கதை தொகுப் பு களை, அன் றைய தமிழ் வளர்ச் சித் துறை இயக் கு நர் முனை வர் ம.ராசேந் தி ரன் வெளி யிட் டார்.

ஜன ரஞ் ச கப் போக்கு மேலோங்கி நிற் கும் சிறு க தை களைப் படைத்த புது மைப் பித் தன் சி.சு.செல் லப்பா, ந.பிச் ச மூர்த்தி, வ.ரா. போன் ற வர் க ளின் சிறு க தை கள் முதல் தொ குப் பில் மின் னு கின் றன. பாத் தி ரப் ப டைப் பி லும், கதை மாந் தர் க ளின் மனப் பாங் கு களைச் சித் தி ரிப் ப தி லும் புதிய உத் தி களைக் கையாண்ட தி.ஜான கி ரா மன், ஜெய காந் தன், கி.ராஜ நா ரா ய ணன், கிருஷ் ணன் நம்பி, சுந் தர ராம சாமி ஆகி யோ ரின் படைப் பு கள் 2-வது தொகுப்பை அலங் க ரிக் கின் றன.

நன வோடை உத் தி க ளு டன், பெண் ணி யக் குரலைப் பதிவு செய்த எழுத் தா ளர் கள் நாஞ் சில் நாடன், வண்ண நில வன், மேலாண்மை பொன் னு சாமி போன் றோ ரின் படைப் பு கள் மூன் றா வது தொகுப் புக்குப் பெருமை சேர்க் கின் றன. பெண் ணி யத் து டன், தலித் திய கதை க ளுக்கு முன் னு ரிமை கொடுத்து தனித் தன் மை யு டன் எழு திய படைப் பா ளி கள் சோ.தரு மன், திலீப் கு மார், தமிழ்ச் செல் வன், களந்தை பீர் மு க மது, காவே ரி கு மார் உள் ளிட் டோ ரின் சிறு கதை படைப் பு கள் 4-வது தொகுப் பில் பளிச் சி டு கின் றன. ஐந் தா வது தொகுப் பில் ம.ராசேந் தி ரன், தோப் பில் முக மது மீரான், தம யந்தி, இரா.முரு கன், பவா.செல் ல துரை, உமா ம கேஸ் வரி ஆகி யோ ரின் படைப் பு கள் முக் கி ய மா னவை.

ஒரு நிறு வ னம் செய்ய வேண் டிய பணியைத்  தனி யொ ரு வ ராக மொழி பெ யர்த்து, தொகுத்து வெளி யிட்டு பத் மா வதி சாதனை படைத் தா லும் அதன் பின் பு தான் ஒளிந் தி ருக் கி றது, ஒரு சோதனை.

ஒரு படைப் பா ளி யாக அவர் மொழி பெ யர்த் து விட் டார். ஆனால், அதை வர்த் த கம் செய் வது தான் அவ ருக்கு மிகப் பெ ரிய சோத னை யாக இருந்து வரு கி றது. இது போன்ற தமிழ் இலக் கிய பொக் கி ஷங் களை, ஹிந் தி யில் மொழி யாக் கும் செய் யும் போது அதை சந் தைப் ப டுத்த அர சுத் துறை நிறு வ னங் கள் உத வ வில் லையே என் பது தான் பத் மா வ தி யின் ஏக் கம்.

இருப் பி னும் தனது முயற் சி யில் அவர் பின் வாங் க வில்லை. ஹிந் தி யில் இருக் கும் சிறந்த எழுத் தா ளர் க ளின் படைப் பு களைத் தமி ழுக்கு அறி மு கம் செய் ய வும்  திட் ட மிட் டுள் ளார் பத் மா வதி. மகா கவி பார தி யா ரின் 54 கவி தை களை, ஹிந் தி யில் மொழிப் பெ யர்த்து அச் சுக்குத் தயார் ப டுத் தி வைத் துள் ளார்.

""சிறந்த தமிழ் எழுத் தா ளர் கள் 100 பேரின் படைப் பு களை, ஹிந் திக்கு அறி மு கப் ப டுத்தி தாய் மொ ழி யான தமி ழுக்கு செய்த தொண்டு மன துக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக் கி றது'' எனப் பூரிக்கிறார்  பத் மா வதி.

கோவை யில் நடக் கும் உல கத் தமிழ் செம் மொழி மாநாட் டில் தமிழ் மற் றும் ஹிந்தி மார்க் சீய புதி னங் க ளில் முக் கிய பெண் எழுத் தா ளர் கள் என்ற தலைப் பில் ஆய் வுக் கட் டுரை சமர்ப் பிக்க இருக் கி றார் பத் மா வதி.

பத் மா வதி போன்ற பலர் தோன் றி னால், தமிழ் இலக் கி யப் புதை யல் கள் பல ஹிந்தி உல குக்கு எளி தில் அறி மு கப் ப டுத் தப் ப டும். தொடர்ந்து பிற இந் திய மொழி க ளுக் கும் சென் ற டை யும். செம் மொழி தமிழ் மணம், தமி ழ கம் மட் டு மன்றி நாடு முழு வ தும் வீசும்.

படங் கள்: வே.சக்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.