திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஹீரோவாகும் வையாபுரி!

வடிவேலு, கருணாஸ் ஆகியோரைத் தொடர்ந்து வையாபுரியும் ஹீரோ ஆகிறார். இந்தப் படத்தை பி.வாசுவின் உதவியாளர் தேவேந்திரன் இயக்குகிறார். ""ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நடைபெறும் நகைச்சுவையான சம்பவங்களைப் பற்றிய

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:44 pm

மனோஜ் கிருஷ்ணா

வடிவேலு, கருணாஸ் ஆகியோரைத் தொடர்ந்து வையாபுரியும் ஹீரோ ஆகிறார். இந்தப் படத்தை பி.வாசுவின் உதவியாளர் தேவேந்திரன் இயக்குகிறார்.

""ஒரு சாமானியனின் வாழ்க்கையில் நடைபெறும் நகைச்சுவையான சம்பவங்களைப் பற்றிய கதை என்பதால்தான் ஹீரோவாக நடிக்கச் சம்மதித்தேன். இதில் காமெடி, சண்டைக் காட்சி, டூயட் போன்றவை யதார்த்தமாகவே இருக்கும். பஞ்ச் டயலாக், ஹீரோ பில்ட் அப் காட்சிகளெல்லாம் இல்லை'' என்று கூறும் வையாபுரி "கல்யாணமாம் கல்யாணமாம்'  என்ற மலையாளப் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்து வருகிறார். மணிரத்னத்தின் "ராவணா' படத்தில் ப்ரியாமணியின் தோழியாக அரவானி வேடத்தில் நடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு "இளையராகம்' படத்தில் அறிமுகமான வையாபுரி தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.